கேரளாவில் அரங்கேற்றப்பட்டிருக்கும் அந்த சீரழிவுக் கலாச்சாரத்தை அறிந்த அத்தனை பேரும், அதை ஜீரணிக்க முடியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

ff

கடந்த வாரம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்ட சங்கனாச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதே ஆன ஒரு இளம்பெண், கண்ணீர் விழிகளுடன் அங்குள்ள காவல்நிலையத்துக்கு ஓடிவந்தார். தன்னைத் தனது கணவனே, பிற ஆண்களுடன் உறவுகொள்ள வற்புறுத்தி ஈடுபடுத்துவதாக குமுறினார். போலீஸ் டீம் களமிறங்கி, அந்த இளம்பெண்ணை சீரழித்த கோட்டயம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்த 6 பேரைத் தூக்கினார்கள். அவர்களை விசாரித்த போதுதான், அந்த அருவருப்பான நெட் ஒர்க்கின் லீலைகள் முழுதும் அம்பலத்துக்கு வந்தன.

இது குறித்து விசாரணை டீம் அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது...

"அந்த இளம்பெண்ணின் கணவர் ரப்பர், தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்றவைகளை ஏற்றுமதி செய்யும் தொழிலில் நஷ்டமடைந் திருப்பவர். அதனால் கடன் தொல்லை. அதை மேக்கப் செய்ய, தன் இளம் மனைவியின் அழகை முதலாக்கத் திட்டமிட்டார். இதற்காகத் தன் மனைவியை தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவர், தன் மனைவியிடம், "உன்னை ஏன் அங்க கூட்டிப் போனேன் தெரியுமா. உன்னய என்னோட நண்பர்கள் பார்க்கணும்னு தான் அப்படி செஞ்சேன். அவர்களுக்கும் உன்னைப் பிடித்துபோய்விட்டது. நீ அவர்கள் மனம் கோணாமல் நடந்துக்கணும்'னு வற்புறுத்தியிருக்கார்.

Advertisment

ss

Advertisment

அவள் உடன்படாததால், இரவில் அவள் தூங்கும்போது அவளை ஆபாசமாக அவள் கணவனே படமெடுத்து, அதைக் காட்டிக் காட்டியே மிரட்டிப் பணிய வைத்திருக்கிறான். பல பேருடன் அவளைத் துன்புறுத்திக் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்திருக்கிறான். இதையெல்லாம் ஒருகட்டத்தில் பொறுக்க மாட்டாத அவள், போலீஸுக்கு வந்துவிட்டாள். இந்த விவகாரத்தை விசாரிக்கச் சென்றபோது, பார்ட்டி என்ற பெயரில் ஒருவருக்கொருவர் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் ஒரு கும்பலும் சிக்கியது.

இதேபோல், பெண்களே தங்களின் கணவன்மார்களைக் கட்டாயப்படுத்தி மற்றவன் மனைவிகளோடு ஈடுபடவைக்கும் குரூப் பற்றிய தகவலும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படி குழுக்கள் போன்று உருவான கிளப்புகள், ரகசியமாக ddகோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்கள் வரை வளர்ந்திருக்கின்றன. திருமண மாகி ஒரு வருடம் கழிந்த நிலையிலுள்ள மனைவிகளை மாற்றுகிற பழக்கம் கொண்ட மற்றொரு குரூப்பும் இருக்கிறதாம். சதைப்பசியை 16 வகைப் படையல் மூலம் தீர்த்துக் கொள்கிற இந்தச் சீரழிப்பு கும்பல்கள் கப்பிள் ஸ்வாப்பிங், கோட்டயம் ஸ்விங்கர்ஸ், மல்லு கப்பிள் என 14 வகையான குரூப்களில் அடையாளம் கண்டிருக்கிறோம். எர்ணாகுளத்தின் பாலாரி வட்டப் பகுதியிலிருக்கிற அசிஸ்சியா ஹால், அடுத்து கோட்டயம் சிவில் லைன் ரோடு பகுதியிலிருக்கும் ஒபிரான் ஹால் போன்ற வைகள் இது போன்ற ரகசியக் குழுக்கள் சங்கமிக்கிற ஸ்பாட்டுகளாக இருக்கின்றன'' என்று ரொம்பவே அதிரவைத்தனர்.

சங்கனாச்சேரி வழக்கில் ஆஜராக இருக்கும் சிறப்பு கோர்ட்டின் வழக்கறிஞரான தாரிப்பள்ளி ரவீந்திரனை நாம் தொடர்பு கொண்டபோது, "வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இது பற்றிப் பேச இயலாது'’என்று முடித்துக் கொண்டார்.

கொல்லம் மாவட்ட ரூரல் எஸ்.பியான கே.பி.ரவியோ, "சில முக்கியப் பகுதிகளைக் கண்காணிப்பு ஷேடோவிற்குள் கொண்டு வந்திருக்கிறோம்''’என்கிறார்.

dd

கேரள மாநில மகளிர் நல ஆணையத் தலைவியான சதிதேவி, "பாதிக்கப்பட்ட பெண், தைரியமாகப் புகார் கொடுத்திருப்பதைப் பாராட்டுகிறேன். அவர் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அவரைப் போன்று பல பெண்கள் இந்த வலையில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் ஆன்லைன் வழியாகவும் புகார் கொடுக்கலாம். அவர்களுக்குப் பாதுகாப்பு தரப்படும்''’என்கிறார் அழுத்தமாய்.

மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம், கேரளாவில் ஊடுருவி வருவது பலரையும் அதிர வைத்திருக்கிறது.