Advertisment

ஹைட்ரோகார்பன் திட்டம்! மீண்டும் ராமர் பாலம் சர்ச்சை !

ss

ன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில், சுமார் 9,990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் உள்ளதாகக் கண்டறிந்துள்ள தாகவும், அப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணியில் ஈடுபட விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென்றும் ஏல அறிவிப்பை வெளியிட்டிருப்பது தற்போது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ள பகுதியில் அ

ன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில், சுமார் 9,990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் உள்ளதாகக் கண்டறிந்துள்ள தாகவும், அப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணியில் ஈடுபட விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென்றும் ஏல அறிவிப்பை வெளியிட்டிருப்பது தற்போது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ள பகுதியில் அரியவகை ஆமைகள், கடல்வாழ் உயிரினங்கள் மிகுந்திருப்பதாகவும், இத்திட்டத்தால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமென் றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

Advertisment

ss

முன்னர் தி.மு.க. இடம்பெற்ற காங்கிரஸ் தலை மையிலான ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தால், ராமேஸ்வரம் பகுதி யிலுள்ள ராமர் பாலம் சேதப்படுத்தப்படுவதாகவும், அது இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாகவும் கூறி பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தது. நீதிமன்றத்திலும் அதற்காக போராடிய நிலையில், வேறுவழியின்றி அத்திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோகார்பன் அகழ்ந்தெடுக் கும் திட்டமும் இதே ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே வருவதால், இப்போது மட்டும் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வராதா என்று பலரும் கேள்வியெழுப்பிவருகிறார்கள். மன்னார் வளை குடா பகுதியில் ஹைட்ரோகார்பன் அகழ்ந்தெடுக் கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், அறிவிக்கப்பட்ட பல்லுயிர் வளமிக்க அனைத்துப் பகுதிகளையும் ஆழ்கடல் சுரங்கத்திற்கான திறந்தவெளி உரிமக் கொள்கையிலிருந்து நீக்குமாறும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத் துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'மன்னார் வளைகுடாவின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அவற்றின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் சுரங்கம், கடல் வாழ்விடங்களுக்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கக்கூடிய இத்திட்டத்தை கொண்டுவருமுன்பாக தமிழக அரசிடம் ஆலோசனை கேட்கவில்லை. இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்திட்டத்துக்கு ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரும் திட்டத்தால் ராமர் பாலம் சிதைக்கப்படும் சூழலில்... இந்துத்வா அமைப்புகள் வேடிக்கைப் பார்ப்பது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது!

nkn120325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe