Advertisment

"நான் ஒரு கோழை'' ஆதவ் அபிடவிட்

adhavarjuna


ரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டநெரிசலில் அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிரவைத் தது. இதையடுத்து தமிழக அரசு, த.வெ.க.வின் நிர்வாகிகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை விசாரிக்க முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதல் கரூர் மா.செ. மதியழகன் வரை பலரையும் காவல்துறை தேடிவந்தது.

Advertisment

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை எக்ஸ் தளத்தில் விமர் சித்த த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செய லாளர் ஆதவ் அர்ஜுன், "சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டாலே கைது.… இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப் போனால் மீட்சிக்கு இளைஞர்களின் ஒரே வழி புரட்சிதான். எப்படி இலங்கையிலும், நேபாளத் திலும் இளைஞர்களும், ஞ்ங்ய் க்ஷ் தலைமுறையும் ஒன்றாய்க் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே


ரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டநெரிசலில் அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிரவைத் தது. இதையடுத்து தமிழக அரசு, த.வெ.க.வின் நிர்வாகிகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை விசாரிக்க முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதல் கரூர் மா.செ. மதியழகன் வரை பலரையும் காவல்துறை தேடிவந்தது.

Advertisment

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை எக்ஸ் தளத்தில் விமர் சித்த த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செய லாளர் ஆதவ் அர்ஜுன், "சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டாலே கைது.… இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப் போனால் மீட்சிக்கு இளைஞர்களின் ஒரே வழி புரட்சிதான். எப்படி இலங்கையிலும், நேபாளத் திலும் இளைஞர்களும், ஞ்ங்ய் க்ஷ் தலைமுறையும் ஒன்றாய்க் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதேபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்' என்று பதிவிட்டார்.

Advertisment

இதற்கிடையில் கரூர் விவகாரத்தில் தன்னந்தனியாகத் தவித்து நின்ற த.வெ.க.வுக்கு உதவுவதன் மூலம், அக்கட்சியை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவந்துவிட முடியுமெனக் கணக்கிட்டு, த.வெ.க.வுக்கு ஆலோசனைகள், உதவிகளை வழங்க ஆரம்பித்தது பா.ஜ.க. அதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள், இத்தகைய பதிவுகள் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகவே மாறும் என எச்சரித்தநிலை யில், அந்தப் பதிவுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங் களும் எழுந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா தனது பதிவை நீக்கினார். அதேசமயம், தேசப் பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் கருத்துப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார்,

"ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல் துறை கவனத்துடன் வழக்குப் பதிவு செய்து, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்''’என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

இதையடுத்து ஆதவ் அர்ஜுனாவின் ட்வீட்டுக்காக தமிழக காவல்துறை முதல் தகவலறிக்கை ஒன்றைப் பதிவுசெய்தது. தமிழக உயர்நீதிமன்றத்தில், அந்த எஃப்.ஐ.ஆரை நீக்கக் கோரி மனு செய்திருக்கும் ஆதவ் அர்ஜுனா அந்த மனுவில், விளையாட்டுத் துறையில் தனது சாதனைகள் மூலமாகவும், தனது தொண்டுமூல மாகவும் நாட்டிற்கு பெருமை சேர்த்ததாகக் கூறியதோடு, கரூர் கூட்டநெரிசல் துயரத்திற்குப் பிறகு த.வெ.க. தொண்டர்கள் காவல்துறையினரால் மிருகத்தனமாக நடத்தப்பட்டது குறித்த தனது கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தும்விதமாகவே அந்த ட்வீட்டைப் போட்டதாகவும், அது இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டுவ தாக இல்லை.

தவிரவும், "என் ட்விட்டர் பதிவு குறித்து சர்ச்சை எழுந்ததால், பதி விட்ட 30 நிமிடங் களிலேயே நீக்கிவிட் டேன். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அதனைப் பதிவிடவில்லை. அரசியல் உள்நோக் கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் காவல்துறை என்மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கவேண்டும்'’என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது சர்ச்சைக் குரிய கருத்து குறித்து நீதிமன்றத் துக்கு எழுதிய மனுவில் குறிப் பிடும்போது, "புரட்சி அல்லது வன்முறை மூலம் ஆட்சிக் கவிழ்ப்பைப் பற்றி அந்தப் பதிவு குறிப்பிடவில்லை. வரும் சட்ட மன்றத் தேர்தலில் மக்களை ஆட்சி மாற்றத்துக்கே அழைப்பு விடுத்தேன்'’என்று சொல்லி விட்டு, "பி.என்.எஸ். பிரிவு 192, 196, 197 அல்லது 353 இன் கீழ் தண்ட னைக்குரிய குற்றம்சாட்டப் படும்போது, பலவீனமான மற் றும் ஊசலாடும் மனம் கொண்ட மக்களின் தரத்தின் அடிப்படை யில் அல்லாமல், நியாயமான, வலுவான மனதுடைய, உறுதி யான மற்றும் தைரியமான நபர் களின் பேச்சு அல்லது எழுத்தின் அடிப்படையில் கருத்தில் கொள்ளவேண்டும்’என்று நீள் கிறது' அந்த மனு. ஆக, வழக்குப் பாய்ந்துவிடக்கூடாது என்பதற் காக, தனது மனம் பலவீனமா னது, ஊசலாடக்கூடியது என்பதையும், தான் தைரியமோ, உறுதியோ அற்ற மனிதர் என்பதையும் ஒப்புக்கொள்கிறார் ஆதவ் அர்ஜுனா.

இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி படத்தில், தன் மீது படையெடுத்துவரும் தியாகுக்கு எதிராக வடிவேலு சரணாகதியாக காலில் விழுவார். அப்போது, "படுத்தேவிட்டா னாய்யா' எனறொரு விமர்சனம் வரும். தமிழக அரசின் வழக்கி லிருந்து தப்ப ஆதவ் அர்ஜுனா வின் அணுகுமுறையும் அப்படித் தான் இருக்கிறது என்ற விமர்சனம் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.

-மணியன்

nkn291025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe