(38) ஒரு அம்மாவாக என் கடமை!
ஒரு பெண் டெல்லிக்கே ராணியானாலும், அவள் வீட்டில் தாய்தானே? அவள் குடும்பத்தின் தலைவிதானே? நான் என்னதான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகையானாலும் நானும் ஒரு தாய்தானே. என் கடமையை நான் மறந்துவிடவில்லை. என் குடும்பத்தைச் பொறுத்தவரை எல்லாமே
நான்தான். குடும்பத்தின் வரவு செலவு. குழந்தை கள் படிப்பு எல்லாம் என் பொறுப்புதான். என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் நான்தான் சம்பாதிக்கிறவள் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். பெரிய படிப்பு படிக்க வேண்டும். பெரிய உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்றுதான் நான் நினைத்தேனே தவிர அவர்களை சினிமாவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் எனக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை.
சினிமா என்னோடு போகட்டும், அவர்கள் படித்து தங்கள் சொந்தக் காலில் நிற்கட்டும் என்றுதான் அவர்கள் படிப்பு விஷயத்தில் கறாராக இருந்து நன்றாகப் படிக்க வைத்தேன். ஒரு தாயாக எனக்கு இது நிறைவான விஷயம்தான். நான் ஆசைப்பட்டதும் இதைத்தான். என்னைப் புரிந்துகொண்ட என்னுடைய குழந்தைகள், என்னை மதித்து என் மனம் கோணாமல் நடந்து கொண்டார்கள் என்பதுதான் நான் பெருமையோடு சொல்லும் விஷயம். மூத்த மகள் யக்ஞபிரபா, மகன் தம்மு (வெங்கட ரமணா), இளைய மகள் அம்மு.
அமெரிக்காவில் மகன் தம்மு படிக்கச் சென்றான். படிப்பில் கெட்டிக்காரன். எம்.எஸ். முடித்து அங்கேயே பெரிய உத்தியோகத்தில் செட்ட
(38) ஒரு அம்மாவாக என் கடமை!
ஒரு பெண் டெல்லிக்கே ராணியானாலும், அவள் வீட்டில் தாய்தானே? அவள் குடும்பத்தின் தலைவிதானே? நான் என்னதான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகையானாலும் நானும் ஒரு தாய்தானே. என் கடமையை நான் மறந்துவிடவில்லை. என் குடும்பத்தைச் பொறுத்தவரை எல்லாமே
நான்தான். குடும்பத்தின் வரவு செலவு. குழந்தை கள் படிப்பு எல்லாம் என் பொறுப்புதான். என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் நான்தான் சம்பாதிக்கிறவள் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். பெரிய படிப்பு படிக்க வேண்டும். பெரிய உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்றுதான் நான் நினைத்தேனே தவிர அவர்களை சினிமாவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் எனக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை.
சினிமா என்னோடு போகட்டும், அவர்கள் படித்து தங்கள் சொந்தக் காலில் நிற்கட்டும் என்றுதான் அவர்கள் படிப்பு விஷயத்தில் கறாராக இருந்து நன்றாகப் படிக்க வைத்தேன். ஒரு தாயாக எனக்கு இது நிறைவான விஷயம்தான். நான் ஆசைப்பட்டதும் இதைத்தான். என்னைப் புரிந்துகொண்ட என்னுடைய குழந்தைகள், என்னை மதித்து என் மனம் கோணாமல் நடந்து கொண்டார்கள் என்பதுதான் நான் பெருமையோடு சொல்லும் விஷயம். மூத்த மகள் யக்ஞபிரபா, மகன் தம்மு (வெங்கட ரமணா), இளைய மகள் அம்மு.
அமெரிக்காவில் மகன் தம்மு படிக்கச் சென்றான். படிப்பில் கெட்டிக்காரன். எம்.எஸ். முடித்து அங்கேயே பெரிய உத்தியோகத்தில் செட்டிலாகிவிட்டான். இது முதல் மகிழ்ச்சி என்றாலும் அவனுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு தாயின் கடமையல்லவா? எனவே "நான் உனக்கு பெண் பார்க்கட்டுமா?'' என்று கடிதம் எழுதினேன். அவனோ, "அம்மா நான் ஒரு குஜராத்தி பெண்ணை விரும்புகிறேன். அவளையே திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்'' என்று எழுதினான். மகனின் சந்தோஷம்தானே முக்கியம். அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணம் முடித்துவைத்தேன். அவர்கள் ரொம்ப சந்தோஷமாக வாழ்கிறார்கள். நானும் ஆண்டுக்கு ஒரு தடவை அமெரிக்கா சென்று பேரன், பேத்திகள் கூட மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகிறேன்.
