கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த மே 8ஆம் தேதி முதல் அங்கு உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப் பட்டுள்ளன. அரசு வழிகாட்டு முறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டுதான் தொழிற்சாலை களை இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத் தியது. ஆனால் உண்மை நிலவரம் என்ன?
ஹூண்டாய் கார் ஆலைக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் துணை நிறுவனமான ‘மயாங் சாங் இந்தியா’ஆலையில் ஆரணிக்கு அருகே இருக்கும் கிராமத்தில் இருந்து வந்து பணிபுரிந்த நபர், திடீர் உடல்நலக்குறைவினால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமலேயே சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஊர் மக்கள்
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த மே 8ஆம் தேதி முதல் அங்கு உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப் பட்டுள்ளன. அரசு வழிகாட்டு முறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டுதான் தொழிற்சாலை களை இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத் தியது. ஆனால் உண்மை நிலவரம் என்ன?
ஹூண்டாய் கார் ஆலைக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் துணை நிறுவனமான ‘மயாங் சாங் இந்தியா’ஆலையில் ஆரணிக்கு அருகே இருக்கும் கிராமத்தில் இருந்து வந்து பணிபுரிந்த நபர், திடீர் உடல்நலக்குறைவினால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமலேயே சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஊர் மக்கள் ஆம்புலன்சை சூழ்ந்துகொண்டு, பிரேத பரிசோதனை சான்றிதழ் கோரினர். கொரோனாவால்தான் அந்த நபர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை முடிவு வந்ததும், ஒட்டுமொத்த ஹூண்டாய் ஆலை தொழிலாளர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் ஆலையின் நிர்வாகமோ அதுகுறித்து கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவே இல்லை. இதனால், தொழிற்சங்கத்தின் மூலமாக ஹூண்டாய் நிறுவனத் தொழிலாளர்கள் பலரும் தாங்களாகவே பரிசோதனை செய்துகொண்டதில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மற்ற தொழிலாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிபிஎம் தொழிற் சங்க தோழர் முத்துக்குமார், ‘""50 சதவிகித தொழிலாளர்களை கொண்டுதான் இயக்கப்பட வேண்டும் அரசு கூறி இருக்கும்போதும், 100 சதவிகித தொழிலாளர்களைக்கொண்டு ஆலைகளை இயக்கி வருகின்றார்கள். உத்தரவின்படிதான் ஆலைகள் நடக்கின்றதா என்று அரசும், அதிகாரிகளும் கவனிப்பதே இல்லை. ஷிப்டு முறையில் 7,500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். தொழிலாளர்கள் அதிக அளவில் நெருக்கமாக வேலைபார்த்து வருவதால்தான் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. ஆலையில் முறையான கிருமி நாசினி தெளிப்பதும் இல்லை. கொரோனாவுக்காக எந்தவொரு நடவடிக் கைகளையும் ஆலைகள் எடுக்கவே இல்லை. ஒரு ஷிப்டு முடிந்து, அடுத்த ஷிப்டு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் இடைவெளி விடுங்கள். அந்த ஒரு மணி நேரத்தில் ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கலாம் என்று கேட்டுப்பார்த்தோம். நிர்வாகம் அதுக்கு சம்மதிக்கவில்லை. தயாரிப் பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
ஹூண்டாய் ஆலையின் மேல்மட்ட அலுவலர்கள் எல்லோரும் தென்கொரியா வைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் நிலை தொழிலாளர்கள்தான் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால், இந்திய தொழி லாளர்களின் உயிரைக் குறித்து கொஞ்சம்கூட அவர்களுக்கு அக்கறை இல்லை'' என்று ஆதங்கப்பட்டார்.
மேலும், ""சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலத்தில்தான் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருப்ப தாக அரசு அறிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொற்று இருக்கிறதா என்று ஆலை நிர்வாகம் பரிசோதனை செய்யவில்லை. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொற்று இருந்து, அவர்கள் மூலமாக அவர்களது வீட்டினருக்கும் தொற்று பரவி, மிகப்பெரிய சமூகப் பரவலாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னை யாவிடம் இதுகுறித்து மனு கொடுத்தும், இது வரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தின் பெரிய தொழில்நகரிலேயே அரசும், அதிகாரிகளும் இப்படி அலட்சியமாக இருக்கிறார்களே’’என்று வருந்தினார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் சரவணனிடம் நாம் இதுகுறித்து கேட்டபோது, ""அரசு ஒரு புரோட்டாகால் கொடுத்திருக்கு. அதன்படிதான் இயங்கணும். ஒரு தொழிலாளி பலியானது பற்றி நானும் செய்தியில் பார்த்தேன்'' என ஏனோதானோ என்று பேசினார். மேலும் இதுகுறித்து நாம் கேட்ட போது, ""எனக்கு எந்த விபரமும் தெரியாது. துணை இயக்குநரிடம் கேட்டுப்பாருங்க'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் நாம் கேட்டபோது, ""எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. இணை இயக்குநரிடம் கேட்டுப்பாருங்க'' என்று சொல்லிவிட்டார்.
அதிகாரிகள் இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆகும் நிலையில், தொழிலாளர்களின் நலனில் எந்த அளவுக்கு அக்கறையோடு செயல்படுகிறீர்கள் என்றும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி ஸ்டீபனிடம் நாம் கேட்டதும், ‘’உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது’’என்று அலட்சியமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இந்த விவகாரம் எல்லாம் தெரிந்தும், சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் தொழிலாளர்கள்.
- அரவிந்த்