Advertisment

"நானும் தி.மு.க.காரிதான்'' தளபதி Vs சகோதரி! -மதுரை களேபரம்

ss

ssடந்த 2-ஆம் தேதி, மதுரை நகர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.தளபதி மீது அவரின் சகோதரியும் தி.மு.க. முன்னாள் திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மனாக இருந்த காந்திமதி, திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனில் புகா ரொன்றை அளித்தார். அதில், "நான் திருமங்க லம் அருகே வடகரை கிராமத்தில் ஆர்.ஜி. புளுமெட்டல் கிரஷ்ஷர் குவாரியை 25 ஆண்டு களாக நடத்தி வருகிறேன். என் குவாரிக்கு அருகில் என் சகோதரர் கோ.தளபதி இடம் வாங்கி குவாரி அமைக்கப்போவதாக தகவல் வந்ததால், இதுதொடர்பாக அவரிடம் கேட்ட தற்கு ச

ssடந்த 2-ஆம் தேதி, மதுரை நகர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.தளபதி மீது அவரின் சகோதரியும் தி.மு.க. முன்னாள் திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மனாக இருந்த காந்திமதி, திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனில் புகா ரொன்றை அளித்தார். அதில், "நான் திருமங்க லம் அருகே வடகரை கிராமத்தில் ஆர்.ஜி. புளுமெட்டல் கிரஷ்ஷர் குவாரியை 25 ஆண்டு களாக நடத்தி வருகிறேன். என் குவாரிக்கு அருகில் என் சகோதரர் கோ.தளபதி இடம் வாங்கி குவாரி அமைக்கப்போவதாக தகவல் வந்ததால், இதுதொடர்பாக அவரிடம் கேட்ட தற்கு சரியான பதிலளிக்கவில்லை. எதுவும் பேசாமல் கடந்த சில நாட்களாக ஒதுங்கியிருந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்ததால் அவர் வீட்டுக்கு நான், மகள், என் சகோதரி மகனுடன் சென்றேன்.

Advertisment

என் குவாரி அருகிலேயே நீங்கள் குவாரி அமைத்தால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பேசிக்கொண்டி ருக்கும்போதே, கோ.தளபதியின் மகன் அன்பு என்ற துரை கோபால் சாமி, தகாத வார்த்தைகளால் பேசி என்னை அடித்தார். என் சகோதரி மகன் தடுத்த போது அவரையும் தாக்கி னார். என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்''’என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

ss

"என் அண்ணன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று வேண் டாத கோயிலில்லை. நானும் தி.மு.க.தான். என் அண்ணன் மகன் அன்பு, நான் வளர்த்த பையன். அவன் அத்தை என்று கூட பார்க்காமல் அடிக்கிறான். அதைத் தடுத்த என் அக்கா மகன் சீனியையும் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறார்கள். அதைத் தடுக்கவந்த போது என் அண்ணன் மனைவி என் கையைப் பிடித்து பயங்கரமாகக் கடித்தார். நான் வலி பொறுக்கமுடியாமல் கத்துவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பிரித்துவிட் டார்கள். எனக்கும் என் அண்ணனுக்கும் உள்ள பிரச்சனை. அவர் கூப்பிட்டுவிட்டதால்தான் போனேன். நானும் தி.மு.க.காரிதான். இதை இப்படியே விட்டுவிடமாட்டேன் தலைவர் ஸ்டாலினிடம் கொண்டுசென்று நியாயம் கேட்பேன்''’என்றார்

என்ன நடந்தது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மதுரை நகர் மாவட்ட செயளாளருமான கோ.தளபதியைத் தொடர்புகொண்டோம். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவரது மகன் அன்பு பேசினார். “"சார் அவங்க என் அத்தைதான். அவங்க சொல்வது முழுக்க பொய். நான் அந்த இடத்தை 2016லேயே வாங்கிவிட்டேன். அவங்க கிரஷருக்கும் என் இடத்திற்கும் 4 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அங்கு கிரஷர் வைக்கக்கூடாது என்று யாரோ தூண்டிவிட்டு நாடகம் ஆடுகிறார்கள். எங்க வீட்டிற்கு 7 பேர்களுடன் வந்து தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து என் அம்மாவையும், என் மனைவி, அக்காவை அடித்தது என்ன நியாயம்? எங்கள் தரப்பி லும் புகார் கொடுத்து எப்ஃ.ஐ. ஆர். பதிவாகியிருக்கிறது. இது எங்கள் குடும்ப விசயம். இதை அரசியலாக்க வேண்டாமே'' ’என்று கேட்டுக்கொண்டார்.

nkn130424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe