மோடியின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுக்களால் அவர் மீது அதிருப்தியடைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. இந்த நிலையில், மத்திய உளவுத்துறையில் இருக்கும் தங்களின் சோர்ஸ்கள் மூலம் தேர்தல் ரிசல்ட் குறித்த பல தகவல்களை அறிந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி தகவல் கள். இந்துத்துவா கொள் கைகளை இந்தியாவில் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இதன் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. அந்த வகையில், பா.ஜ.க. கட்சியும், அதன் ஆட்சியும் ஆர்.எஸ்.எஸ். ஸின் அதிகார பீடத்துக்கு கட்டுப்பட்டவை. யார் பிரதமராக வரவேண்டும் என்பது தொடங்கி, மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர்களாக யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுவரை இந்த அமைப்பின் தலையீடு அதிகம். பா.ஜ.க.வின் ஆகப்பெரிய தலைவர்களாக இருந்த வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டவர்களை வயது மூப்பு மற்றும் உடல்நிலை பலகீனத்தை முன்வைத்து புறக்கணித்து விட்டு, குஜராத் முதல்வராக இருந்த மோடியை உயர்த்திப் பிடித்தது ஆர்.எஸ்.எஸ். இதற்காக, 2012, 2013 காலகட்டத்தில் மோடிக்கு ஆதரவான பிம்பங்களை உருவாக்கி, 2014-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி, மோடியை பிரதமராக்கியது வரை அனைத்து அரசியலையும் கட்டமைத்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அப்படிப்பட்ட அந்த அமைப்பின் தலைவர்கள் தற்போது மோடி மீது அதிருப்தியடைந்திருக் கிறார்கள்.

modi

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாக்பூரில் நடந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் சந்திப்பு தொடர்ச்சி யாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதில், பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம், தலைவர்களின் பிரச்சாரங்கள், முன்னிறுத்தப் படும் விசயங்கள் என பல்வேறு விவகாரங்கள் அலசப்படுகின்றன. அப்படி கடந்தவாரம் நடந்த ஒரு சந்திப்பில், "பா.ஜ.க. தனித்து 320 சீட்டுகளையும் கூட் டணியாக 360 சீட்டுகளை யும் கைப்பற்றும் என இருந்த சூழலில், தற்போது அதில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க. தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள்தான்'' என மத்திய உளவுத்துறையிலிருந்து கிடைத்த தகவல்கள் விவா திக்கப்பட்டிருக்கிறது. தேர் தல் களத்தில் பா.ஜ.க. தலை வர்களின் பேச்சுகள் மக்க ளிடம் எதிர்மறைத் தாக் கத்தை உருவாக்கியிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, 250 சீட்டுகளை பா.ஜ.க. கைப்பற்றினாலே பெரிய சாதனைதான் என்கிற பேச்சும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக் கிறது. இந்த நிலையில்தான், பூரிஜெகநாத் ஆலய பொக்கிஷத்தின் சாவி தமிழகத்தில் இருக்கிறது என தமிழர்களை திருடர்களாக சித்தரிக்கும் நோக்கில் மோடி பேசியிருப்பதும், "நான் மனிதப் பிறவி அல்ல; பரமாத்மாவே என்னை அனுப்பி வைத்தார்; கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்தார்' என மோடி தந்திருக்கும் பேட்டியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.

பா.ஜ.க.வின் 10 ஆண்டு கால சாதனைகளை மக்கள் முன் எடுத்து வைப்பதைத் தவிர்த்துவிட்டு, "மோடியின் இப்படிப்பட்ட சர்ச்சையான பேச்சுக்களால் பா.ஜ.க.வின் வெற்றி பாதிக்குமோ? மோடிக்கு என்னாச்சு?' என்கிற கேள்விகளே பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது. முதல்முறையாக மோடி மீது அதிருப்தி அடைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை, செய்ய வேண்டியதென்ன என மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Advertisment

-இளையர்