"அமைச்சர் வேலுமணி மீதான ரெய்டில், அவரது இருப்பிடங்களில் இருந்து மூன்றுவிதமான டாகுமெண்ட்டுகள் சிக்கியிருக்கின்றன. முதலாவது, அவரும் எடப்பாடியும் சேர்ந்து செய்த வியாபாரங்கள் தொடர்பான ஆவணங்கள். இரண்டாவது, அவர் வெளிநாட்டில் செய்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள். மூன்றாவதாக, அவரும் ஜக்கி வாசுதேவும் இணைந்து நடத்திய பணப் பரிமாற்றங்கள்.

நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, வேலுமணி மூலமாக ஜக்கி வாசுதேவ் பல ஆயிரம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை செல்லத்தக்கவையாக மாற்றியிருக்கிறார். அது தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியிருக்கிறது.

velumani

Advertisment

அதற்கு அடுத்தபடியாக சுகந்தன் என்பவர் தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் சாப்ட்வேர் தொடர்பான காண்ட்ராக்ட்டுகளை வேலுமணியின் அண்ணனான அன்பரசனின் மகனோடு சேர்ந்து எடுத்தவர்தான் இந்த சுகந்தன்.

வேலுமணியின் குடும்பம், வெளிநாடு பயணத்தின் போது அங்கே செய்த முதலீடுகள் தொடர்பான பல ஆவணங்களும் சுகந்தனிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்துள்ளது. கடுமையான விசாரணைக்கு சுகந்தனை உட்படுத்தியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இதன்மூலம் வேலுமணி, வெளிநாட்டில் செய்த முதலீடுகள் பற்றிய பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தபடியாக போலீஸாரின் கண் காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்... தீபா ராஜ் கமல் என்கிற பெண்மணி. இவர், ஜக்கி வாசுதேவ் ஆசிரமம் நடத்தும் இக்கரைபோளுவாம்பட்டி என்ற ஊரில் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டு பண்ணை வீடு வைத்திருக்கிறார். இவர் "தமிழ்நாடு வாலன்டரி ரிஸோர்ஸ் சென்டர்' என்கிற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். இவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களை தமிழ்நாடு முழுவதும் வாங்கியிருக்கிறார். ஜக்கி வாசுதேவுக்கும் வேலுமணிக்கும் இடையே பாலமாக இருந்தவர் தீபா என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

eps

சாதாரண பணியாளராக இருந்த இவர், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக ஆன பிறகு, கோடீஸ்வரியாகிவிட்டார். வேலுமணியை அடிக்கடி சந்தித்துப் பேசும் இவர், அவருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். சமீபத்தில் வேலுமணியின் கை உடைந்துவிட்டது. அந்த சமயத்தில் அவரைப் போய்ப் பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் தீபா'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

இந்த தீபா, வேலை செய்த நிறுவனம், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வருகிறது. இந்த துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 12,600 கிரா மங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக் கப்பட்டன. சூரிய சக்தியால் இயங்கும் இந்த உயர் கோபுர மின் விளக்குகள், சாதாரணமாக ஒரு விளக்கு 2 1/2 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்த விளக்குகள் ஒரு விளக்குக்கு 6 1/2 லட்ச ரூபாய் என்ற மதிப்பில் வாங்கப்பட்டுள் ளது. இதில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அந்த விளக்கு களை இயக்க, தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் 100 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இவை அனைத்தும் வேலுமணிக்கு நெருக்கமான ஸ்ரீகற்பகா ஏஜென்ஸி என்கிற நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. வேலுமணி இந்த விஷயத்தில் ஊழல் செய்திருக் கிறார் என கண்டுபிடித்த தி.மு.க. அரசு, ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர் மனோகர் சிங் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை டிரான்ஸ்பர் செய்துள்ளது.

இது தவிர, "தமிழகம் முழுவதும் நீர்வழிப் பாதை அமைப்பதில் சுமார் 387 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது' என லஞ்ச ஒழிப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

fdd

கொரோனா காலத் தில் கிராமங்களில் பிளீச் சிங் பவுடர் தெளிப்பதில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில், ஊரக வளர்ச் சித் துறையில் அவசர நிலைச் செயல்பாடுகளை கண்காணித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித் துறையில் சுனாமி ஷெல்ட் டர்கள் அமைப்பதற்கு உலக வங்கி 1500 கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறது. அந்த ஷெல்ட்டர்கள் அமைப்பதில் வேலுமணிக்கு நெருக்கமான டாக்டர் மனோகர் சிங் மற்றும் அற்புதராஜ் ஆகியோர் கூட்டணியாக செயல்பட்டு, ஊழல் செய்திருக் கிறார்கள். இதுபற்றி மத்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சி.ஏ.ஜி. அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை தனது புலனாய்வை முடுக்கி விட்டுள்ளது.

இப்படி... வெளிநாட்டு முதலீடுகள், ஜக்கி வாசுதேவுடனான தொடர்பு ஆகியவை மட்டுமல்ல... எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் என்ன தொடர்பு? இருவரும் எப்படி ஊழல் பார்ட்னர்களாக செயல்பட்டார்கள்? என்பது தொடர்பான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை திரட்டி வைத்திருக்கிறது.

இதன் ஹைலைட்டாக, கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வெளிநாட்டில் வேலுமணி வாங்கியுள்ள தீவு தொடர்பான ஆவணங்கள் என... விதவிதமான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனையின்போது கைப்பற்றியுள்ளனர் என்கிறார்கள்.

இதுதொடர்பாக, சுகந்தனையும், தீபா ராஜ் கமலையும் தொடர்புகொண்டு கேட்டபோது.... "இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்றார்கள்.