YR : மக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை-கடம்பூர் ராஜு * கரெக்ட்!! வேன் மேலே ஏறி மறைந்து படுத்துக்கிட்டுதான் சுட்டாங்க..!!

யுக : பா.ஜ.க. குறித்து எதிர்மறையான கருத்துக்களே பரவுகின்றன- தமிழிசை * ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டுன்னு நிரூபிக்கிறாங்க போல.!!

YugaR : ஆகம விதி மீறல்களால் அரசுக்கு ஆபத்து-ஜீயர் * அப்ப, அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை போல..!!

Advertisment

fb

மெத்த வீட்டான் : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த போலீஸ்க்கு 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது - செய்தி * துணை வட்டாட்சியர் சொன்னால் ப்யூன் கூட கேட்கமாட்டான் போலீஸ் கேட்குமாம்..

Advertisment

Thadikkaran : தமிழக அரசுக்கு ஆள யோக்யதை இல்லை.. விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்- பொன். ராதாகிருஷ்ணன் *அடுத்து என்ன, அது அவரோட சொந்த கருத்து. அதானே..!?

அஜ்மல் : பா.ஜ.க. சார்பில் 5 பேர் கொண்ட குழு தூத்துக்குடியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்-தமிழிசை * கட்சியில இருக்க 5 நிர்வாகிகளும் அங்கே போயிட்டா கமலாலயத்தை யாரு பாதுகாக்கிறது?-பொன்னார்

Ajmal : 125 கோடி மக்களும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசுவதாக மோடி பெருமிதம் * மாத்திச்சொல்றீங்க பிரதமரே அது அமித்ஷாவோட வளர்ச்சி.

AJ : தமிழகத்துக்கு வந்தால் தோசை தருவீர்களா? -மோடி * பூசைதான் கிடைக்கும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.

fb

Shivani : மக்களை அரசு பாதுகாக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது - செல்லூர் ராஜு* ஆலை நிர்வாகியோட மக்களை காப்பாற்றத்தானே சென்றாயன்..!!

உமர் : "தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா?' -மோடி * தூத்துக்குடி வந்து கேட்டு பாருங்க, கிடைத்தாலும் கிடைக்கும் ஜி.எஸ்.டி.யோடவே!

இதய நிலா : உலகிலேயே ஒரு நாளைக்கு 15 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலைசெய்யும் ஒரே பிரதமர் மோடிதான் - அமித்ஷா *18 மணிநேரம் உழைக்கிற காரணத்தால்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு வருத்தம் கூட தெரிவிக்க முடியலை!

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்