Advertisment

கணவன் மனைவியான திருநம்பியும், பெண்ணும்! புதுமையான சட்டப்போராட்டம்!

dd

விருதுநகர் மாவட்டத்தில் அழகா புரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் ஃபாஷ். திருநம்பியான இவரும், காஞ்சிபுரம் மாவட்டம், திரு முக்கூடலைச் சேர்ந்த அருணா தேவி என்ற பெண்ணும் காத-த்து வந்தனர். இருவருக்கு மிடையே சட்டப் பூர்வமாகத் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக, கேரளாவுக்கு சென்று, அங்கு வழக்கறிஞராக உள்ள ஒரு திருநங்கை யிடம் உதவிகேட்டனர். அவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில், தம்மம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் பிரியா என்ற திருந

விருதுநகர் மாவட்டத்தில் அழகா புரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் ஃபாஷ். திருநம்பியான இவரும், காஞ்சிபுரம் மாவட்டம், திரு முக்கூடலைச் சேர்ந்த அருணா தேவி என்ற பெண்ணும் காத-த்து வந்தனர். இருவருக்கு மிடையே சட்டப் பூர்வமாகத் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக, கேரளாவுக்கு சென்று, அங்கு வழக்கறிஞராக உள்ள ஒரு திருநங்கை யிடம் உதவிகேட்டனர். அவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில், தம்மம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் பிரியா என்ற திருநங்கையிடம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு திருநங்கை பிரியா, மனித உரிமை செயற்பாட் டாளரும் மூத்த வழக்கறிஞ ரான ப.பா. மோகனை அணுகி, அவர் மூலமாக கோபிசெட்டிபாளையத்தி லுள்ள மனிதம் சட்ட உரிமை மையத்தில் இந்த காதல் ஜோடியை ஆஜர் படுத்தி, இவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisment

dd

மனிதம் சட்ட உரிமை மையத்தின் நிறுவன வழக்கறிஞர் சென்னியப்பன், மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆகியோர் இணைந்து, கடந்த 14ஆம் தேதி திருநம்பியான அருண் ஃபாஷ்க்கும், இயல்பான பெண்ணான அருணா தேவிக்கும் சட்ட முறைப்படி திருமணம் நடத்தியுள்ளனர். இவர்களின் திருமணத் தைப் பதிவு செய்ய கோபிசெட்டி பாளையம் பதிவாளருக்கு மனு செய்தனர்.

தமிழகத்தில் ஏற்கெனவே இதேபோல் ஒரு திருமணம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்று, அதன் மூலமாகத்தான் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் தீர்ப்பு வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு, அருண்குமார், ஸ்ரீஜா என்கிற திருநம்பி, திருநங்கை இருவரும் திருமணம் செய்ததை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அங்கீகரித்தது. அந்தத் தீர்ப்பானது, திருநம்பி- திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதிசெய்தது.

dd

Advertisment

அதன்படி அப்போது திருமணம் செய்தவர்களில் ஒருவர் திருநம்பி இன்னொருவர் திருநங்கை. ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு இயல்பான பெண்ணும் திருநம்பியும் திருமணம் செய்தது இதுதான் முதல்முறை. மனித சமூகத்தில் தன்பால் இனத்தவர்கள், இருபால் இனத்தவர்கள், மூன்றாம் பால் இனத்தவர்கள் என பாலின விருப்பம் கொண்ட மக்கள் வாழ்கிறார் கள். இத்தனை காலம் மூன்றாம் பாலினத்தவர் தன்பால் ஈர்ப்பு உடையவர்களின் திரு மணத்தை சட்டம் அங்கீ கரித்ததில்லை. மூன்றாம் பாலினத்தவரான திருநம்பிக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது, இந்திய அளவில் முதன்முறையாக தற்போது நடை பெற்றுள் ளது.

dd

இந்தத் திருமணத்திற்கு பல்வேறு சிக்கல்கள் அவர்களின் குடும்பத்தினர் மூலமாக வந்திருக்கிறது. இந்த நிலையில் இதை எதிர்கொண்டு இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், சென்னியப்பன், தம்மம் பவுண்டேஷன் திருநங்கை பிரியா உட்பட பலரும் ஒரு நம்பிக்கையை இந்த சமூகத்திற்கு விளைவித்துள்ளார்கள்.

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe