மானஸ்தன்: கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மையில்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் – -அமித்ஷா * அப்படியே கோவா, மணிப்பூர், நாகாலாந்து, பீகாருக்கும் சேர்த்து நடத்திட சொல்லுங் களேன்

மெத்த வீட்டான்: குமாரசாமியை முதல்வராக ஏற்க முடியாது -தமிழிசை * ஆமா எடப்பாடிதான் நமக்கு முதல்வர் -செல்லூர் ராஜூ

fb

Advertisment

ஹஜம்: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது -எடப்பாடி பழனிசாமி * இதை சொல்ற அதிகாரத்தை நீங்க டெல்லியில கேட்டுதானே வாங்குனீங்க!

மித்ரன்: கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா கண்ணீர் மல்க பேசினார் -செய்தி * இதெல்லாம் வசந்த மாளிகைலயே பாத்தாச்சு தண்ணிய குடி..!

மித்ரன்: கர்நாடகத்தில் காங்கிரசுக்கும், மஜத- வுக்கும் திருமணம் நடைபெற்று ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது -திருநாவுக்கரசர்* காங்கிரஸ்தான் பொண்ணு வீட்டுக்காரங்களா? இவ்ளோ எம்.எல்.ஏக்களை சீதனமா கொடுத்துருக்கீங்க...

Advertisment

தாடிக்காரன்: நடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ -ஆக வாய்ப்புகள் அதிகம்: -நடிகர் விஷால் *ஏன்யா, நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..!

fb

எனக்கொரு டவுட்: 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ 4,300 கோடி செலவு செய்த மத்திய பா.ஜ.க. அரசு -செய்தி *மெர்சல் பட ப்ரோ மோசனுக்கு எவ்வளவு செலவு பண்ணுனீங்க..!!

Rahim: கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது : டிடிவி தினகரன் * ஆனால் ஆர்.கே. நகர்லதான் டோக்கன் சிஸ்டத்தால் அடிபட்டுப்போச்சு.

Shivani: ""அ.ம.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'' -தினகரன் * அந்த 34 தொகுதி மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு சென்றாயன்..!?

அஜ்மல்: காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தனர் -முதல்வர் பழனிசாமி* பழைய ஆணியா புது ஆணியா முதல்வரே...?

Ajmal: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு *அந்த கட்டிடங்களை எல்லாம் டாஸ் மாக் ஆக்குவதற்கு ப்ளான் பண்றாங்க போல.

Ameen: நான் நோன்புக்கஞ்சி குடிக்கமாட் டேன் -எச்.ராஜா * ஆனா, அஜ்மீர் ஹோட்டல் பிரியாணிய மட்டும் ஆட்டைய போட்டு தின்பீங்க அப்படித்தானே

உமர்: கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான் மையில்லாததால் மீண்டும் தேர்தல் நடந்த வேண்டும் - அமித்ஷா * மீண்டும் எங்கு தேர்தல் வந்தாலும் நல்லதுதான், பெட்ரோல், டீசல் விலையாவது உயராமல் இருக்குமே!