என் விருப்பம் இல்லாமலே என் திருமணத்தை என் பெற்றோர் அவசரமாக முடித்தார்கள். என் கருத்தை, அப்பா -அம்மா -அண்ணா யாரும் கேட்கவில்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு நான் பூரண சுதந்திரம் கொடுத்தேன். அவர்கள் விருப்பத்தைக் கேட்டு தெரிந்து, அவர்களின் சம்மதத்துடனே திருமணம் செய்துவைத்தேன் என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவத்தை இங்கே சொல்கிறேன்.
அதேபோல இளைய மகள் அம்முவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொன்னதும் அவள் உடனே தன்னுடைய அண்ணாவுக்கு தன் கோரிக்கையை கடிதத்தில் எழுதினாள். அவனும் தங்கைக்கு தெளிவாக எழுதினான்.
மகள் திருமணம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிகையாளர் திரைஞானி என்னைப் பார்க்க வந்திருந்தார். மகளின் கடிதத்தையும், மகனின் கடிதத்தையும் அவரிடம் படிக்க கொடுத்தேன்.
"ஒரு நாள் சௌகார்ஜானகி அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது அவர் சில கடிதங்களை என்னிடம் கொடுத்தார். அவை ரசிகர் கடிதங்களோ என்று நினைத்தேன் பெரும்பாலும் நடிகர் -நடிகைகளுக்கு தினம் பல கடிதங்கள் வரும். அவைகளை எங்களிடம் காண்பிப்பது உண்டு. ஆனால் சௌகார் ஜானகி கொடுத்தவை அவரது மகனும், மகளும் ஆங்கிலத்தில் அழகாக எழுதிய கடிதங்கள்.
"பரவாயில்லை படியுங்கள்' என்றார்.
இருவரும் நேரில் பேசிக்கொள்வது போலவே கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.
அதே சமயத்தில் தங்கள் அம்மா பிரபல நடிகை என்பதைத் தாண்டி, அம்மா மீது அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதும், தாய் சொல்லைத் தட்டாத அருமையான பிள்ளைகளாக இருப் பதையும் அவர்கள் கடிதங்களின் வாசகங்கள் புரிய வைத்தன.
சௌகாரின் மகள் அம்மு (அலமேலு) அண்ணன் தம்முவுக்கு எழுதிய கடிதத்தின் சில வரிகள்;
"தம்மு அண்ணா! எந்த விஷயத்திலும் உன்னிடம் யோசனை கேட்கலாம் என்று முன்பு நீ எனக்கு எழுதியிருந்தது ஞாபகமிருக்கிறதா?
உன்னிடம் யோசனை கேட்டுத்தான் இந்தக் கடிதம். அடுத்த வருடத்தில் எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவது என்று மம்மி ரொம்பவும் துடிக்கிறார் என்று நினைக்கிறேன். இது ரொம்ப சீக்கிரம் என்று தோன்றுகிறது. 12 ஜூன் வரைதான். இதைப்பற்றி யோசிக்கக்கூட விருப்பமில்லை... நீ என்ன நினைக்கிறாய்? என் சொந்த மனமே எனக்கு முதலில் நன்கு தெரியவேண்டும். சும்மா வெளி அழகு முதலானவை எல்லாம் கண்டு மயங்கிவிடக்கூடாது என்று விரும்புகிறேன். உன் யோசனையை நான் மதிக்கிறேன். உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.'
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/sowcarjanaki1-2026-02-23-17-16-40.jpg)
தங்கை அம்முவின் மேற்கண்ட கடிதத்திற்கு அண்ணன் தம்மு எழுதிய பதிலில் சில வரிகள்;
"அம்மு! அம்மாவிடம் இதுபற்றி மனம்விட்டுப் பேசு. நிலைமையை விளக்கிச் சொல்லு. இரண்டாவதாக, நீ எந்த மாதிரி தரத்துடன் வாழ வேண்டும் என்று அம்மா எதிர் பார்க்கிறாரோ, அதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள். ஒன்றை ஒரு முறையில் அடையவேண்டும் என்றால் அதற்கு உண்டான விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகவே நீ இன்னும் கன்சர்வேடிவாகவும் ரிசர்வ்டாகவும் இருந்து வா. நாம் நாடறிந்த ஒரு பிரபலமானவரின் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். எனவே ஊர் முழுவதும் நமது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டேயிருக் கிறது. ஒரேயொரு சிறிய தவறுதான் என்றாலும் பிறகு அவ்வளவுதான். சின்ன வயதில் கல்யாணம் செய்து கொண்டால் வாழ்க் கையில் ஆசையே இல்லாமல் போய்விடும் என்று நீ நினைக்கிறாய். அதேசமயம் பெரும்பாலும் நீ சொல்வது சரிதான், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படித்தான் நேரும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே.
அப்புறம் இறுதியாக அம்மு... மற்றவர்கள் என்ன சொன்னாலும் உன் வாழ்க்கையைப் பற்றி நீதான், நீ ஒருத்திதான் முடிவு எடுக்க வேண்டும். 1972 ஜூனுக்கு முன்னால் திருமணம் வேண்டாம் என்று நீ நினைத்தால், உன் மனதில் இருப்பதை அம்மாவிடம் சொல்லு. அவர் என்ன சொல்கிறார் என்பதையும் காது கொடுத்துக் கேள். பிறகு சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து. உன் முடிவை நீயே செய்துகொள்' -இது அண்ணனின் பதில்.
அண்ணன் தங்கை இருவரின் கடிதங் களையும் படித்துப் பார்த்தபோது சௌகார் ஜானகி தன்னுடைய குழந்தைகளை எந்த அளவுக்கு வளர்த் திருக்கிறார் என் பதும், தங்கள் பிள்ளைகளுக்கு சுயமாக சிந்திக்கும் சுதந்திரத்தை கொடுத்து வளர்த் திருக்கின்றார் என் பதும், சௌகார் ஜானகி ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல: சிறந்த ஒரு தாயாக அவருடைய வளர்ப்பு வியப்பைக் கொடுத்தது'' என்று பத்திரிக்கையாளர் திரைஞானி சொல்லியிருக்கின்றார்.
இன்றைக்கு சில நடிகர் நடிகைகள் மட்டுமல்ல ரசிகர்கள் கூட எங்களைப் போன்ற மூத்த கலைஞர்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்விகள், அந்தக் காலத்தில் சினிமா தொழில் எப்படியிருந்தது. கவர்ச்சியாக நடிக்க நிர்பந்தம் செய்வார்களா? நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததா? போன்ற கேள்விகள் கேட்பார்கள்.
ஒரு பத்திரிகைக்காக நடிகை சுஹாசினி மணிரத்னம், சுமலதா இருவரும் என்னைச் சந்தித்த அனுபவம்! அது எப்படியிருந்தது...?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
______________
நஷ்டத்தில் உதவும் நடிகை...!
தன்னால் பிறர் கஷ்டப்படுவதையும் நஷ்டப்படுவதையும் விரும்பமாட்டார் பட்டு மாமி சௌகார் ஜானகி. சினிமா நடிகைகளில் அவர் ஒரு கொள்கையை வைத்திருந்தார். அவரே தன்னுடைய சொந்தக் காரில் படப்பிடிப்புக்கு வருவார். பெட்ரோலுக்கும் காசு வாங்க மாட்டார். தன்னுடைய சொந்த காசிலேயே பெட்ரோல் போட்டுக்கொள்வார். அதனால்தான் அவரை தயாரிப்பாளர்களின் நடிகை என்று சொல்வார்கள். படப்பிடிப்பில் நேரம் தவற மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்கமாட்டார். அவர் நடித்த படம் ஒரு வேளை சரியாகப் போகவில்லை, நஷ்டம் ஏற்பட்டால் பேசிய சம்பளத்தை விட குறைவாக வாங்கிக் கொள்வார். "உங்கள் நஷ்டத்தில் நானும் சிறிது பங்கேற்றுக்கொள்கிறேன்' என்பார். இது போன்ற மனசு எத்தனை நடிகைகளுக்கு வரும்...?
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us