Advertisment

மனித உரிமைப் போராளி மதுரை "சோகோ' மகபூப் பாட்ஷா!

ss

ந்தியா முழுவதிலும் மனித உரிமைத் தளங்களில் நன்கு அறிமுகமான மதுரை சோகோ பாட்ஷா என்ற மகபூப் பாட்ஷா பிப்ரவரி 14, மாலை 5 மணியளவில் காலமானார் என்ற செய்தி இந்தியா எங்குமுள்ள சமூக ஆர்வலர்கள், மனிதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.

Advertisment

மகபூப் பாட்ஷாவின் மனித உரிமைச் செயல் பாடுகளின் நீள அகலங்களை அறிந்துகொள்ள, சோகோ அறக்கட்டளையின் துணை இயக்குனர் செல்வகோமதியைச் சந்தித்தோம்

bb

"மதுரையில் பிறந்து வளர்ந்து சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மஹபூப் பாட்ஷா வால், 1982, அக்டோபர் 11-ஆம் தேதி விளிம்பு நிலை மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த, துணைநிற்க ஆரம்பிக்கப் பட்டதே சோகோ அறக்கட்டளை. குரலற்றவர்களின் குரலாக இந்த அறக்கட்டளை திகழ்ந்தது. இது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரால் தொடங்கிவைக்கபட்டது.

Advertisment

42 ஆண்டுகளாக, சோகோவின் இயக்குநராக அவர் சமூகப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித் துள்ளார். "நிஜங்கள்' என்ற பத்திரிகையை நடத்தி வந்த பாட்ஷா, மக்கள் போராட்டங்களில் இரு முறை சிறை சென்றவர். மதுரை சிறையின் அன் றைய நிலை குறித்து அவர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதங்கள் பரவலான கவனம்பெற்றன.

கொடைக்கானலில் குடியமர்த்தப்பட்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வழக்கில் அவரது நெடுநாள் நண்பர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி இருவருடன் இணைந்து பணியாற்றினார்.

bb

நண்பர்கள் ராஜகோபால், ராஜ்குமார், மசினகுடி பிரான்சிஸ், சுப்பு, ஸ்ரீதர் ஆகியோருடன் தொடங்கிய சோகோ அறக் கட்டளை, கல்லூரி மாணவர்களுக் கான பயிற்சி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பய

ந்தியா முழுவதிலும் மனித உரிமைத் தளங்களில் நன்கு அறிமுகமான மதுரை சோகோ பாட்ஷா என்ற மகபூப் பாட்ஷா பிப்ரவரி 14, மாலை 5 மணியளவில் காலமானார் என்ற செய்தி இந்தியா எங்குமுள்ள சமூக ஆர்வலர்கள், மனிதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.

Advertisment

மகபூப் பாட்ஷாவின் மனித உரிமைச் செயல் பாடுகளின் நீள அகலங்களை அறிந்துகொள்ள, சோகோ அறக்கட்டளையின் துணை இயக்குனர் செல்வகோமதியைச் சந்தித்தோம்

bb

"மதுரையில் பிறந்து வளர்ந்து சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மஹபூப் பாட்ஷா வால், 1982, அக்டோபர் 11-ஆம் தேதி விளிம்பு நிலை மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த, துணைநிற்க ஆரம்பிக்கப் பட்டதே சோகோ அறக்கட்டளை. குரலற்றவர்களின் குரலாக இந்த அறக்கட்டளை திகழ்ந்தது. இது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரால் தொடங்கிவைக்கபட்டது.

Advertisment

42 ஆண்டுகளாக, சோகோவின் இயக்குநராக அவர் சமூகப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித் துள்ளார். "நிஜங்கள்' என்ற பத்திரிகையை நடத்தி வந்த பாட்ஷா, மக்கள் போராட்டங்களில் இரு முறை சிறை சென்றவர். மதுரை சிறையின் அன் றைய நிலை குறித்து அவர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதங்கள் பரவலான கவனம்பெற்றன.

கொடைக்கானலில் குடியமர்த்தப்பட்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வழக்கில் அவரது நெடுநாள் நண்பர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி இருவருடன் இணைந்து பணியாற்றினார்.

bb

நண்பர்கள் ராஜகோபால், ராஜ்குமார், மசினகுடி பிரான்சிஸ், சுப்பு, ஸ்ரீதர் ஆகியோருடன் தொடங்கிய சோகோ அறக் கட்டளை, கல்லூரி மாணவர்களுக் கான பயிற்சி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பயிற்சி, பெண்களுக்கான பயிற்சி என மனித உரிமைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதில் துணைநின்றது. பழங்குடியின பளியர் சமூக மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதிகளில் சிறு வனப்பொருள் சேகரிக்கும் குத்தகைதாரர்களிடம் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்தபோது, அவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்னின்றார்.

வடஇந்தியாவில் முறுக்கு, இனிப்பு செய்யும் தொழில்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டு குழந்தைத் தொழிலாளர்களை, சோகோவில் பயிற்சிபெற்ற வழக்கறிஞர்கள் அழகுமணி, பாபுலால், சமூகவியல் பயின்ற பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உதவி யுடன் மீட்டு மறுவாழ்வுப் பணிகளை செய்ய துணைநின்றார். மனித உரிமை தொடர்பான அவரது நீண்டகாலப் போராட்டத்தால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என். பகவதி, டி.ஏ. தேசாய், பி.பி. சாவந்த், சிவராஜ் பாட்டீல், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் என நீதித்துறையில் நண்பராக ஆனவர்கள் பலர்.

தற்போதைய இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணி, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி, பீல் வின்சென்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பொன். கிருஷ்ணசாமியுடன் இணைந்து நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வாழ்க்கை வரலாற்றை எழுத, பல மாதங்கள் கிருஷ்ணய்யருடைய சத்கமயா வீட்டின் பின்புறமுள்ள சிறு ஹோட்டல் அறையில் தங்கி, கிருஷ்ணய்யருடன் நடை பயிற்சிக்கு செல்லும்போது தினமும் நீண்ட உரையாடலை நிகழ்த்தினார். நீதிபதி கிருஷ்ணய்யரின் அனைத்துத் தீர்ப்புகளையும் வாசித்து, அவற்றில் பெரும்பாலான வற்றை தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்கும் சொந்தக்காரர் சோகோ பாட்ஷா.

சோகோவின் ஆவணக் காப்பகத்தை நூலகர் ஜி.என். பாபு துணையுடன் பராமரித்த அவர், குஜராத் போக்ராம், ஊட்டி தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினைகள், நூற்பாலையில் பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகள் என ஏராள மான தமிழ், ஆங்கில மனித உரிமை ஆவணங்களை யும் நூல்களையும் வெளியிட்டார். ஒரிசாவில் இறைப்பணியாளர் ஸ்டெயின்ஸ் தாராசிங்கின் குடும்பம் இந்து தீவிரவாத அமைப்பால் கொல்லப் பட்டதை எதிர்த்து கூட்டங்களை நடத்தியவர். மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு சட்டப் போராட்டங்கள், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் கூட்டங்கள் நடத்தினார். கலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டில் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரை பங்குபெறச்செய்து, “பெயரில் கருணையை வைத்திருக் கும் நீங்கள் மரண தண்டனைக்கு எதிராக உங்கள் கருணையைக் காட்டுங்கள்”என்று பேசுவதற்கு பின்புலமாக சோகோ மகபூப் பாட்ஷா இருந்தார்.

vv

பாசிச சித்தாந்தங்கள், மதவெறி இனிவரும் இளம் தலைமுறையினரை ஆட்கொண்டுவிடக் கூடாது என்று கவலைகொண்டிருந்த மகபூப் பாட்ஷா, 1998-ல் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கையில் வாங்கிய சமூகச் செயற்பாட்டாளர் விருது முதல் வீடு கொள்ளாத அளவிற்கு அவர் பெற்ற மனித உரிமை விருதுகள் உள்ளன. இனி அய்யா வின் வழியில் எங்கள் பயணம் தொடரும்''’என்று கண்கலங்கினார் செல்வகோமதி.

வீரப்பன் பிரச்சனை விஸ்வரூபமெடுத் திருந்த காலகட்டத்தில் நக்கீரன் தொடர்ச்சியாக வனப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் அதிரடிப் படையினரால் அனுபவித்த சித்ரவதைக் கொடுமைகளை உலகம் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இணையாக அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி, அவர்களுக்கான சட்டப் போராட்டத்தில் தொடர்ச்சியாக தனது பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார் சோகோ மகபூப் பாட்ஷா.

அச்சூழ்நிலையில், 20.11.1997 அன்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்த அத்துமீறல்களை விசாரிக்கவேண்டி ஒரு கடிதமனுப்பினார். 22.11.1997-ல் சோகோ அறக்கட்டளையின் சார்பில் அ.மகபூப் பாட்சா, மேற்கண்ட அதிரடிப்படையினர் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்குப் புகாரனுப்பினார்.

121 நபர்கள் தடா குற்றச்சாட் டில் கைதுசெய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 70 பேர் மூன்றாண்டுச் சிறைவாசத்திற்குப் பின்பு பிணை யில் விடுவிக்கப்பட்டனர். மற்ற 51 பேர் தொடர்ந்து சிறையில் வாடிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு விசாரணை, பிணை, பரோல் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. இவர்களின் அவலநிலை குறித்தே அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி சதாசிவா என்ற அதிகாரியை நியமித்து விசா ரணை அறிக்கை பெற்றது.

மனித உரிமை மீறலில் ஒத்த கருத்துள்ள பலரையும் ஒருங்கிணைத்து பெங்களூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அ.மகபூப் பாட்சா பேசும்போது, "விசாரணைக்காக நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. ஆனால் சாமான் யனுக்கு கடைக்கண் கருணை காட்டக்கூட தயங்குகிறது தேசிய மனித உரிமை ஆணையம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் அடிப்படை உரிமை ஏட்டில் மட்டும்தானா? இல்லை, எளிய மனிதனுக்கும் நீதி கிடைக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும்''’என்றார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால், தனது பத்தி ரிகை அனுபவங்களில் எதிர்கொண்ட சவால்களை "சேலஞ்ச்' புத்தகமாகக் கொண்டுவந்தபோது, நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் முன்னுரை இருந்தால் நன்றாக இருக்குமென விரும்பினார். அப்போது சோகோ அறக்கட்டளை மகபூப் பாட்ஷா, நீதியரசரை அணுகி இந்தப் புத்தகத்தை அவரது கவனத்துக்குக் கொண்டுசென்றார். இதைப் படித்துவிட்டுத்தான், "உண்மையைக் காப்பாற்றவும், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பணியாற்றவும் நக்கீரன் காட்டிய மாவீரம் வியந்து போற்றத்தக் கது. ஆட்சியாளர்களின் தவறுகளை ஊசலாட்டம் இல்லாமல் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. இந்திய பத்திரிகை உலகத்துக்கு நக்கீரன் கோபால் சொல்லும் செய்தி நக்கீரனிசம்'’என்று நீதியரசர் கிருஷ்ணய்யர் பாராட்டினார்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், “"விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபால் கைதுசெய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறை களை உரிய முறையில் பின் பற்றவேண்டும் என்றது. அதற் கும் முன்பாகவே, கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்கா மல் யாரையும் கைதுசெய்யக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஆ பிரிவு இருக்கிறது என் பதை பலரிடமும் கூறிவந்தவர் தோழர் அ.மகபூப் பாட்சா''’என்றார்.

இந்த உலகில் அரசியலிலோ, வணிகத்திலோ வெற்றி பெற்றவர்கள் ஆயிரம், ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் தன்னலம் நாடாது மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டக் களத்துக்கு தங்கள் முழு வாழ்வையும் அர்ப்பணித் தவர்கள் வெகு சிலரே! அந்த வெகு சிலரில் சோகோ மகபூப் பாட்ஷாவும் ஒருவர்.

சோகோ பாட்சா மறைவிற்கு இடதுசாரித் தோழர்கள், திராவிட கழக நண்பர்கள், மனித உரிமைத் தள செயல்பாட்டாளர்கள், சூழலியலாளர்கள், வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடங்கி மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பாலபாரதி என்று பல தரப்புகளில் இருந்தும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

-அண்ணல், சுந்தர் சிவலிங்கம்

nkn210224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe