ஆஹான்: இந்திய வரைபடம் முழுதும் எங்கள் கண்களுக்கு காவி நிறமாக தெரிகிறது -பக்தாள்ஸ் * எங்க கண்ணுக்கு தமிழ்நாடு மட்டும் நோட்டாவா தெரியுது ..

சக்தி: டீக்கடையில் அரசியல் பேசாதீர் பிறகு டீக் கடைக்காரர் பிரதமர் ஆவார்!! -நாடு boiler ஆகும்!!

fb

கிரியேட்டிவ் ராஜ்: பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யாவிற்கு பயணம் * முருகர் கூட ஒரு ரவுண்டுதான் சுத்துனாரு உலகத்த, எங்காளு ரெண்டவது ரவுண்டு ஆரம்பிச்சிட்டாப்ல

Advertisment

Arun: 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ.4300 கோடி செலவு செய்த மத்திய பா.ஜ.க. அரசு -செய்தி. * அடப்பாவிகளா இந்த காசுக்கு இரண்டு மாநில நீர் ஆதாரங்களை மேம் படுத்தி இருக்கலாம்யா.

fb

ரஹிம்: ஒவ்வொரு வருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. முதல்வர் பழனிசாமியின் ஸ்டைல் போல் யாருக்கும் வராது -திண்டுக்கல் சீனிவாசன் * தவழ்ந்தே காலடியை நோக்கி போவதுதானே நீங்க சொன்ன அவர் ஸ்டைல்?

அபிவீரன்: 20 வருஷமாக தேடப்படும் கொலை யாளி ராக்கெட் ராஜா வை போலீஸார் கைது செய்தனர் -செய்தி * எஸ்.வி.சேகர பிடிக்க 40 வருஷம் ஆகுமா ஆபீசர்?

Nishvetha: BJP, SSLC பெயிலு.... CONGRESS ஏழாவது பாஸு

Shivani: எம்.ஜி.ஆர். வழியில் ஊழலற்ற நல்லாட்சி வழங்குவேன் -பாஸ்கரன் * அடங்கொய்யால..! புதுசு புதுசா எங்கேருந்துயா வர்றீங்க..!?! இன்னும் எத்தனை பேருயா இருக்கீங்க!!