விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது ஈச்சங்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குப்புவின் தங்கை மகள் பிளஸ் ஒன் படிக் கும் 16 வயது மாணவி. இவருக்கு சில தினங் களுக்கு முன்பு திடீரென்று

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெரியம்மா புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பûதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மாணவியின் பெரியம்மா, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை அழைத்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெரியம்மா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைல்டு லைன் குழுவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

Advertisment

rr

பல்வேறு தரப்பும் விசாரணை நடத்தியதில் மாணவியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராஜும் இவ்விவகாரத்தில் விசாரணை செய்தார்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர், செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினியிடம் இந்த வழக்கின் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரியதர்ஷினி விசாரணைக்குப் பின் இதில் தொடர்புடையவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியைச் சேர்ந்த 77 வயது முதியவர் மண்ணாங்கட்டி என்கிற வெங்கடேசன், மாணவியின் பெரியம்மா மகன் 30 வயது மோகன், இருபத்தி எட்டு வயது இளையராஜா ஆகியோரும், 25 வயது வெங்கடேசன், 37 வயது பிரபு, 22 வயது பாபு, 30 வயது சத்யராஜ் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏழுமலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்ததாக, மகளிர் காவல் நிலையத்தில் மாணவிக்கு ஆதரவாக புகார் கொடுத்த மாணவியின் பெரியம்மா குப்பு மீதும் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.. மேற்படி 8 பேரும் போக்சோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவிக்கு எப்படி இந்த கொடூரம் நிகழ்ந்தது என்பது குறித்து போலீசாரிடம் நாம் கேட்டபோது, “"பாதிக்கப்பட்ட மாணவி அவருடன் பிறந்த மூத்த சகோதரி என இரு பெண் பிள்ளைகள். இவர்களது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த இரு பெண் பிள்ளைகளும் அவரது பெரியம்மா குப்பு பராமரிப்பில் வளர்ந்துள்ளனர். மாணவியின் மூத்த சகோதரியை ஏற்கனவே திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

மாணவி பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியிலுள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கிப் படித்துவந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விடுதி நிர்வாகத்தினர் மாணவியை அவரது பெரியம்மாவுடன் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். பெரியம்மா ஊரான ஈச்சம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். பெரியம்மா வீட்டில் இருந்தபடி பள்ளிக்குச் சென்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் ஆதரவற்ற நிலையில் உள்ளதைத் தெரிந்துகொண்ட மேற்படி நபர்கள் ஒவ்வொருவராக அவ்வப்போது மாணவியை வேட்டையாடி வந்துள்ளனர். அதில் கொடூரம் என்னவென்றால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவியின் பெரியம்மா மகன் மோகனும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதுதான்'' என்கின்றனர்.

தற்போது விழுப்புரத்திலுள்ள அரசு காப்பகத்தில் அந்த மாணவி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் காவல்துறையினர்.

Advertisment