Advertisment

வலை வீசும் எடப்பாடி! நழுவும் நிர்வாகிகள்! -சோர்வில் ஓ.பி.எஸ். அணி!

ses

டந்த இரண்டு தினங் களுக்கு முன்பு எடப்பாடியின் உதவியாளரான ராஜேஷ் என்பவர், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டி யனைத் தொடர்புகொண்டு, "ஐயா உங்களைப் பேசச் சொன்னார்கள்'' என்றதும், "என்ன விசயம்?'' எனக் கேட்க... "தூத்துக்குடி எம்.பி. தொகுதி வேட்பாளர் நீங்கள்தான்னு சொல்வதற்காக'' என்றவரிடம், "ஒரு நிமிஷம், நான் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்'' என்று போனை கட் செய்த செல்லப்பாண்டியன், தனக்கு நெருக்கமானவர்களிடம் உடனடியாக ஆலோசனை செய்திருக்கிறார்.

Advertisment

ee

அவர்களோ, "அம்மா இருந்த காலங் களில் நிலவரம் வேற மாதிரி இருந்துச்சு. கட்சியிலிருந்து பணம் கிடைக்கும். ஆனால் இப்போ எடப்பாடி பழனிசாமி, அவரோட கஜானாவை நிச்சயம் திறந்துவிடப் போவதில்லை. மேலும், எம்.பி. தேர்தல்ல நின்றால், தோராயமாகப் பார்த்தாலும், சுருக்கமாச் செலவழிச்சாலும்கூட ஒரு சட்ட மன்றத்துக்கு 5 சி வீதம் 6 சட்ட மன்றத்துக்கு 30 சி.யாகிவிடும். இ

டந்த இரண்டு தினங் களுக்கு முன்பு எடப்பாடியின் உதவியாளரான ராஜேஷ் என்பவர், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டி யனைத் தொடர்புகொண்டு, "ஐயா உங்களைப் பேசச் சொன்னார்கள்'' என்றதும், "என்ன விசயம்?'' எனக் கேட்க... "தூத்துக்குடி எம்.பி. தொகுதி வேட்பாளர் நீங்கள்தான்னு சொல்வதற்காக'' என்றவரிடம், "ஒரு நிமிஷம், நான் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்'' என்று போனை கட் செய்த செல்லப்பாண்டியன், தனக்கு நெருக்கமானவர்களிடம் உடனடியாக ஆலோசனை செய்திருக்கிறார்.

Advertisment

ee

அவர்களோ, "அம்மா இருந்த காலங் களில் நிலவரம் வேற மாதிரி இருந்துச்சு. கட்சியிலிருந்து பணம் கிடைக்கும். ஆனால் இப்போ எடப்பாடி பழனிசாமி, அவரோட கஜானாவை நிச்சயம் திறந்துவிடப் போவதில்லை. மேலும், எம்.பி. தேர்தல்ல நின்றால், தோராயமாகப் பார்த்தாலும், சுருக்கமாச் செலவழிச்சாலும்கூட ஒரு சட்ட மன்றத்துக்கு 5 சி வீதம் 6 சட்ட மன்றத்துக்கு 30 சி.யாகிவிடும். இப்ப ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பில்ல, கூட்டணி பலமுமில்ல. அத னாலதான் எல்லாரும் ஒதுங்கிப் போறாங்க. முன்னாள் அமைச்சர்கள் செழிப்பா இருக்கறதால, அவங்களையோ, அவங்க பிள்ளைகள் அல்லது மனைவின்னு உறவினர்களை நிற்கச் சொல்றாரு எடப்பாடி. அப்படித்தான் தூத்துக்குடியில் உங்களை நிற்கச்சொல்றாரு. ஆனால் தூத்துக்குடியில கனிமொழிய எதிர்த்து நிச்சயம் ஜெயிக்க முடியாது. இதுக்காக பணத்த செலவழிச்சா வீணாப்போகும்!

எடப்பாடி பி.ஏ. ஏற்கெனவே மா.செ. சண்முகநாதன்ட்டயும் பேசியிருக்காராம். அவரு சட்டமன்றத் தேர்தல்னா மட்டும் நிக்கிறேன்னு சொல்லி ஜகா வாங் கிட்டாராம். நீங்க, உங்களை தூத்துக்குடி மாநகர மா.செ.வா மாத்தச்சொல்லி ரெண்டு வருஷமா கேட்டுக் கிட்டிருக்கீங்க. எடப்பாடி பொதுச்செயலாளரான தும் உங்களுக்கு கேட்ட பதவியைத் தர்றேன்னு சொல்லிட்டு இப்போ வரை சொன்னதச் செய்யல. இப்ப தேர்தல்ல நிக்க ஆளில்லாமத்தான் உங்களத் தாங்குறாரு. மடங்கிடாதீங்க'' என்று அவரிடம் ஆலோ சனை கூறியிருக்கிறார்கள். அதையடுத்து எடப் பாடியைத் தொடர்புகொண்ட சி.த.செல்லப்பாண்டி யன், "நீங்க ஏற்கெனவே சொன்னபடி, என்னை மாநகர மா.செ.ன்னு அறிவியுங்க. நான் தேர்தல்ல நிற்கிறேன்''னு சொல்ல, உடனே "இப்ப எப்படிப்பா முடியும்''னு எடப்பாடி சொல்ல, சி.த. போனைத் துண்டித்து விட்டாராம்.

Advertisment

அதேபோல், 5 தொகுதி களைக் கொண்ட நெல்லை மாவட்டத்தின் அ.தி.மு.க. செயலாளரான தச்சை கணேசராஜாவிட மிருந்து, 3 சட்டமன்றங்களைப் பிரித்து, அம்பை எம்.எல்.ஏ.வான இசக்கிசுப்பையாவை நெல்லை புறநகர் மா.செ.வாக்கிய எடப்பாடி மீது கடுப்பிலிருக்கிறாராம் தச்சை கணேசராஜா. வெறும் 2 சட்டமன்றத் தொகுதியை மட்டும் தனக்குக் கீழே கொடுத்து, தன்னை எடப்பாடி டம்மியாக்கிவிட்டாரே என்ற குமுறலோடு இருந்தார். அதன் காரணமாகவே நெல்லைக் கான வேட்பாளராக நிற்கத் தனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டாராம்! இதனால் தவித்துப்போன எடப்பாடி, நெல்லை எம்.பி. வேட்பாளர் தேடல் பொறுப்பை மா.செ.விடம் ஒப்படைத்திருக்கிறாராம். வெளியே ஜம்பமாக பேசினாலும், உள்ளுக்குள் தவிப்பிலும் பதட்டத்திலுமிருக்கிறாராம் எடப்பாடி!

eps

காலியான சேர்கள்! காரமில்லாத பேச்சு!

ஓ.பி.எஸ். அணி சார்பில் தென்காசி, இலஞ்சியில், தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 7ஆம் தேதி நடந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தி லிங்கம், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். தென்காசி மாவட்ட ஓ.பி.எஸ். அணியின் மா.செ.க்கள், வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். மண்டபத்தில் சுமார் 400 சேர்கள் போடப்பட்டிருந்தன. தலைக்கு இருநூறு ரூபாய், குவார்ட்டர் என ஆண்களுக்கும், இருநூறு ரூபாய், வடை போண்டா, காபி என பெண்களுக்கும் பேசி, சேர்கள் நிறையுமளவுக்கு கூட்டத்தைத் திரட்டியிருந்தார்கள்.

மாலை நான்கு மணிக்கு கூட்டமென்று அறிவித்திருந்த நிலையில், ஆறு மணி கடந்தும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரத் தாமதமானதால், "நீங்க குடுத்த கூலிக்கு மூணு மணி நேரம் இருந்ததே பெரிய விஷயம்'' எனக்கூறி, ஆண்களும் பெண்களும் பெருமளவு வெளி யேறிவிட்டார்கள். இரவு 7 மணிக்கு ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் வந்தபோது பெரும் பாலான இருக்கைகள் காலியாக இருந்ததால்... அதிர்ச்சியான ஓ.பி.எஸ்., சுரத்தில்லாமல் மேடையில் பேசியிருக்கிறார்.

ops

"ஒற்றைத் தலைமை எனக்கூறி சூழ்ச்சி செய்தனர். எப்படி குறுக்கு வழியில் முதல்வர் ஆனாரோ, அதே போன்று குறுக்கு வழியில் தன்னை பொதுச்செயலாளராக ஆக்கிக்கொண் டார் எடப்பாடி. தென்காசி மாவட்டத்தில் காணப்படும் எழுச்சிதான், தமிழகம் முழுக்க உள்ளது. நமது இலக்கு சரியானது. நியாயமான போராட்டம் என்பதால் தொண்டர்களும், பொதுமக்களும் ஆதரவு தருகின்றனர். தற்போது "நாம் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். எடப்பாடிதான் கூட்டணிக்கு வழியில்லாமல் இருக்கிறார்' என்ற அவரின் பேச்சு சோர்வு தட்டியது.

இலஞ்சி கூட்டத்துக்குப்பின், நெல்லை ஆலோசனைக் கூட்டத்துக்காக ஓ.பி.எஸ். புறப்பட்ட நிலையில், குளிர் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளித் தனர். இதன் காரணமாக நெல்லை கூட்டத்தை ரத்து செய்தார் ஓ.பி.எஸ்.!

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்

nkn140224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe