Yuga : முதலமைச்சர் பழனிசாமிக்கு துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வம் தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் * பார்ரா? என்னமோ அவரு ஆஸ்திரேலியாவிலும் இவரு அமெரிக்காவிலும் இருக்கிற மாதிரி பில்டப்பை..?

YR : ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு-கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு * ஒருவேளை எஸ்.வீ.சேகரை பத்திரமா பார்த்துக்கச்சொல்லி இருப்பாங்களோ.!!

Yuga : கட்சி தொடங்கிய நடிகர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தார்கள்-EPS * அட்ரா சக்க.!! MGR-யே கேள்வி கேட்கிற அளவுக்கு தலைவன் வளர்ந்திட்டாப்டி..?

YR : நாங்கள் விலாங்கு மீன் அல்ல; மக்களுக்கு நன்மை தரும் மீன்கள்-ஜெயக்குமார் * அதான் பி.ஜே.பி. விரித்த வலையில் ஈஸியா மாட்டிக்கிட்டீங்க..?

Advertisment

வேங்கை : காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பகத் சிங்கை சிறையில் பார்க்கவில்லை’ என்று பரப்புரையில் பொய் சொன்ன மோடி. * இதுமட்டுமா, இந்தியாவை வல்லரசு நாடா மாத்துறேனு 4 வருசமா பொய்தான் சொல்லிட்டு இருக்காரு.

fb

அஜ்மல் : கட்சி தொடங்குவதற்கு முன்பே 20% வாக்குகளை வைத்திருப்பவர் ரஜினி -தமிழருவி மணியன் * -அப்போ எங்க தலைவி ஜூலி யாரு.. பொறக்கும் போதே 30% வாக்குகளை வச்சிருக்காங்கய்யா என் சிப்சு..

தாடிக்காரன் : கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்-தமிழிசை * அப்போ தண்ணி வராதுன்னு சொல்றீங்க..!

புரூஸ் லீ : கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் - முதல்வர் பழனிசாமி * . மாண்புமிகு முதலமைச்சர் படுத்தேவிட்டாரய்யா...

எனக்கொரு டவுட் : என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது - நடிகர் ரஜினிகாந்த் * மிஸ்டு கால் நம்பரை சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..!

மித்ரன் : நதிகளை இணைக்க வேண்டும் என காலம்போன காலத்தில் சிலர் பேசி வருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி * இங்க மட்டும் என்ன இளமை ஊஞ்சல் ஆடுதாக்கும்!?

Azam : கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் - முதல்வர் பழனிசாமி * இதுவரைக்கும் நல்லது பண்ணுனததான் பார்த்தோமே, இனிமேலும் நல்லது பண்ணணுமா?

கிருஷ்ணா : நிருபர்: என்ன சார் "இரும்புத்திரை' படத்தில டிஜிட்டல் இந்தியாவ தப்பா பேசுன விஷாலுக்கு எதிரா ஏன் போராட்டம் நடத்தல? ராஜா : * தமிழ்ராக்கர்ஸ் பிரிண்ட்டுக்கா காத்துட்டு இருக்கோம்.

சோட்டா பீம் : கட்சி தொடங்கிய நடிகர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தார்கள்?- முதல்வர் பழனிசாமி கேள்வி * இந்தாளுக்கு ""எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடிகர்கள் தான்""னு எப்டி புரிய வைப்பேன்..

கார்த்திக் : ""தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டேன்"" - நடிகர் ரஜினிகாந்த் * வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் அதே டெக்னிக் இல்ல...

Sultan : கம்ப்யூட்டருக்கு செயற்கை அறிவூட்ட சமஸ்கிருதமே ஏற்ற மொழி - சுப்பிரமணியசாமி * ஆத்தி ஆகப்பெரிய லூசா இருப்பாரு போலயே..!