டந்த நவ 06-09 நாளிட்ட நக்கீரனில், "உள்ளடியால் கிடைத்த பதவிக்கு ஒரு கோடி டிமாண்ட்! தி.மு.க. சேர்மன் ராஜினாமா ரகசியம்!'’ என்ற தலைப்பில், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனின் தி.மு.க. சேர்மன், தன் பதவியை ராஜினாமா செய்த பின்னணியை அடி முதல் நுனி வரை விவரித்திருந்தோம்.

c

தி.மு.க.வின் தலைமையால் அறிவிக்கப்பட்ட சேர்மன் வேட்பாளர் ஜெயக்குமாரை வீழ்த்தி, அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவோடு சேர்மன் பதவியைக் கைப்பற்றிய தி.மு.க. கவுன்சிலர் செல்லம்மாள், தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செலவழித்த ஒரு கோடிக்கும் மேலான தொகையைக் கொடுக்க முடியாத நிலையில், தன் சேர்மன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதத்தை, தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தோம். மேலும், "அந்த விவகாரத்தின் பின்னணியில் ட்விஸ்ட்களுக்குப் பஞ்சமில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

நாம் கணித்தது போன்றே ட்ராமாவின் கிளைமேக்சுகள் அரங்கியேறியதையடுத்து, நவம்பர் 03 அன்று தனது சேர்மன் பதவியை ராஜினமா செய்வதற்காகக் கொடுத்த கடிதத்தை கலெக்ட ரிடமிருந்து திரும்பப்பெற்று தென்மாவட்ட அரசியல் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் செல்லம்மாள். கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவான ஒரு கோடியைத் தன்னால் தர இயலாது என்று தெரிவித்த செல்லம்மாள், தற்போது அந்த ஒரு "சி'’தொகையைக் கொடுத்து விட்டாரென் றும், அதனாலேயே தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுள்ளார். என்றும் பேச்சுகள் உலாவுகின்றன. இந்த ராஜினாமா வாபஸ் ட்ராமாவின் பின்னணியில் நடந்த விறுவிறுப்பான டீல்கள்தான் காரணம் என்கிறார்கள் கடையம் பகுதி அரசியல் புள்ளிகள்.

Advertisment

கவுன்சிலரோ அல்லது சேர்மனோ தனது ராஜினாமாவை இதுபோன்று கலெக்டரிடம் கொடுத்தாலும், அதை உடனடியாக ஏற்பதற்கான வழிமுறைகள் உள்ளாட்சி அமைப்புகளில் கிடையாது. முறைப்படி மாமன்ற உறுப்பினர் களின் கூட்டத்தைக் கூட்டி, ராஜி னாமாவை மன்றக் கவுன்சிலர் களின் கூட்டத்தில் விவாதித்த பின் அது ஏற்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், சம் பந்தப்பட்ட யூனியன், அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையருக்கு அனுப்பப்படும். பின்னர் அத்தீர்மானம் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அவருடைய பரிசீலனைக்கு பின்னர் மாவட்டக் கலெக்டருக்கு அனுப்பப்படும்.

cc

அவர் பரிசீலித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார். அதை யடுத்து தேர்தல் ஆணையர் ஆய்வு நடத்தி, தேவைப்பட்டால் சில விளக்கங்களையும் பெற்று இறுதியாக ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிப் பார். பின்னர் அப்பதவிக்கு மறுதேர்தல் நடத்தப்படும். இந்தச் சம்பிரதாயங்கள் ஜவ்வாக இழுத்து முடிவு தெரிவதற்கு ஒரு வருடம்கூட ஆகலாம். அதற்குள் கிடைத்த அவகாசத்தில் சேர்மன் பொறுப்பில் ஸ்டெடியாகிவிட லாம். தற்போதைய சூழலில் கடையம் யூனியனில் மூன்று "சி'-வரை ஃபண்ட் உள்ளது. மேலும், யூனியனின் திட்டப் பணிகளுக்கான நிதிகளும் வரக்கூடும். இந்த நிதிகளை பணிகளுக்கான கான்ட்ராக்ட் கொடுக்கும்போது கிடைக்கும் கமிஷன் மூலம், கட்சி வேட் பாளருக்குத் தரவேண்டிய ஒரு "சி'யைக் கொடுத்துவிடலாமென்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.

Advertisment

அதையடுத்து, கரன்ஸியில் வலுவான காண்ட்ராக்டர் ஒருவருக்கே கான்ட்ராக்ட் டைத் தருவதாக பேசப்பட்டு, கிடைத்த வைட்டமின் ஒரு "சி'-யை, மா.செ. தரப்பிடம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கெனத் திரும்பத் தருவதற்கெனக் கொடுக்கப்பட்டி ருக்கிறதாம். இந்தத் தகவல் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டதால், அங்கிருந்து கிடைத்த சிக்னலைக் கொண்டு செல்லம்மாளின் ராஜினாமா திரும்பப் பெறப்பட்டுள்ளதாம். அதே சமயம், தகவல் தென்காசி மாவட்டக் கலெக்டருக்கும் தெரிவிக்கப்பட, கலெக்டரும் ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுமாறு செல்லம்மாளுக்குத் தகவல் கொடுக்க, கடந்த 03-ம் தேதியன்று கலெக்டரிடமிருந்து தன் ராஜினாமா கடிதத்தை செல்லம்மாள் திரும்பப் பெற்றதாக விவரிக்கிறார்கள்.

இது குறித்து கவுன்சிலர் ஜெயக்குமாரிடம் கேட்டதில், "சொல் றாங்க,…ஆனால் எனக்குப் பணம் வந்து சேரவில்லை''’என்கிறார். மா.செ. சிவ பத்மநாபனோ, “"செலவுத் தொகையான ஒரு கோடியைக் கொடுத்து விட்டார்கள். முறைப்படி கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகே, செல்லம்மாள் தன் ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற் றுள்ளார். தகவலை ஜெயக்குமாருக்கும் சொல்லிவிட்டேன்''’என்றார்.

சேர்மன் செல்லம்மாளின் தரப்பில் அவரது கணவர் முருகனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “"கட்சித் தலைமையிடம் தெரிவிப்பதற்காக, ஏற்கனவே எங்கள் தரப்பு நிலையைச் சொல்லி அமைப்புச் செயலாளரிடம் மனு கொடுத்திருந்தேன். தலைமை கேட்டபோது எங்கள் தரப்பு நியாயத்தைச் சொன்னோம். எதிர் வேட்பாளர் மேல உள்ள அதிருப்தியில்தான் எல்லா கவுன்சிலரும் ஒட்டுமொத்தமா எங்கள நிக்கச்சொல்லி நிப்பாட்டுனாங்க. நாங்க ரொம்ப வருஷமா கட்சியிலிருக்கோம். அவரு ஒன்றரை வருஷத்துக்கு முன்னதான் கட்சிக்கு வந்தாருன்னேன். அதுக்கப்புறம், உளவுத்துறை ரிப்போர்ட்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு தான், "அந்தம்மாவே கன்டினியூ பண்ணட்டும், தொந்தரவு பண்ண வேண்டாம்'னு தலைமையிலிருந்து சொன்ன பிறகுதான் ராஜினாமாவை வாபஸ் வாங்குனோம். அதேநேரம், கலெக்டர் ஆபீசிலிருந்தும் வரச் சொன்னாங்க'' என்றவர், "அது மாதிரி தேர்தல் செலவு பணம்லாம் நாங்க குடுக்கல. கடந்த 06-09 தேதியிட்ட இதழில் என் மனைவி தோட்டத்தில் வேலை செய்வதாக வெளியான செய்தி தவறானது. நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது மகன், மகள்கள் பட்டதாரிகள். 1990-களிலிருந்தே தி.மு.க.வில் படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான்'' என்றார்.