(39) அந்தக் காலத்தில் ஹீரோயினை எப்படி தேர்ந்தெடுத்தார்?
அந்தக் காலத்து நடிகைகளுக்கு நடிப்பின் மீது இருந்த ஈடுபாடு, அக்கறை போன்றவை இன்றைய நட்சத்திரங்களுக்கு கொஞ்சம் பத்தாம்பசலித்தனமாகவே தோன்றும். இன்றைய நடிகைகளின் போக்கைப் பார்த்து அன்றைய நடிகைகளில் சிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு .
நடிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதில் பல வேறுபாடுகள், கண்ணோட்டங்கள், மாறுதல்கள் ஏன் ஏற்படுகின்றன?
இந்தக் கேள்விக்கு விடை காணுவதற்காக என்னோடு (சௌகார்ஜானகி) கலந்துரையாட வளரும் நடிகைகளான சுகாசினி, சுமலதா இருவரையும் அழைத்துக் கொண்டு. செனடாப் ஆஃப் ரோட்டில் உள்ள எனது இல்லத்திற்கு வந்தார் பி.ஆர்.ஓ. நெல்லை சுந்தர்ராஜன். என் இல்லத்திற்கு வந்தவர்களை வரவேற்று, எனது மகள் யக்ஞப்பிரபாவை அறிமுகம் செய்துவைத்தேன்.
"சுமலதா, நீயும் நானும் "சமாஜானிக்கு சவால்' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறோம் உனக்கு நினைவிருக்கிறதா?'' என்று நான் பேச்சை தொடங்கியதும்...
"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்ன சுமலதா, "நீங்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக் கிறீர்கள். பொருத்தமான வேடமாக அமைந் தால் இன்றும்கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. இத்தனை வருடங்களாக அந்தப் பாப்புலா ரிட்டியை ரசிகர்கள் மத்தியில் எப்படி நிரந்தரமாக தக்கவைத்துக்கொண்டீர்கள்?'' என்று உற்சாகத்துடன் கேட்டார் சுமலதா.
புன்னகையுடன் என் பதிலை ஆரம்பித் தேன். "சினிமா நம் நாட்டில் புதிதாக வந்த போதும், இப்போதுள்ள நிலைக்கும் எவ்வளவோ வேறுபாடு? அந்த நாட்களில் ஒரு நடிகையைத் தேர்ந்தெடுக்க கவர்ச்சியைவிட நடிப்புத் திறமை, மொழி உச்சரிப்புத் திறன் இரண்டுக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. ரேடியோ நாடகங்களில் நான் பங்க
(39) அந்தக் காலத்தில் ஹீரோயினை எப்படி தேர்ந்தெடுத்தார்?
அந்தக் காலத்து நடிகைகளுக்கு நடிப்பின் மீது இருந்த ஈடுபாடு, அக்கறை போன்றவை இன்றைய நட்சத்திரங்களுக்கு கொஞ்சம் பத்தாம்பசலித்தனமாகவே தோன்றும். இன்றைய நடிகைகளின் போக்கைப் பார்த்து அன்றைய நடிகைகளில் சிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு .
நடிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதில் பல வேறுபாடுகள், கண்ணோட்டங்கள், மாறுதல்கள் ஏன் ஏற்படுகின்றன?
இந்தக் கேள்விக்கு விடை காணுவதற்காக என்னோடு (சௌகார்ஜானகி) கலந்துரையாட வளரும் நடிகைகளான சுகாசினி, சுமலதா இருவரையும் அழைத்துக் கொண்டு. செனடாப் ஆஃப் ரோட்டில் உள்ள எனது இல்லத்திற்கு வந்தார் பி.ஆர்.ஓ. நெல்லை சுந்தர்ராஜன். என் இல்லத்திற்கு வந்தவர்களை வரவேற்று, எனது மகள் யக்ஞப்பிரபாவை அறிமுகம் செய்துவைத்தேன்.
"சுமலதா, நீயும் நானும் "சமாஜானிக்கு சவால்' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறோம் உனக்கு நினைவிருக்கிறதா?'' என்று நான் பேச்சை தொடங்கியதும்...
"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்ன சுமலதா, "நீங்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக் கிறீர்கள். பொருத்தமான வேடமாக அமைந் தால் இன்றும்கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. இத்தனை வருடங்களாக அந்தப் பாப்புலா ரிட்டியை ரசிகர்கள் மத்தியில் எப்படி நிரந்தரமாக தக்கவைத்துக்கொண்டீர்கள்?'' என்று உற்சாகத்துடன் கேட்டார் சுமலதா.
புன்னகையுடன் என் பதிலை ஆரம்பித் தேன். "சினிமா நம் நாட்டில் புதிதாக வந்த போதும், இப்போதுள்ள நிலைக்கும் எவ்வளவோ வேறுபாடு? அந்த நாட்களில் ஒரு நடிகையைத் தேர்ந்தெடுக்க கவர்ச்சியைவிட நடிப்புத் திறமை, மொழி உச்சரிப்புத் திறன் இரண்டுக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. ரேடியோ நாடகங்களில் நான் பங்கெடுத்து நடித்த அனுபவம் திரைப்படங்களில் எனக்குத் தந்த வசனத்தை ரொம்ப சுத்தமாக பேச உதவியாக இருந்தது. நடிப்பு விஷயத்திற்கு வந்தோம் என்றால், எனது முதல்பட மான சௌகாரில் திரு. எல்.வி.பிரசாத் போன்ற திறமையான இயக்குனரிடம் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லுவேன். பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த தருணங்களில், என் நடிப்பின் குறைகளை ஆராய்ந்து பார்த்து, என் நடிப்பு இயற்கையாக அமைய ரொம்பவும் கவனம் செலுத்தினேன். அவர்கள் நடிப்பை மிகவும் கவனித்துப் பார்ப்பேன். அது மட்டுமல்ல... அந்தக் காலத்தில் டைரக்டருக்கும் நடிகர், நடிகைகளுக்கும் இடையே இருந்த தோழமை, குருவுக்கும் சீடனுக்கும் இருந்த நிலைக்கு சமமானது. அதனால் நமது நடிப்பில் ஏதாவது தவறு நேர்ந்து விடுமோ, குறை இருக் குமோ என்ற பயம், அக்கறை எங்கள் மனதில் இருக்கும். இதனால் ஒவ் வொரு கேரக்டரையும் முழுமையாக புரிந்துகொண்டு. நடிக்க முயற்சிப் போம். அப்படிப்பட்ட பலமான அஸ்திவாரத் துடன் எனது திரையுலக வாழ்க்கை துவங்கியது.
இரண்டாவது விஷயம் எனது உடற்கட்டு. நான் எப்படி என் உடம்பைப் பாதுகாத்து வரு கிறேன்? இப்படி கேட்டால், அதுக்காக தனிப்பட்ட முறையில் நான் எந்தவித கவனமும் செலுத்துவ தில்லை என்றுதான் சொல்வேன். மனம் ஆரோக் கியமாக இருக்கும்வரை, உடல் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நடிப்பு, அது சம்பந்தமான சூழ்நிலை இவையெல்லாம் நான் கேமரா முன்பு நிற்கும்வரைதான். நான் வீடு வந்த தும் அந்த உலகத்தை அப்படியே மறந்துவிடுவேன். ஒரு இல்லத்தரசியாகி என் கடமைகளில் முழு மையாகக் கவனம்செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/sowcarjanaki1-2026-02-27-10-40-08.jpg)
எடுத்த முடிவுகள், அவற்றால் ஏற்பட்ட வெற்றி -தோல்விகள் எல்லாவற்றுக்கும் நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கை யுடன் எதிர்நீச்சல் போட்டு போராடும் மனப்பக்கு வத்தை பெற்றுக் கொண்டவள் நான். இதற்காக மற்றவர்களை காரணம் காட்டி, எனக்குள் வேதனைப்பட்டு புழுங்கும் வழக்கம் என்றும் என்னிடம் இருந்ததில்லை. கவலை என்கின்ற வார்த்தையை முடிந்த அளவுக்கு தொலைவில் தூக்கி வைத்துவிட்டு, மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நான் பழக்கப்பட்டவள். அகம்பாவம் என்பது மனிதனின் அழிவுக்குத்தான் வழிவகுக்கும், அதனால் அந்த எண்ணம் என்னிடம் நெருங்கி வராமல் பார்த்துக் கொள்கிறேன்.
திரைப்படத் துறையில் நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதில் முழு ஈடுபாடு (சின்சியாரிட்டி) ரொம்பவும் தேவை. அதே மாதிரி சில பழக்கவழக்கங்களையும், சில கட்டுப்பாடு களையும் ஏற்படுத்திக்கொண்டு அதன்படி நடக்கவேண்டும்... இது முக்கியம்.
ஒருசமயம் டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். நான் நடிக்கவேண்டிய கேரக் டருக்கு பத்துநாட்கள் கால்ஷீட் தேவைப்படும் என்று சொல்லி, தேவையான பணமும் கொடுத்து விட்டார்கள். இதற்குப் பிறகு அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்தார்கள். என் கேரக்டரின் முக்கியத்துவம் குறையவில்லை என்றாலும் இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங். இரண்டுநாள் ஷூட் டிங்குடன் என் வேலை முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கோ அதிகம் பணம் வாங்கிவிட்டோமோ என்று மனம் உறுத்தி யது. பத்து நாட்கள் படப்பிடிப்புக்குச் சென்று நடிக்கவில்லை... இரண்டு நாட்கள் மட்டும்தான் நடித்தேன். எட்டு நாட்களுக்கான சம்பளம் கூடுதலாக வாங்கிவிட்டது போன்ற உறுத்தல் எனக்கு. மறுநாள் டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களைச் சந்தித்து நான் அதிகமாக வாங்கி யிருந்ததாக நினைத்த பணத்தை திருப்பிக் கொடுத் தேன். அவர் அப்படியே பிரமித்துப் போய்விட் டார். அவர் வாங்கிக்கொள்ள மறுத்து, "வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் நான் அடக்கமாக மறுத்து, அவர் பணத்தைக் கொடுத்து விட்டேன். என்னுடைய இந்த செயல் சிலருக்கு பத்தாம்பசலித்தனமாக தெரியலாம். ஆனால் நான் செய்தது சரி என்று என் மனதிற்குப்பட்டது அவ்வளவுதான் என்றேன். இதை ஆச்சரியத்துட னும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டார்கள் சுகாசினி. சுமலதா இருவரும்.
"தற்போதைய திரையுலக சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நான் சுகாசினியிடம் கேட்டேன்.
சோபாவின் முன்பக்கம் உட்கார்ந்துகொண்டு சுகாசினி பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"டெக்னிக்கலா சில வசதிகள் (Additional facilities) இருக்கிறதாலே சினிமா மீடியா இப்போ ரொம்ப வளர்ச்சியடைந்துள்ளது. வசனத்தைவிட எக்ஸ்பிரஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கிறார்கள் இன்றைய இயக்குனர்கள். ஹீரோயின் என்றால் அழகின் உருவமாக அவள் இருக்கணும் என்ற நிலை இன்று இல்லை. இந்தச் சூழ்நிலை என் போன்றவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவே இருக்கிறது. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்து பெறணும் என்ற ஆசை எனக்கில்லை. ஏனென்றால் என்னுடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, நான் போடுகிற கட்டுப்பாடுகளுக்குப் பொருந்துகிற மாதிரி அதிக படங்கள் எனக்கு வர வாய்ப்பில்லை. குறைந்த படங்களானாலும் என் போக்குக்கு சரிப்பட்டுவரும் படங்களில் மட்டுமே நான் நடிப்பேன். ஹீரோ வுடன் பூந்தோட்டத்தில், கடற்கரையில் பாடி, ஆடி குதிக்கிறது, தேவையில்லாமல் "ஓ' என்று அழுவது, ஹீரோவுக்கு, ஹீரோயினைப் பிடிக்கலைன்னா அந்த ஹீரோவை கவருவதற்காக படாதபாடுபடு வது போன்ற நிகழ்ச்சிகளை கற்பனை செய்து பார்க்கக் கூட எனக்கு ரொம்ப வும் கஷ்டமாக இருக்கிறது. அதுபோன்ற படங்களில் நான் எப்படி நடிக்க முடியும்?'' என்று சுகாசினி சொல்ல...
"என்னைப் பொறுத்தவரை'' என்று சுமலதா குறுக்கே நுழைந்து பேச ஆரம்பித்தார். "இன்றைய இயக்குநர் களும், தயாரிப்பாளர்களும் கவர்ச்சிக்குத்தான் அதிக முக்கி யத்துவம் கொடுக்கிறார்கள். கதாநாயகனுக்குள்ள முக்கியத்துவம் கதா நாயகிக்கு இல்லை. ஹீரோயின் ஒரு பொம்மை மாதிரி வந்து டூயட் பாடறது, ஆடுறது, அழுறது போன்றவை தவிர வேறெந்த முக்கியத்துவமும் இருக்கிறதா தெரியவில்லை. அந்தப் படங்கள் வெற்றியடைந்தால் தொடர்ந்து அது போன்ற வேடங்களே கிடைக்கும். இது மட்டுமல்ல, இவர்கள் பழசா ஆயிட்டாங்கன்னு நினைத்து, வேறு புது முகங்களைத் தேட ஆரம்பிச்சுடுறாங்க. கொஞ்சம் புதுமையான முறையில் தமிழ்ப்படங்களை உரு வாக்குகிறார்கள். மலையாளப் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... நேச்சுரலாக இருப்பதற்கும், நேட்டிவிட்டிக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் நட்சத்திரங்களால் மட்டும் படங்கள் வெற்றியடைவதில்லை என்று நிரூபித்திருக்கிறார் கள். வளரும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளைக் கொடுத்து ஊக்குவிப்பது என்போன்ற கலைஞர் களுக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்று சுமலதா தன் கருத்தை பதிவு செய்ய, அடுத்து ஹீரோ டூயட் பாடி ஆடுவது குறித்து சொன்ன சுகாசினிக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.
"நடிப்பு என்பதே நீங்கள், நீங்களாக இல்லாத ஒரு கேரக்டரில் நடித்து ஜஸ்டிஃபை பண்றது. அப்படியிருக்கும்போது கேரக்டரை தேர்ந் தெடுப்பதில் நீங்களாகவே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வது எப்படி சரியானது என்று நீங்க நினைக்கிறீங்க?'' என்று கேட்டேன்.
"ஆனாலும் நான் என்ன செய்வது? எனக்குப் புரியாத, பிடிக்காத பாத்திரங்களில் என் மனதை ஈடுபடுத்தி நடிக்க முடிவதில்லை. அதனால்தான் என் போக்கைப் புரிந்துகொண்டு. நான் கேட்கும் சந்தேகங்களை விளக்கிக்கொண்டு. என் வாதங்களை பொறுமையாக புரிந்துகொண்ட இயக்குனர்கள் மகேந்திரன், பாரதி ராஜா,. பாரதி வாசு போன்றவர்களின் படங்களில் நடித்து வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு, அடுத்த கேள்வியை கேட் டார் சுஹாசினி.
கொஞ்சம் நீண்ட... கொஞ்சம் சிக்கலான கேள்விதான். என்ன கேள்வி, அதற்கு என் பதில் என்ன?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us