Advertisment

பீடித் தொழிலாளி மகளை ஆட்சியராக்கிய "நான் முதல்வன் திட்டம்!'

er

"படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை. முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம். நீங்கள் முயற்சிக்க மட்டும் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள் கின்றேன்'' என்பதை அடிப்படையைக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் "நான் முதல்வன்' திட்டத்தினால் ஆட்சியர் ஆகியுள்ளார் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள்.

Advertisment

erode

மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது தென்காசி மாவட்ட செங்கோட்டை. தங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் என்றால் மகிழ்ச்சி இருக்காதா? அப்பா சீனிவாசன் ஓய்வுபெற்ற த.நா. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனர். அம்

"படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை. முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம். நீங்கள் முயற்சிக்க மட்டும் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள் கின்றேன்'' என்பதை அடிப்படையைக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் "நான் முதல்வன்' திட்டத்தினால் ஆட்சியர் ஆகியுள்ளார் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள்.

Advertisment

erode

மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது தென்காசி மாவட்ட செங்கோட்டை. தங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் என்றால் மகிழ்ச்சி இருக்காதா? அப்பா சீனிவாசன் ஓய்வுபெற்ற த.நா. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனர். அம்மா ஸ்டெல்லா உள்ளூரில் பீடி சுற்றும் தொழிலாளி. உடன்பிறந்த சகோதரர் பாலமுரளி சவுதி அரேபியாவில் பணி. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், இந்திய குடிமைகள் பணித் தேர்வில் இந்திய அளவில் 851வது ராங்க் எடுத்துள்ளார் இன்பா. இந்திய குடிமை பணிகள் தேர்வில் இரண்டுமுறை முதல்நிலை தேர்வில் தோல்வியுற்றாலும் விடா முயற்சியின் காரணமாக, தமிழக அரசின் உதவி யுடன் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கின்றார்.

"என்னை இந்தளவிற்கு உருவாக்கியது அம்மாவே. ஒவ்வொரு கட்டத்திலும் என்னை ஊக்குவித்தவர் அவரே. அவர் இல்லாமல் நான் இல்லை. பீடி சுற்றியும், கூடுதல் வருமானத்திற்காக அருகில் பூக்களைக் கட்டிக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார். 2022 டிசம்பரில் நுழை வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் உள்ள இல வச அரசு பயிற்சி நிறு வனமான அகில இந்திய சிவில் சர்வீஸ் நிறுவனத் தில் சேர்ந்தேன். தொடர்ந்து, "நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையிலிருந்து ரூ.25,000 நிதியுதவி பெற்றேன். மெயின் தேர்வுக்கான படிப்புப் பொருட்களை வாங்கவும், பிரிண்ட்அவுட்கள் மற்றும் நகல் எடுக்கவும் அந்தப் பணம் தக்க நேரத்தில் எனக்கு உதவியது. மாநில அரசின் கல்வி உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 நிதியுதவியையும் பெற்றேன். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, பிப்ரவரி 2024ல் மடநஈ நேர்காணலில் கலந்துகொண்டேன். இரண்டுமுறை முதல்நிலைத் தேர்வில் தோல்வியடைந்தாலும், என் அம்மா அளித்த ஊக்கமும், என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் என்னை தேர்வில் தேர்ச்சிபெறச் செய்தது'' என்கிறார் இன்பா.

பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவுடன் சென்னையிலுள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகடாமியில் சேர்ந்திருக்கின்றார் இன்பா. கோவிட் தொற்றுக் காரணமாக ஆன்லைனில்தான் வகுப்புகள் என்ப தால் சொந்த ஊரான செங்கோட்டைக்கு திரும்பி யிருக்கிறார். ஏழ்மையில் இருந்தபோதிலும் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற வைராக் கியம் - செங்கோட்டை பொதுநூலகம் மூலமா இன்பாவிற்கு வழி காட்டியது. ஆன்லைன் வகுப்புக் களில் உள்ளவற்றை படிக்க நூலகத்தின் இலவச வைபையும், நூலகத்தில் உள்ள ஊழியர்கள் வெவ்வேறு செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியிருக்கின்றனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகத்திலேயே இருந்ததால் "நூலகம் இன் னொரு தாய்வீடு' என் கின்றார் இன்பா நெகிழ்ச்சியுடன்!

nkn080524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe