நீதியை நிலை நாட்டிய மனித உரிமை வழக்கறிஞர்! -ஒரு தாயின் உணர்வுப் போராட்டம்!

dd

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா 2015 செப்ட

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா 2015 செப்டம்பர் 15-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

llll

இந்நிலையில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேர் கைது செய் யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெறும்போதே, சந்திரசேக ரன், அவரது மனைவி ஜோதி மணி ஆகியோர் இறந்துவிட்டனர். பிப்ரவரி 9-ம் தேதி இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலை யில், மார்ச் 5-ம் தேதி வெளியான தீர்ப்பில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு வழங்கினார். மீதமுள்ள 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பைக் கேட்ட கோகுல்ராஜின் தாய் சித்ரா, வானத்தை நோக்கிக் கையெடுத்துக் கும் பிட்டபடி அழுதுகொண் டே, "இந்தத் தீர்ப்புக்காகத் தான் தம்பி இந்த உசிர கையில புடிச்சுக்கிட்டு காத்திருந்தேன். என் கண்ண மூடு வதுக்குள் என் மகனை துடிக்கத் துடிக்கக் கொன்னவனுக்கு தெய்வம் என்ன தண்டனை கொடுக்குமோ அதைப் பார்த்துவிட்டுதான் கண்ண மூடணும்னு காத்துக்கெடந்தேன் சாமி''’என்றவர்... "இப்ப என்னோட இன்னொரு மகனுக்கும் மிரட்டல் வரத் தொடங்கிருக்கு. என்னோட ஒரு மகனை பாழாப்போன சாதி வெறிக்கு தூக்கிக் குடுத்துட்டேன். அடுத்த தலைமுறைய காப்பாத்த எங்க குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் சாமி'' என்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், "கோகுல்ராஜும் அந்தப் பெண்ணும் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த யுவராஜ், அந்தப் பெண் தன்னுடைய சாதி என்பதையும், கோகுல் ராஜ் பட்டியலினத் தைச் சேர்ந்தவர் என்பதையும் அறிந்து கொண்டதும், அந்த இளம்பெண்ணை தன்னோடு வந்திருந்த சந்திரசேகர், ஜோதிமணி என்ற தம்பதியோடு அனுப்பிவிட்டு, கோகுல்ராஜின் செல்போனில் தான் தற்கொலை செய்துகொள்வ தாக பேசவைத்து, அவரை தலை வேறு உடல் வேறாக வெட்டி, ரெயில்வே தண்டவாளத்தில் போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் செட்டப் செய்தார். காதலித்த பெண் சுவாதி பிறழ்சாட்சியானபோதும், சி.சி.டி.வி கேமரா பதிவும், சில சாட்சி யங்களும், நாம் எடுத்துவைத்த வாதங்களுமே குற்றவாளியை உறுதிப்படுத்தியது. இத்தீர்ப்பு ஆணவக்கொலை செய்யத் துணிபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி'' என்றார்.

nkn090322
இதையும் படியுங்கள்
Subscribe