"எளிய குடும்பத்தில் பிறந்த நான், அரசியலில் பொதுநல சிந்தனையோடு பணியாற்றி வரு கிறேன். நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. ஆனால், திட்ட மிட்டே அவதூறு செய்திகள் பரப் பப்பட்டு வருகின்றன. விஜயநல்லதம்பி என்ற மோசடிப் பேர்வழி மீதுள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விருதுநகர் மாவட்டம் மட்டு மல்ல... தமிழகமே நன்கறியும். அவருக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். யாராவது ஒரு வி.ஐ.பி. மீது பழி சுமத்துவதை, விஜயநல்லதம்பி வாடிக்கை யாகவே வைத்திருக்கிறார்''”என்று குமுறலைக் கொட்டியிருக்கிறார்.

"யார் இந்த விஜயநல்லதம்பி? ராஜேந்திர பாலாஜி யோடு என்ன பிரச்சனை?'

rr

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் உடன்பிறந்த தம்பிதான் விஜயநல்லதம்பி. விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக, ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய தம்பி விஜயநல்லதம்பிக்கு, வெம்பக் கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனுக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, விஜய நல்லதம்பியிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். வேலை வாங் கித் தராத நிலையில்... ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தை திருப்பிக் கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஜய நல்லதம்பி மீது மோசடி புகார் கொடுத்தார். காவல்துறை யிடம், "பலபேரிடம் வாங்கிக் கொடுத்த ரூ.3 கோடியை ராஜேந்திர பாலாஜி திருப்பித் தரவில்லை'’ என்று கூலாக புகார் கொடுத்திருக்கிறார் விஜயநல்லதம்பி. "இதைத்தான் அபாண்டமான குற்றச் சாட்டு' என்று மறுக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

2010-ல் இதே ரீதியி லான ஒரு புகாரை விஜயநல்லதம்பி காவல் துறையிடம் அளித்தார். அப் போது ‘"தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தில் எனக்கு உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாகச் சொல்லி ரூ.69 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டனர்' என, கலைஞரின் மகள் செல்வி, உமா மகேஸ்வரி, வேளச்சேரி ரவி உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். அப்போ தும் அவரது அபாண்ட புகாருக்கு கடுமையான மறுப்பு வந்தது.

"மோசடி புகாரில் சிக்கும்போதெல் லாம் யாராவது ஒரு வி.ஐ.பி. பெயரைச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பதாக விமர் சனத்துக்கு ஆளாகிவருகின்றீர்களே?''’என விஜயநல்லதம்பியை தொடர்புகொண்ட போது கேட்டோம். “

"ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன''” என்றவரிடம், ‘"ஆதாரங் களில் ஒன்றை வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி வையுங்களேன்'' என்று கேட்டோம். “"அதெல்லாம் நேரில்தான் தரமுடியும், நானே உங்களைச் சந்திக்கிறேன்''’என்று கூறியவரிடமிருந்து, நாட்கள் கடந்தும் நோ ரெஸ்பான்ஸ்.

"விஜயநல்லதம்பி, அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்'’ என ஓ.பி.எஸ்.ஸும், ஈ.பி.எஸ்.ஸும் கையெ ழுத்திட்டு, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளி யிட்டனர்.

Advertisment