நானே கடவுள்! மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா! -விசாரணை வளையத்தில் சிக்கிய பள்ளி!

s

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்.

அதில் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி மாணவிகள் வெளியிட்ட புகார்கள், அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது, இந்தப் பள்ளியின் நிறுவனர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

sivssankarbabasivssankarbaba

பள்ளியில் படித்துவரும் பல மாணவிகளை, தன் காமஇச்சைக்கு பல ஆண்டுகளாக சீரழித்து வரும் தகவல் முதல்கட்ட புகார்களாக வெளிவந்துள்ளன. ஆன்மிகம் என்ற பெயரில் நான்தான் கடவுள் கிருஷ்ணர் என்றும், தான் குறிவைத்த பள்ளி மாணவியை கோபிகா என்றும் அழைப்பாராம். பின்னர் அந்த மாணவியை பள்ளி வளாகத்தில் லவுஞ்சுக்கு தனியாக அழைத்துவந்து சீரழித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார். அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தச் சென்றார். கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் அடுத்தகட்டமாக அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊரைச் சேர்ந்த ஷர்மா ஐயர் அப்பகுதியில் பிரபல புரோகிதராக இருந்தவர். அவரின் மகனான சிவசங்கரன், முப்பது வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி சென்னை வந்தார். மண்ணடி, மலையப்பன் தெருவில

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடத்திய காம லீலைகள் வெளிவந்த நிலையில்... தமிழகத்தில் மேலும் சில மாணவிகள், தங்கள் பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்டதை துணிந்து வந்து புகார் கொடுத்தனர். சிலர் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர்.

அதில் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி மாணவிகள் வெளியிட்ட புகார்கள், அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது, இந்தப் பள்ளியின் நிறுவனர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

sivssankarbabasivssankarbaba

பள்ளியில் படித்துவரும் பல மாணவிகளை, தன் காமஇச்சைக்கு பல ஆண்டுகளாக சீரழித்து வரும் தகவல் முதல்கட்ட புகார்களாக வெளிவந்துள்ளன. ஆன்மிகம் என்ற பெயரில் நான்தான் கடவுள் கிருஷ்ணர் என்றும், தான் குறிவைத்த பள்ளி மாணவியை கோபிகா என்றும் அழைப்பாராம். பின்னர் அந்த மாணவியை பள்ளி வளாகத்தில் லவுஞ்சுக்கு தனியாக அழைத்துவந்து சீரழித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார். அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தச் சென்றார். கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் அடுத்தகட்டமாக அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊரைச் சேர்ந்த ஷர்மா ஐயர் அப்பகுதியில் பிரபல புரோகிதராக இருந்தவர். அவரின் மகனான சிவசங்கரன், முப்பது வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி சென்னை வந்தார். மண்ணடி, மலையப்பன் தெருவில் லாரி ஷெட்டில் வேலை பார்த்த சிவசங்கரன், காவி உடை அணிந்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தார்.

sivssankarbaba

பின்னர் சிவசங்கர் பாபா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஆன்மிக செற்பொழிவுகளை செய்துவந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகவா முனிவருடன் நடந்த விவாதத்தில் கைகலப்பான வீடியோ காட்சி பரபரப்பானது. திரைப்பட காமெடியாகவும் கலகலப்பானது. பிறகு சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக செற்பொழிவின் மூலம் பிரபலமானார். அரசியல் தொடர்புகள் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட சிவசங்கர் பாபா, பெசன்ட் நகரிலும், நீலாங்கரையில் தனது ஆன்மிகப் பணியை தொடர்ந்தார். அதன்பின் கேளம்பாக்கத்தில் ரஜினியின் பண்ணை வீடு அருகே 64 ஏக்கரில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நிறுவினார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல் இயங்கி வருகின்றது, அந்தப் பள்ளியின் கேம்பஸ் பெயர் ராமராஜியம். மகாஜோதி காலனி, கல்கி கார்டன், பழனி கார்டன் மூன்று பகுதியிலும் பக்தர்கள் பெயரில் முன்னூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கென தனி உண்டு உறைவிடம் (ஆஸ்டல்) உள்ளது. மேலும் புத்தர் கோயில், சர்ச், பள்ளிவாசல், ஜெயின் மதத்தவர்களின் மகாவீரர் கோயில் என எல்லாம் கோவில்களும் உள்ளது.

sivasankar

பள்ளியில் குறைந்த கட்டணம் என்பதால் சீட்டு கிடைப்பதே சிரமம். வளாகத்தில் ஊஞ்சலில் அமர்ந்தபடி தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடத்துவார் பாபா. அதில் தன்னை கடவுள் என்றும் நான்தான் கிருஷ்ணர், சிவன் என்றும் கூறுவார். விரைவில் சூரியனில் ஐக்கியமாகப் போகிறேன் என்றும் கூறுவார். முதல் வரிசையில் இளம் பெண்கள் அமர்ந்திருப்பார்கள். பேசும் போது பாலியல் ஜோக் கூறுவார். தான்தான் கடவுள் என்று நம்ப வைப்பார். கடவுள் அருள் என பெண்களையும் மாணவிகளையும் கட்டிப்பிடிப்பார்.

நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர், "இந்த சிவசங்கர் பாபா பள்ளிக்கூடம் நடத்துவதாக பல பெண் குழந்தைகளின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டார். பள்ளியில் படிக்கும் மாணவிகளை அவர்களின் குடும்பச் சூழலை நன்றாக தெரிந்துக்கொண்டு தைரியமில்லாத மாணவிகள், ஆஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகள், வெளிநாட்டில் இருந்து படிக்க வந்த மாணவிகளை தேர்வு செய்துகொண்டு, தான்தான் கடவுள் என நெருக்கமாக பழகுவதும், அவர்களுக்கு சாக்லெட் கொடுப்பது, பூஜை நேரத்தில் அவர்களோடு டான்ஸ் ஆடுவது என அவர்களை மயக்கிவிடுவார். விடுதியில் இருந்து 500 மீட்டர் தூரம் உள்ள அவரது அறைக்கு (லவுன்ச்) விசுவாசமான டீச்சர்களே அழைத்துச் செல்வார்கள்.

மாணவியை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காவல் நிற்க... முதல் மூன்றுநாள் பல்ஸ் பார்ப்பது பாபா வழக்கம். பின்னர் அந்த மாணவியிடம், நான் தான் பகவான் கிருஷ்ணர் என்றும் மெல்ல பேச்சுக் கொடுத்து சில்மிசம் செய்வார். பின்னர் உதட்டில் முத்தம் கொடுத்து எல்லை மீறுவார். நான் விரும்பியதை கொடுத்தால் மோட்சம் அடைவீர்கள் என்று மூளைச்சலவை செய்து ஒருகட்டத்தில், மாணவியை சீரழித்துவிடுவார். இந்த விவரத்தை என்னைப்போல பாதிக்கப்பட்ட மாணவிகளே என்னிடம் கூறியுள்ளார்கள். இவர் இச்சைக்கு அடங்காத மாணவிகளுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுப்பதும், மீறி பெற்றோர்களிடம் கூறினால்... மிரட்டியும் அனுப்புவார்கள். சிலருக்கு டி.சி. கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பிய சம்பவமெல்லாம் நடந்திருக்கு.

அந்த கேம்பஸே பயங்கரமாக இருக்கும். இரவு நேரத்துல எல்லாம் பயமா இருக்கும். அப்போ சின்ன வயசு எதுவும் தெளிவா முடிவெடுக்க முடியாது. பிடித்த மாணவிகளை அனுபவிக்க இவர் கடவுள் கிருஷ்ணர் என்றும், இவர் டார்கெட் செய்யும் மாணவிகளை கோபிகா என்று அழைப்பார். அப்படி அழைத்தாலே அந்த மாணவிக்கு பாபாவால் ஆபத்துதான்.

ரெசிடென்சியல் ஸ்கூல் என்பதால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் நிலைதான் பரிதாபம். இவரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவிகள் இதுவரை வெளியே சொல்ல முடியாமல் தவித்தனர். தற்போது அவர்கள் வெடிக்க முன்வந்துள்ளனர். நீதி கிடைக்க உதவுங்கள்''”என்றார் விரிவாக.

sivasankar

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய அஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "பாபாவின் பாலியல் இச்சைக்கு சிக்கிய என் வகுப்பு மாணவிகள் இருவர் அப்போதே எங்களிடம் சொல்லி அழுதார்கள். அந்த வயதில் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. இருந்தும் கடந்த 2009 நவம்பர் மாசம் இரண்டு மாணவர்கள் ஒரு மொட்டைக் கடிதாசியில் "நீயெல்லாம் கடவுள்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டிருக்க... எங்க அப்பா- அம்மா உன்ன சாமி மாதிரி நினைச்சிதான் இங்க எங்கள விட்டாங்க. ஆனா நீ பள்ளி மாணவிகள்னும் பார்க்கல. மாணவிகளை தினம் தினம் சீரழிச்சிட்டு வர்றியே''னு எழுதி அவர் ரூம்கிட்ட வைச்சிட் டாங்க, எப்படியோ கையெழுத்த வச்சி அவுங்கள கண்டுபிடிச்சி ஓப்பன்ஹால்ல அசிங்கபடுத்தி, மாலையெல்லாம் போட்டு கிரவுண்ட சுத்தி வரவச்சி, பேரன்ட்ஸை வரவழைத்து டி.சி. கொடுத்து ஸ்கூலவிட்டே அனுப்பிட்டாங்க.

மாணவர்களும் மாணவிகளும் ஒண்ணா இருந்தாதானே இதுபோல நடக்குது. விஷயம் வெளியே தெரிய கூடாதுனு பாய்ஸ் கேம்பஸ், கேர்ள்ஸ் கேம்பஸ்னு தனித்தனியா பிரிச்சிட்டாங்க. குரூப் செக்ஸ் குற்றச்சாட்டுவரை உண்டு. ரூமுக்கு அழைச்சிட்டு போயி ஜூஸ் என்ற பெயர்ல சரக்கு கலந்து கொடுத்து மாணவிகள்கிட்ட பேச்சு கொடுப்பாரு. "நான் கடவுள் நீ ஆண்டாள்'னு நம்பவச்சி உடலுறவு வைத்துக்கொள்வார். எனக்குத் தெரிஞ்சி 2009-2010ஆம் வருஷத்துல மட்டும் இவருக்குப் படியாத எட்டு பேருக்கு பாதிலே டி.சி. கொடுத்து விரட்டியிருக்காரு.

பெற்றோர்கள் எதிர்த்து பேசினாலோ, புகார் கொடுப்பதுபோல தெரிஞ்சாலோ லோக்கல் கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை எல்லா அதிகாரியும் கையில் வைச்சிருப்பாரு. புகார் கொடுத்தாலும் பலன் இருக்காது. சும்மா அலைய விடுவாங்க நமக்கே சீ... போடானு ஆகிடும்.

ஆறாம்வகுப்பு மாணவிகிட்ட ஆரம்பித்து... கொஞ்சம் கொஞ்சமா அவர் சாமினு நம்ப வைச்சு பின்னாடி எட்டாம் வகுப்பு மாணவிகளை கை வைக்க ஆரம்பிச்சாரு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் லீலைதான்.

அப்போ எங்களுக்கு சின்ன வயசு தெரியாது, ஆனா இப்போ சில கிளாஸ்மேட் மாணவிகள் தைரியமா சொல்லவேதான் எல்லாமும் வெளியே வெளிவந்திருக்கு. முன்னாள் மாணவர்கள் எல்லாம் குழுவா சேர்ந்துதான் புகார் கொடுத்திருக்கோம். அதேபோல அங்க தங்கியிருக்கிற பக்தர்களுகே தெரியும்... சில பேரன்ட்ஸ்களுக்கும் தெரியும். ஆனா வெளியே சொல்ல விரும்பல. எங்ககிட்ட நிறைய ஆதாரம் இருக்கு அதுல இவருக்கு நீண்டநாளா துணையா இருக்கிறது அவரோட நிழல்னு சொல்லப்படும் ஆட்களோட லிஸ்ட்டும் வச்சிருக் கோம். எதிர்காலத்துல இந்த மாதிரி மாணவி களுக்கு நடக்காம தடுக்க அரசுதான் முன்வந்து தீவிர நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபாவை தொடர்பு கொள்ள சென்றால், கேம்பஸில் அனுமதிக்க வில்லை. பள்ளியின் போனில் தொடர்புகொண்டோம். பதில் கூறாமல் துண்டித்தனர். அந்தப் பள்ளியின் வெப்சைட்டும் ஷட்-டவுன் செய்யப் பட்டுள்ளது, கடவுள் என்ற பெயரில் இளம் மாணவிகளின் வாழ்கையை சீரழித்துவரும் காமச் சாமியார்கள் நிர்வாகத்தில் உள்ள இதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசே நடத்த ஆவன செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

nkn050621
இதையும் படியுங்கள்
Subscribe