தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சியின் முக்கிய நோக்கமானது, குடிமக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, நகரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழி வகுப்ப தாகும். மாநகராட்சி மேயரின் முக்கிய கடமை களானது, நகரின் நிர்வாகத்தை மேற்பார்வை யிடுதல், பட்ஜெட்டை நிர்வகித்தல், பொதுப் பாது காப்பு, போக்குவரத்து மற்றும் குடிமக்களுக்கான சேவைகளை உறுதி செய்வதாகும். தங்களைத் தேர்ந்தெடுத்த வார்டு மக்களின் குரலை மாமன்றத் தில் ஒலித்து, அந்த வார்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதே மாநகராட்சி கவுன்சிலர்களின் பிரதான கடமையாகும்.
‘மாநகராட்சியோ, மேயரோ, வார்டு கவுன்சிலர்களோ, தங்களது கடமையைச் சரிவர நிறைவேற்றி வருகின்றனரா? கோவையிலும், திருநெல்வேலியிலும் மேயர்கள் மாற்றப்பட்டனரே? மாநகராட்சி கூட்டம் என்றாலே கூச்சலும் குழப்பமும் நிலவுகிறúது. மாநகராட்சியில் என்னதான் நடக்கிறது?’ என்ற ஆதங்கம் எழ, சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. மேயர் சங்கீதா இன்பத்துக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி யிருக்கின்றனர்.
‘சிவகாசி மாநகராட்சியில் மேயரும் கவுன்சிலர்களும் மோதிக்கொண்டது ஏன்?’ என்ற கேள்வியுடன் களமிறங்கினோம். அனைத்துத் தரப்பினரையும் சந்தித்தபோது, நேர்மையான கவுன்சிலர்கள் இருவர் "சிவகாசியில் மட்டுமல்ல.. அனைத்து மாநகராட்சிகளிலும் இதே நிலை தான்''’ என்று வில்லங்கமான விவகாரங்களை விவரித்தனர்.
பணத்தை பங்கு பிரிப்பதே பிரதானம்!
மேயர் சங்கீதா மாநகராட்சி உறுப்பினர் களை மதிப்பதில்லை. விவாதம் நடத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தீர்மானங்களை நிறைவேற்றுகிறார். மேயரின் கணவர் இன்பம் அரசியலுக்கு லாயக்கில்லாதவர். ஒருவித ரவுடி இமேஜுடன் மிரட்டும் பாணியிலேயே நடந்து கொள்கிறார். குறிப்பாக, பெண் உறுப்பினர்களை மரியாதை இல்லாமல் பேசுகிறார்.’ என்கிற ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பங்கு பிரித்தலே பிரதானமாக உள்ளது.
கூட்டத்தில் அமளிதுமளி பண்ண
முதல்நாளே ரிகர்ஸல்!
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற 11 கவுன்சிலர்களில், ஆளும்கட்சி கவுன்சிலராக இருப்பதே பலனளிக்கும் என்ற தெளிவோடு தி.மு.க.வுக்கு தாவியவர்கள் 9 பேர். இவர்களில் 7 கவுன்சிலர்கள், ஒரிஜினல் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரை கையில் எடுத்துள்ளனர். மூவர் கூட்டணி யின் தூண்டுதலில் மொத்தம் 13 தி.மு.க. கவுன் சிலர்கள் மேயர் சங்கீதாவை உள்நோக்கத்துடன் வலுவாக எதிர்த்துவருகின்றனர். மேயராகும் ஆசை யாருக்குத்தான் இல்லை எனச் சொல்லும்படியாகச் சில பெண் உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளன. சங்கீதாவைக் காட்டிலும் எந்தவிதத்தில் நான் குறைந்துபோனேன் என்ற பொறாமைத் தீயே, மாமன்ற விவாதங்களின்போது அனலைக் கக்குகிறது.
"சிவகாசி மேயர் பதவி நாடார் சமுதாயத் துக்கு நிரந்தரமாகிவிடக்கூடாது. சங்கீதாவை இன்னும் ஏன் விட்டுவச்சிருக்கீங்க?'’என்று மாமன்றத்துக்கு வெளியே ஜாதிரீதியாக ஒரு ‘ராஜா’ உசுப்பேற்றியபடியே இருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட ஜாதியினர் கட்சி நிர்வாகப் பொறுப்புகளை வெறும் லேபிளாகப் பயன்படுத்திக்கொண்டு, தி.மு.க. வளர்ச்சியில் துளிகூட அக்கறைகாட்டாமல் பல ஆண்டுகளாக இருந்துவருவதுதான். இந்தப் பழைய கணக்குதான் புதுமுகம் சங்கீதாவை மேயர் நாற் காலியில் அமரவைத்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு சிவகாசியில் அதிக வாக்கு களைப் பெற்றுத்தந்து கரை சேர்த்தது. ஆனாலும், மாநகராட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவரது வீட்டில், சங்கீதாவைத் திணறடிக்க எந்தெந்த விவகாரங்களைக் கையில் எடுக்கலாம், என்னென்ன பேசலாம் என்று முதல்நாளே ஒன்றுகூடி ரிகர்ஸல் பார்த்துவிட்டு, மறுநாள் அமளிதுமளியில் ஈடுபடுகிறார்கள், சில தி.மு.க. கவுன்சிலர்கள்.
முதலீட்டுக்கு மேல் லாபம் என்பதே குறிக்கோள்!
திருத்தங்கல் நகராட்சியும் இணைக்கப்பட்டே சிவகாசி மாநகராட்சியானது. ஆனால், மேயருட னான மோதலில் திருத்தங்கல் வார்டு கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு மனநிலையிலேயே உள்ளனர். மொத்தம் உள்ள 48 வார்டு கவுன்சிலர்களில் தோராய மாக பாதிப்பேர் அர சியலை முழுநேரத் தொழி லாகக் கொண்டவர்கள். அதனால், அரசியல் சேவைக்கான சன்மானம் அவர்களுக்குக் கிடைத்தே ஆகவேண்டும். இத்தனைக் கும் அரசாங்கம் தரும் மாதச் சம்பளம் ரூ.10 ஆயிரமும், டென்டர் கவர் மூலம் தோராயமாக மாதம் தோறும் ரூ.25 ஆயிரமும் கைநீட்டும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் பங்குத் தொகையாகக் கிடைத்து விடுகிறது. இது அவர்களுக் குப் போதுமானதாக இல்லை. வார்டு கவுன் சிலருக்குப் போட்டியிட கட்சியே ரூ.10 லட்சம் தந்தது. மேற்கொண்டு சில பல லட்சங்களைச் செல விட்டே அவர்களால் கவுன்சிலராக முடிந்தது. போட்ட முதலீட்டை எடுக்கவேண்டும், அதற்கு மேல் பெருத்த லாபம் ஈட்டவேண்டும் என்ற வியாபாரக் கணக்கோடு தான், மேயரிலிருந்து கவுன்சிலர்கள் வரைக்கும் செயல்படுகின்றனர்.
தீர்வை மோசடியால் அரசுக்கு பேரிழப்பு!
அ.தி.மு.க. ஆட்சியில் திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது பல டெண்டர்களிலும் வேலை நடக்காமலே நடந்ததாகக் கணக்கு எழுதப்பட்டு, 60 சதவீதத்தை தலைவர் எடுத்துக்கொண்டு, 40 சத வீதத்தை கவுன்சிலர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தங்கல் பகுதியில் தீர்வை செலுத்து வதில் பெரிய அளவில் மோசடி நடந்துவருகிறது. சில ஆயிரங்கள் கையூட்டுக்காக, அலுவலகங் களையும், தொழிற்சாலைகளையும் திட்டமிட்டே குடியிருப்புகள் எனத் தவறாக மதிப்பீடு செய்து, மிகக்குறைந்த தீர்வையை வசூலித்து, அரசுக்கு கிடைக்கவேண்டிய வரி வருவாயில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்தக் கல்யாண மண்டபம் செலுத்திவரும் தீர்வை ரூ.20 ஆயிரம். தற்போது உள்ளபடி சதுர அடி கணக்கிட்டு பார்க்கும்போது ரூ.2,27,000 தீர்வை செலுத்தவேண்டும் என வருகிறது. வீடுகளுக்கும்கூட 30 மடங்கு குறைந்த தீர்வை வசூலித்து வந்துள்ளனர். வெறும் 8 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை மோசடியாகக் கணக்கிட்டு தீர்வை செலுத்திவரும் கட்டடங்களின் எண்ணிக்கை 4000-க்கும் மேல் உள்ளது.
வீட்டுமனைப் பிரிவு அங்கீகாரம் பெற யார் யாருக்கு லஞ்சம்?
மாநகராட்சிப் பகுதியில் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற அடுக்கடுக்கான செலவுகளைச் சந்திக்கவேண்டும். சிவகாசி மாநகராட்சியிடம் 5 வீட்டுமனைப் பிரிவுகள் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன. ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் கணக்கிட்டு ரூ.14 லட்சம் வரை முதலில் பேரம் பேசப்பட்டது. கிடைக்கும் தொகையில் மேயர் சங்கீதா மற்றும் துணை மேயர் விக்னேஷ்பிரியாவின் பங்குபோக மீதித்தொகையை கவுன்சிலர்கள் அனைவருக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என முடிவானது. 5 வீட்டுமனைப் பிரிவுகளுக்கும் அங்கீகாரம் பெறுபவர்கள், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, யூனியன் பிரிவு, டவுண் பிளானிங் ஆபீசர் எனச் சம்பந்தப்பட்டவர்களுக்கு லட்சங்களில் தனியாகக் கொடுக்கவேண்டும். பேராசை பிடித்த சிலர், கவுன்சிலர்களுக்கென்று தனியாக ஏக்கருக்கு ரூ.5 லட்சம் பெற்றுத் தரவேண்டும் என்று கொடிபிடித்தனர். பங்கு கேட்பதில் இப்படி ஒரு இழுபறி நடந்தபோது, 5 பிளான் அப்ரூவலுக்கும் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, கவுன்சிலர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனக் குமுறல் எழுந்தது. இந்நிலையில், மாநக ராட்சி கூட்டத்தில் 6-வது வார்டு உறுப்பினர் ஸ்ரீநிகா, "கட்டமைப்பே இல்லாத இடத்தில் எப்படி அனுமதி கொடுக்கமுடியும்? வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் 5 தீர்மானங்களையும் ரத்து செய்யவேண்டும்.’ எனக் குரல் எழுப்பினார்.
மாமன்றத்துக்கு வெளியே மேலும் சில கவுன்சிலர்கள் ஸ்ரீநிகாவுடன் சேர்ந்துகொண்டு "மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம்' என்று மீடியாக்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது “கவுன்சிலர்கள் நாங்க மக்கள் குறைகளை மட்டுமே பேசுகிறோம்’ என்று குறிப்பிடத் தவறவில்லை.
"மாமன்றக் கூட்டத்தில் என்னைப் பெண்ணென்றும் பாராமல் அவதூறாகப் பேசிய 22, 37 மற்றும் 39-வது வார்டு உறுப்பினர்கள் சரவணகுமார், ஜெயினுலாபு தீன், சீனிவாசராகவன் (எ) ராஜேஷ் ஆகியோர் தாக்க முற்பட்டபோது சக மாமன்ற உறுப்பினர்கள் தடுத்தனர். இது திட்டமிட்டு வெளியில் உள்ள சில நபர்களால் தூண்டப்பட்ட செயலாகும்''’ என சிவகாசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி, ஸ்ரீநிகா புகார் அளித்ததும் நடந்துள்ளது.
ஊழலோ ஊழல் என்று சி.பி.ஐ. (எம்) ஆர்ப்பாட்டம் அறிவித்த பின்னணியில் யார் உள்ளனர்? திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்திருப்பவர்களின் மேயர் கனவு பலிக்குமா? அதிக பங்கு கேட்டு கொந்தளித்த அத்தனை கவுன்சிலர்களையும் மேயர் சங்கீதா ஒரேயடியாக ஒரே நாளில் குளிர்வித்தது எப்படி? கவர் வாங்காத நேர்மையான கவுன்சிலர்களே சிவகாசி மாநகராட்சியில் இல்லையா? முன்னாள் அ.தி.மு.க.வினரான தி.மு.க. கவுன்சிலர்களை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து, இதிலும் அரசியல் பண்ணுகிறாரா முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
இன்னும் நிறைய விவகாரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன..