'"ஹலோ தலைவரே, அமித்ஷா கலந்துக் கிட்ட அரசு விழா மேடையிலேயே பா.ஜ.கவுடன்தான் கூட்டணின்னு பகிரங்கமா அறிவிச்ச பிறகும், தங்களுக்கு எதிராகவே டெல்லியின் மூவ் இருக்குதுன்னு அ.தி.மு.க. தரப்பு ஃபீல் பண்ணுது'' ’’
""ஆமாம்பா, பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் கூட்டணிக் கட்சின்னு கூட பார்க்காமல் அ.தி.மு.கவை பகிரங்கமாகவே வறுத்தெடுக்கறாங்களே?'' ’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. தலைவரான முருகன், கூட்டணியையும் முதல்வர் வேட்பாளரையும் பா.ஜ.க .தலைமைதான் தீர்மானிக்கும்னு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அ.தி.மு.க. தரப்பைக் கடுப்பாக்கி வருகிறது. அதேபோல் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான அண்ணாமலை ஐ.பி.எஸ்.சும், அ.தி.மு.க. மீதான விமர்சனங்களை வைத்து வருகிறார். லஞ்சப் பணத்தில்தான் ரேசன் கார்டுக்கு 2500 ரூபாய் கொடுக்குறாங்கன்னு போட்டுத்தாக்கினாரு.'' ’’
""லஞ்சப் பணத்தை எப்படி அரசாங்க கணக்கில் ரேஷன் கார்டுக்கு கொடுக்க முடியும்? ஐ.பி.எஸ்.ஸா இருந்தவரு அசால்ட்டா பேசுறாரே?'' ’’
""ஓட்டுக்காக கொடுக்கப்படுற பணம்னு சொல்றதுக்குப் பதிலா, ஒரேடியா போட்டுத் தாக்கிட்டாரு போல. இப்படித்தான் அண்ணாமலை பேசுறது பல முறை பல்பு ஆயிடுது. இந்த முறை பேசியதுக்கு இலைத் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், நான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத்தான் விமர்சனம் செய்தேன்னு அண்ணாமலை மழுப்பிவிட்டார். இருந்தாலும் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு இருக்குன்னு அவர் அழுத்தமாகவே சொல்லியிருக்கார்'' ’’
""டெல்லி சொல்லித்தான் இப்படியெல்லாம் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் நடந்துகொள்கிறார்கள்ன்னு சொல்லும் அ.தி.மு.க.வினர், தி.மு.க. ஸ்டாலினுக்கு அவர் விரும்பும் போதெல்லாம் ராஜ்பவனின் கேட் திறக்குதுன்னும் ஆதங்கப்படறாங்களே'' ’’
’""முதல்வர் எடப்பாடிக்கே இப்படியொரு ஆதங்கம் இருக்கிறதைப் பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம் தலைவரே, மூன்று வாரங்களுக்கு முன் கவர்னரை சந்தித்த ஸ்டாலின், 7 பேர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கையை வைத்தார். இப்ப 22-ந் தேதி மறுபடியும் சந்தித்தார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை, ஊர்வல மாகச் சென்று ஆதாரங்களோடு கவர்னரிடம் கொடுத்திருந்தது தி.முக. லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் கொடுத
'"ஹலோ தலைவரே, அமித்ஷா கலந்துக் கிட்ட அரசு விழா மேடையிலேயே பா.ஜ.கவுடன்தான் கூட்டணின்னு பகிரங்கமா அறிவிச்ச பிறகும், தங்களுக்கு எதிராகவே டெல்லியின் மூவ் இருக்குதுன்னு அ.தி.மு.க. தரப்பு ஃபீல் பண்ணுது'' ’’
""ஆமாம்பா, பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் கூட்டணிக் கட்சின்னு கூட பார்க்காமல் அ.தி.மு.கவை பகிரங்கமாகவே வறுத்தெடுக்கறாங்களே?'' ’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. தலைவரான முருகன், கூட்டணியையும் முதல்வர் வேட்பாளரையும் பா.ஜ.க .தலைமைதான் தீர்மானிக்கும்னு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அ.தி.மு.க. தரப்பைக் கடுப்பாக்கி வருகிறது. அதேபோல் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான அண்ணாமலை ஐ.பி.எஸ்.சும், அ.தி.மு.க. மீதான விமர்சனங்களை வைத்து வருகிறார். லஞ்சப் பணத்தில்தான் ரேசன் கார்டுக்கு 2500 ரூபாய் கொடுக்குறாங்கன்னு போட்டுத்தாக்கினாரு.'' ’’
""லஞ்சப் பணத்தை எப்படி அரசாங்க கணக்கில் ரேஷன் கார்டுக்கு கொடுக்க முடியும்? ஐ.பி.எஸ்.ஸா இருந்தவரு அசால்ட்டா பேசுறாரே?'' ’’
""ஓட்டுக்காக கொடுக்கப்படுற பணம்னு சொல்றதுக்குப் பதிலா, ஒரேடியா போட்டுத் தாக்கிட்டாரு போல. இப்படித்தான் அண்ணாமலை பேசுறது பல முறை பல்பு ஆயிடுது. இந்த முறை பேசியதுக்கு இலைத் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், நான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத்தான் விமர்சனம் செய்தேன்னு அண்ணாமலை மழுப்பிவிட்டார். இருந்தாலும் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு இருக்குன்னு அவர் அழுத்தமாகவே சொல்லியிருக்கார்'' ’’
""டெல்லி சொல்லித்தான் இப்படியெல்லாம் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் நடந்துகொள்கிறார்கள்ன்னு சொல்லும் அ.தி.மு.க.வினர், தி.மு.க. ஸ்டாலினுக்கு அவர் விரும்பும் போதெல்லாம் ராஜ்பவனின் கேட் திறக்குதுன்னும் ஆதங்கப்படறாங்களே'' ’’
’""முதல்வர் எடப்பாடிக்கே இப்படியொரு ஆதங்கம் இருக்கிறதைப் பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம் தலைவரே, மூன்று வாரங்களுக்கு முன் கவர்னரை சந்தித்த ஸ்டாலின், 7 பேர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கையை வைத்தார். இப்ப 22-ந் தேதி மறுபடியும் சந்தித்தார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை, ஊர்வல மாகச் சென்று ஆதாரங்களோடு கவர்னரிடம் கொடுத்திருந்தது தி.முக. லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் கொடுத்திருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கூடுதலான புகார் களோடும்தான் ஸ்டாலின் இந்த முறை ராஜ்பவனுக்குச் சென்றார். பைண்ட் செய்யப்பட்ட ஃபைலை கவர்னரிடம் கொடுத்துட்டு, விரைவில் நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்ன்னு சொல்லிட்டு வந்திருக்கிறார். அவருக்கு முன்பே கடந்த ஒன்றரை மாதங்களாக ராஜ்பவனிடம் அப்பாயின்மென்ட் கேட்டும் முதல்வர் எடப் பாடிக்கு அது கிடைக்கலைங்கிற ஆதங்கம் அதிகமாகவே இருக்கு''’
""கவர்னரை தி.மு.க சந்திச்சி, அ.தி.மு.க. அரசு மேலே புகார் கொடுத்தது பற்றி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை என்ன நினைக்குதாம்?'' ’’
"’பா.ஜ.க நினைக்கிறது இருக்கட்டும். பா.ஜ.க. சப்போர்ட் டோடுதான், ஸ்டாலினுக்கு கவர்னர் அப்பாயிண்ட்மென்ட்டும், அவர்கிட்ட கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களுக்கான ஆதாரமும் கிடைச்சிருக்குன்னு அ.தி.மு.க.வுக்கு டவுட் இருக்குது. கவர்னரின் முன்னாள் செயலாளரான ராஜகோபால் ஐ.ஏ.எஸ் மூலம், எடப்பாடி, ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களைத் திரட்டி தி.மு.க.விடம் டெல்லி கொடுக்கச் செய்ததுன்னு அவங்க சொல்றாங்க. அதோடு, கேரள முதல்வர் பினராய் விஜயனை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சந்திக்க மறுப்பது போல், மேற்குவங்க முதல்வர் மம்தாவை அங்கிருக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திக்க மறுப்பது போல், தமிழக முதல்வர் எடப்பாடியை இங்கிருக்கும் கவர்னர் பன்வாரிலால் சந்திக்க மறுத்துவருவதும், டெல்லியின் மனநிலையைக் காட்டுதுன்னு அ.தி.மு.க தரப்பில் சொல்வதோடு, கவர்னரை வச்சி, எங்கள் மீதான ஊழல் புகாரை எதிர்க்கட்சியிடமிருந்து வாங்கி, அ.தி.மு.க.வை நசுக்கப் பார்க்குது டெல்லின்னு புலம்பறாங்க'' ’’
""அப்போ பா.ஜக.யாருடன்தான் கூட்டணி வைக்கப் போகுது?'' ’’
""இந்தக் கேள்வியைத்தான் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சுமே தங்களுக்குள் இப்பக் கேட்டுக்கிட்டு இருக்காங்க. பா.ஜ.க தங்கள் தோள்மீது கைபோட்டவாறே, தங்கள் முதுகில் குத்துவதாக அ.தி.மு.க. தரப்பு நம்புது. பா.ஜ.க.வோ, அ.தி.மு.கவை அரட்டி உருட்டி சீட் ஷேரிங்கின் போது நிறைய தொகுதிகளை வாங்கப் பார்க்குது. அதற்கு ஒத்துவராத பட்சத்தில் அ.தி.மு.க.வை முழுதாகக் கை கழுவிவிட்டு, ரஜினியையே முழுதாகக் கையிலெடுக்கவும் திட்டமிட்டிருக்கு. இதற்கிடையே கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், தி.மு.க. உதயநிதியிடம் கூட்டணி குறித்துப் பேசியதாகவும், அப்போது கமல் சைடிலிருந்து 40 சீட்டுகளைக் கேட்க, 25 சீட் வரை தர வாய்ப்பு இருக்குது-எங்க தலைமைகிட்ட பேசி முடிவெடுங்கன்னு உதயநிதி சொன்னதாகவும், கமல் தரப்பிலேயே டாக் அடிபடுது'' ’’
""அதுசரிப்பா, எங்கள் ஆட்சி அமைந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம்ன்னு கமல் அறிவிச்சது பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?'' ’’
’""ஆமாங்க தலைவரே, தேர்தல் பிரச்சாரத்தில் கமல் இப்படி சொல்ல, ஏற்கனவே தன்னோட வேலைக்கான ஊதியத்தை கமல் தரலைன்னு நடிகை கவுதமி தெரிவித்திருந்ததை எடுத்து சமூக வலைத்தளங்களில் கமலுக்கு எதிரா பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கணக்கை செட்டில் பண்ணிட்டு, அப்புறமா மற்ற வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுங்கன்னு நிறைய கமெண்ட்ஸ்.''
“""அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?'' ’’
“""ஆமாங்க தலைவரே.. விமர்சனங்களைத் தாண்டி, கமல் முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் ஒன்றாக இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டம் பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. கமலின் அறிவிப்புக்குப் பிறகு, மக்கள் நீதி மய்ய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசும் பெண்கள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றால் எப்படி அதை வழங்குவீர்கள்? அதைப் பெற ஏதேனும் தகுதிகள் தேவையா? அதற்கு படித்திருக்க வேண்டுமா ? என்றெல்லாம் விசாரித்து வருகிறார்கள். கூடவே, நீங்கள் அறிவித்தது உண்மை என்றால் எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்றும் சொல்லி, கமல் தரப்பை உற்சாகப்படுத்தி வருகிறார்களாம்.''
""அண்ணாத்தே படக் குழுவினருக்கு கொரோனான்னு ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்ட பரபரப்பு செய்தி வருதே..?'' ’’
""ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி ரொம்ப கவனமாத்தான் இருந்திருக்காரு. அவருக்கு பாதிப்பு இல்லை. புதுக் கட்சியை அறிவிக்கத் தயாராகிவரும் ரஜினி, தமிழகம் முழுக்க முக்கிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தையும் செய்ய இருக்கிறார். அந்தப் பிரச்சாரம் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வியூகம் வகுத்து வருகிறார்கள். உடல் நிலை காரணமாக, அவர் காரில் பிரச்சாரம் செய்வதை குடும்பத்தினரும் டாக்டர்களும் அனுமதிக்க மறுப்பதால, 8-ல் இருந்து 10 பேர் வரை உட்காரக்கூடிய மினி ஃப்ளைட் ஒன்றைச் சொந்தமாக வாங்கலாமா என்ற ஆலோசனை யிலும் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். அந்த விமானத்தை ரஜினி யின் சம்மந்தியான தொழிலதிபர் குடும்பம் அவருக்கு வாங்கித் தர விரும்புகிறதாம். இதற்காக, செஸ்னா நிறுவன விமானம் உட்பட 4 நிறு வனங்களின் விமானங்களைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்களாம்.''’’
""பா.ம.க.வை கூல் பண்ணும் முயற்சி அ.தி.மு.க. தரப்பில் நடக் குது போலிருக்கே.. எந்தளவுக்கு பலன் தந்திருக்கு?''’’
""தேர்தல் பிரச்சாரத்தை, தங்கள் கட்சியின் சீனியர்களிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி அண்மையில், சேலத்தில் தொடங்கினார். சென்னை திரும்பிய அவர் ஓ.பி.எஸ் உள் ளிட்டவர்களிடம், நான் சும்மா பேருக்குத்தான் பிரச்சாரத்தைத் தொடங்கினேன். வரும் 27-ந் தேதி சென்னையில் முறைப்படி நம் பிரச்சாரத்தைத் தொடங்குவோம். அதில் கூட் டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும்படி செய்வோம்ன்னு சொல்லி யிருக்கார். அந்த வகையில் தைலாபுரத்தை அ.தி.மு.க. தரப்பு தொடர்பு கொண்டிருக்கு. ஆனால் அங்கிருந்து எரிச்சலும் கடும் கோபமும்தான் வெளிப்பட்டிருக்கு.'' ’’
""விபரமாச் சொல்லுப்பா?''
""பிரச்சார சுற்றுப்பயணத் தில் இருக்கும் தி.மு.க. இளைஞ ரணி செயலாளர் உதயநிதிக்கு வன்னியர் சமூகத்தினர் அதிக முள்ள கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கிடைத்த வரவேற்பு தைலாபுரத்தை டென்ஷனாக்கியிருக்கு. டாக்டர் ராமதாசுக்கு எதிரான அர சியலை முன்னெடுக்கும் ’மாவீரன் மஞ்சள் படை’ இயக் கத் தலைவரும், காடுவெட்டி குருவின் மகனுமான கனலரச னை, அவர் இல்லத்துக்கே போய் சந்திச்சிருக்கார் உதயநிதி. குருவின் குடும்பமே அவருக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத் திருக்கு. இதன் பின்னணியில் இருந்தவர் வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன்தானாம். இதையெல்லாம் அ.தி.மு.க. தரப்பிடம் சுட்டிக் காட்டிய ராமதாஸ், வன்னியர் சமூகத்தை வளைக்க தி.மு.க தரப்பு என்னென்னவோ செய்யுது. ஆனால், சமூகம் சார்ந்து நான் வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் நீங்கள் செவி சாய்ப்ப தில்லையேன்னு கோபத்தோடு சொல்லியிருக்கிறார்'' ’’
""அதனால்தான், அமைச்சர்களை தைலாபுரத்துக்கு சமாதானத் தூது விட்டாரா எடப்பாடி?'' ’’
""அதுவும் ரகசியமான தூதுங்க தலைவரே, ராமதாஸின் கோபத்தைத் தணிக்கத்தான், எடப்பாடி, தனது அமைச்சரவை சகாக்களான தங்கமணியையும், கே.பி.அன்பழகனையும் தைலாபுரத்துக்கு அனுப்பிவச்சார். அங்கே போறதுக்கு முன்னாடி, திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவர் வீட்டில் இரண்டு பேரும் சந்திச்சாங்க. அரசு காரை அங்கேயே நிறுத்திட்டு, தனியார் காரில் தைலாபுரத்துக்குப் போய் பேசியிருக்காங்க. அப்ப டாக்டர் ராமதாஸிடம், கொஞ்ச நாள் பொறுமை காக்கும்படியும் விரைவில் பா.ம.க.வின் மரியாதை உயரும்படியான திட்டம் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி சார்பில் கேட்டுக்கொண்டார்களாம். ஆனா, ராமதாஸ் டென்ஷனாத் தான் இருந்திருக்காரு. கூட்டணி பற்றி 31-ந் தேதி நடக்குற பா.ம.க. பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள்கிட்ட கருத்து கேட்டு சொல்றேன்னு பிடிகொடுக்காம நழுவிட்டாரு. மந்திரிகளும் சீக்கிரமாவே தைலாபுரத்திலிருந்து திரும்பிட்டாங்க. திண்டிவனத் துக்கு திரும்பி வந்து, சி.வி.சண்முகத்திடம் ஆலோசிச்சிட்டு தங்க மணியும் அன்பழகனும் அரசு காரில் சென்னை திரும்பியிருக்காங்க.''
""ம்...'' …’’
“""பல்வேறு திட்டங்களோடு பா.ம.க.வின் பொதுக்குழுவைக் கூட்ட திட்டமிட்டிருக்காராம் டாக்டர் ராமதாஸ். இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்புத் தலைவரான சி.என்.ராமமூர்த்தி மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஆதரவு தெரிவிக்க... அது தைலாபுரத்தை மேலும் கொதிப்படைய வைத்திருக்கிறதாம். இவற்றுக்கு மத்தியில் தைலாபுரத் தூதுக் குழுவில் தன்னை எடப்பாடி புறக்கணித்து விட்டதாக, மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகமும் கடும் காட்டத்தில்தான் இருக்கிறாராம்'' ’’
""நானும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்துக்கறேன். மு.க.அழகிரிக்கு பா.ஜ.க தரப்பு போட்ட தூண்டில் வேலைக்கு ஆகாத நிலையில், தி.மு.க. சீனியரான துரைமுருகன் அண்மையில் அழகிரிகிட்ட பேசியிருக்கிறார். அப்போது அவசரப்பட்டுவிடாதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டாராம். அதேபோல் கனிமொழி எம்.பியும், அழகிரிக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்து, அவரை தி.முக.வில் ஆக்டிவ் பர்சனாக்கனும்னு கட்சித் தலைவ ரான மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறாராம். இதனால் பா.ஜ.க. தரப்பின் அழைப்புகளை ஓரங்கட்டிவிட்டு, அறிவாலயத் தரப்பின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறாராம் அழகிரி.'' ’’