மதுரை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியபோது, மதுரை யின் மூன்று மாவட்டச் செயலாளர் களான தளபதி, மூர்த்தி, மணிமாறன் ஆகியோரின் ஆதரவாளர்களுக் கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் எல்லோரையும் ஓரம்கட்டி மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நக்கீரன் சார்பாக மதுரை மாநகராட்சி குறித்தும், அவரது மேயர் பணி குறித்தும் சில கேள்விகளை மேயரிடம் முன்வைத்தோம்.
உங்கள் கணவர்தான் கட்சிக்காரர்… நீங்கள் கட்சிக்காரரா?
எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அப்பா, தாத்தா காலத்தி-ருந்து தி.மு.க. குடும்பம். எங்க அப்பா பொன்னையா, எமர்ஜென்சியில் சிறைக்குச் சென்றவர். இந்தி எதிர்ப்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். கலைஞரோடு பாளையங்கோட்டை சிறையிலிருந்த முத்தாளபுரம் ராஜுவோடு கூடவே இருந்தவர் அப்பா. அதேபோல் என் கணவர் பல்வேறு போராட்டங்களில் சிறைசென்றவர். தி.மு.க. பகுதிச் செயலாளராக இருந்தவர். கட்சி வழக்கறிஞர். அவரின் குடும்பமும் மூன்று தலைமுறையாக கட்சிப் பணியாற்றிய குடும்பம். எங்கள் இரு குடும்பமுமே தி.மு.க. குடும்பம்தான். நானும் தி.மு.க. கட்சிக்காரிதான்.
மேயராக வருவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
இல்லை, கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. மதுரை மாநகராட்சித் தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். மதுரையைப் பொறுத்தவரை மேயர் முத்துபிள்ளை தொடங்கி பெரிய பெரிய ஜாம்பவான்கள் மேயராக இருந்திருக் கிறார்கள். முக்கிய பொறுப்பை என்னிடம் கட்சித் தலைமை கொடுத்துள்ளது. அதன் அருமை அறிந்து பொறுப்புடன் எந்தவித தர்மசங்கடத்துக்கும் இடம்வைக்காமல் கண்ணியமாக நடந்துகொண்டு, பெயர் சொல்லுமளவுக்கும் மக்கள் பாராட்டு மளவுக்கும் செயல்படுவேன்.
அப்புறம் ஏன் உங்கள் சொந்தக் கட்சி கவுன்சிலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள்? குறிப்பாக மாமன்றக் கவுன்சிலர் மா.ஜெயராமனை மாமன்றக் குழு தலைவராக அறிவித்தும் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்க மறுக் கிறீர்கள் என்று குற்றச்சாட்டை வைக்கின்றனரே?
இப்போது கட்சி கவுன்சிலர்கள் 95% பேர் என் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கத் தொடங்கிவிட்டனர். அண்ணன் ஜெயராமனுக்கான மரியாதையை என்றைக்கும் கொடுக்கமறுத்த தில்லை. இதுகுறித்து முழுமை யான விளக்கத்தை தலைமைக்கு அனுப்பிவிட்டேன். தலைமையும் அதை ஏற்றுக்கொண்டது. தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. தற்போது நான் நடந்துகொள்ளும் தன் மையைப் பார்த்து, செயல்படும் விதத்தைப் பார்த்து என்னை அனைத்து கவுன்சிலர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். எந்த வார்டில் என்ன குறைபாடு இருந்தாலும் நேரடியாகச் செல்கிறேன். குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முற்படுகிறேன். மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை கேட்டே செயல்படுகிறேன். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2,752 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை ஒன்றிணைத்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை மனிதவடிவில் உருவாகும் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினேன். எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை பத்திரிகைகள்தான் பெரிதாக்குகின்றன
ஏன் மீடியாவைத் தவிர்க்கிறீர்கள்?
பொதுவாகவே பத்திரிகைகளைக் கண்டால் கொஞ்சம் பயம். ஏதாவது தவறாகப் பேசிவிடுவோமோ,… அவர்கள் நாம் சொல் வதை தவறாகப் புரிந்துகொண்டு வேறெதாவது நாம் கூறியதாக செய்தி வந்துவிடுமோ என்று பயம். பேச்சில் இல்லாமல் செயல்பாட்டில் பதில் தர வேண்டும் என்று நினைக்கிறேன்.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், எந்த வேலையையுமே உடனுக்குடன் செய்ய மறுக்கிறார்கள் என்று தி.மு.க.வின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ. பூமிநாதன் மாமன்றக் கூட்டத்திலேயே குற்றச்சாட்டுக்களை வைத் தாரே?
அவர் சொன்ன குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். வார்டுகளில் உள்ள குறைபாடுகளைக் களைய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டாக நேரில் ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளேன். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத்துவருகிறேன். வாராவாரம் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டம்போடுகிறேன். தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறோம்.
கல்வெட்டில்கூட துணைமேயர் பெயரை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கி றாரே?
கடந்த வருடம் அதிகாரி களின் கவனக்குறைவால் அங்கன்வாடி திறப்புவிழா கல்வெட்டில் துணைமேயர் பெயர் இடம்பெறாமல் போய்விட்டது. அது என் கவனத்திற்கு வந்தபின்பு துணைமேயர் பெயர் அனைத் திலும் இடம்பெறும்படி பார்த்துக்கொள்கிறேன்.
உங்களை பி.டி.ஆரின் தீவிர ஆதரவாளர் என்கிறார் களே...
பி.டி.ஆர். அரசியலில் மிக நேர்மையானவர். தேர்தலில் காசு கொடுக்காமல் ஜெயித்தவர். உண்மையாக இருந்தால் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை விதைத் தவர். முதலில் நான் மேயராக வந்தவுடன் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை எப்படியெல்லாம் செய்ய வேண்டும், அதற்கான வரவு- செலவு வழிமுறைகள் குறித் தும் ஒவ்வொரு துறை சார்ந் தும் அந்தந்த துறை வல்லு நர்களை வரவழைத்து வகுப்பே எடுக்க வைத்தார். நாம் எந்த வேலை செய்யும்முன்னும் அதன் செயல்பாடுகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வார். அது ரொம்ப பிடிக்கும்.
சந்திப்பு: -அண்ணல்