(34) ரஜினிக்கும் எனக்கும்   ஒரு ஒற்றுமை உண்டு!


வள் ஒரு கோயில் தர்மகர்த்தாவின் மகள், ஆனால் அவள் கோயிலுக்குப் போனது கிடையாது. படித்தவள், பகுத்தறிவுக்கேற்ப வாழ்கிறவள்.  படிக்காதவன், ஆனாலும் பண்புள்ளவன் என்பதற்காக ஒருவனை மணந்துகொண்டாள்.

Advertisment

"எனக்கு எல்லாமே முருகன்தான்' என்கிறான் கணவன்.

"எல்லாமே எனக்கு நீங்கள்தான்' என்கிறாள் மனைவி.

"முருகனை வழிபடு' என்கிறான் கணவன். "உன்னை வழிபடுகிறேன்' என்கிறாள் மனைவி.

Advertisment

"நான் அடியாருக்கு அடியேன்' என்கிறான் கணவன்.

"நான் உனக்கு  அடியவள்' என்கிறாள் மனைவி.

"நீ முருகனை ஏற்றுத்தான் ஆக வேண்டும், அவன்தான் என்னை வாழவைத்தவன்' என்கிறான் கணவன் 

"உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன், நீ என்னை வாழ வை!'

"உழைப்பினாலும் உண்மையாலும் நீ உயர்ந்தாய்... என் உணர்ச்சியை அடிமைப்படுத்தாதே' என்கிறாள் மனைவி.

Advertisment

பிணக்கினால் பிரிந்த அவர்களை, அடியவரின் குரல் ஒன்று சேர்க்கிறது. அவள் வழியில் சென்று, தன் வழிக்கு கொண்டுவர அவன் முடிவுசெய்கிறான். சேர்ந்து வாழ்கிறார்கள்.  அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது ஊனமாக. "என்னை தண்டித்த கடவுள் உனக்காக  குழந்தையை நல்லபடி படைக்காதது ஏன்?' அவள் குரல் ஒலிக்கிறது, அவன் குரல் ஒடுங்குகிறது.

டாக்டர்கள் கடவுள் மேல் பாரத்தை போடும்போது, அவளது கல்வியறிவு தடுமாறுகிறது. குழந்தைக்காக கோயிலுக்கு போக சம்மதிக்கின்றாள். மனிதனால் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்த குழந்தையை மயில் காப்பாற்றியதை கண்கூடாகக் கண்ட போது அந்த மயிலின் மீது அமர்ந்த முருகன், குழந்தையின் ஊனம் போக்குவான் என்ற நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.   சோதனை யில் அவள் புடமிடப் பட்ட தங்கமானாள். கடவுளை நம்பி அவள் கைவிடப் படவில்லை. பக்தியை பரப்பவென்றே உருவான இந்தக் கதை "துணைவன்' படத்தில் இடம்பெற்றது. 

கொண்டவனிடம் போட்டியில் தோற் றாலும், தெய்வத்தைக் கண்டவள் அவள். அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தவள் நான். "துணைவன் படத்தில் சௌகார் ஜானகி தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் முழுமையை கண்டு பூரிப்படைகிறோம் அத்தனை செழுமை யான நடிப்பு'' என்று 'பேசும் படம்'  பாராட் டியது. 

அந்தப் படம் வெளியானபோது  சிலர், "நீங்கள் நாத்திகரா?' என்று கேட்டதும் உண்டு. 

சினிமாவில் எனக்குரிய இடம் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்குக் காரணம்... திரையுலகின் "கணக்கு' எனக்கு தெரியாமல் போனதுதான். 

முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண் டிருக்கும்போதே இரண்டாம் நாயகியாக நடித்தது. எனக்காக யாரும் லாபி செய்ததில்லை. நான் இரண்டு முறைதான் சினிமா வாய்ப்புக் கேட்டு  தேடிப்போயிருக்கிறேன். முதல்முறை "சௌகார்' படத்தில் நடிப்பதற்காக. இரண்டாவது முறை "ஒளி விளக்கு' படத்திற்காக எம்ஜிஆருக்கு போன் செய்து கேட்டது. மற்றபடி நான் வாய்ப்பு கேட்டுப் போனதில்லை .

sowcarpet1

கடந்த நாற்பது வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற ரஜினிகாந்த், எனக்கு மகன் போன்றவர்.  

நான் அவருடன் ஐந்து படங்களில் நடித்தேன்.  1) கை கொடுக்கும் கை, 2) சிவா,  3) தீ, 4) எல்லாம் உன்  கைராசி, 5) தில்லு முல்லு.

இந்த ஐந்து படத்திலும் அவருக்கு நான் தாயாகத்தான் நடித்திருக்கின்றேன். அவரும் எனக்கு ஒரு மகனுக்குரிய அந்தஸ்தோடும், மரி யாதையோடும்தான் என்னிடம் பேசுவார், பழகுவார். பணிவாக நடந்துகொள்வார். 

"உங்கள் குருநாதர், இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் முதல்பட ஹீரோயின் நான்தான்'' என்று ஒருமுறை சொன்னபோது, "ஆமா தெரியும். பாலசந்தர் சார் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கார். உங்க பட்டு மாமி கேரக்டர் பற்றி சொல்லி பாராட்டு வார். 

நீங்க பிசி யான ஒரு ஹீரோ யினாக இருக் கும்போதே கே.பி. சார் நாட கங்களில் வந்து நடிப்பீர்கள். நாடகத்தில் நடிக்க உங்க ளுக்கிருந்த ஆர்வத்தைப் பற்றி சொல்லி யிருக்கிறார்'' என்று அவர் சொன்னபோது மிகவும் மகிழ்ந்தேன். என்னுடைய பிறந்தநாளும், ரஜினி பிறந்தநாளும் ஒரே (டிசம்பர் 12) நாளில் வருகிறது. 

நான் நடித்த படங்களில் "பாலும் பழமும்' படத்தில் கொஞ்சம் கசப்பான  அனுபவம் உண்டு. அது என்ன?

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்


_____________
காமராஜர் சொன்ன தகவல்!

சென்னை, தியாகராய நகரில் -திருமலைப்பிள்ளை சாலையிலுள்ள முன் னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் வீட்டுக்கு பக்கத்தில் அப்போது நான் குடியிருந்தேன். எங்கள் வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. அதனால் ஒரு சமயம் அவரிடம், "உங்கள் வீட்டில் தண் ணீர் எடுத்துக் கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே "என்னம்மா நீ இப்படி கேட்குறே, நான் எல்லாரிடமும் சௌகார் ஜானகி வீட்டுக் குப் பக்கத்து வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னார். அதைக்கேட்டு பெருமிதமாக இருந்தது. இப்படி எல்லோருடைய மதிப்பை யும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்தேன்.