Advertisment

உள்ளாட்சியில் எவ்வளவு கமிஷன்? -கணக்கு போடும் பினாமி கம்பெனிகள்!

ogg

ந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை மேம்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்பு களின் பொறுப்பு. அவற்றின் அதிகாரம் இன்று பணபலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

Advertisment

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சாமான்யர்கள் பலர் வென்றிருந்தாலும், பல ஊர்களில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் விடப்பட்டதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. பிரதான கட்சிகளில் தொடங்கி, சுயேட்சைகள்வரை கரன்சிகளை வாரி இறைத்து தேர்தலைச் சந்தித்தார்கள். அதிகாரிகளைக் கட்டுக் குள் வைத்துக்கொண்டு, வாக்கு ffஎண்ணிக்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளை அரங்கேற்றியது ஆளும்தரப்பு. மறைமுகத் தேர்தலில் கடத்தல் முதல் மிரட்டல்வரை எல்லா கொடுமைகளும் சர்வ சாதாரணமாக நடந்தன. இதோடு நிற்கப் போவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மக்கள்நலத் திட்டங்களில்

ந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை மேம்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்பு களின் பொறுப்பு. அவற்றின் அதிகாரம் இன்று பணபலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

Advertisment

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சாமான்யர்கள் பலர் வென்றிருந்தாலும், பல ஊர்களில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் விடப்பட்டதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. பிரதான கட்சிகளில் தொடங்கி, சுயேட்சைகள்வரை கரன்சிகளை வாரி இறைத்து தேர்தலைச் சந்தித்தார்கள். அதிகாரிகளைக் கட்டுக் குள் வைத்துக்கொண்டு, வாக்கு ffஎண்ணிக்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளை அரங்கேற்றியது ஆளும்தரப்பு. மறைமுகத் தேர்தலில் கடத்தல் முதல் மிரட்டல்வரை எல்லா கொடுமைகளும் சர்வ சாதாரணமாக நடந்தன. இதோடு நிற்கப் போவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மக்கள்நலத் திட்டங்களில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற கேள்வி வலுப்பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிந்ததும், புதிதாக தேர்வுசெய்யப்பட்ட தலைவர்களுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து பயிற்சி முகாம் நடத்தப்படும். அப்போது சட்டமன்றம், நாடாளுமன்றத்தைப் போல பல நிலைக்குழுக்களை அமைத்து, அவற்றின் கீழ் பணிகளைப் பிரித்துத் தரவேண்டும் என சொல்லித் தரவேண்டும். ஆனால், அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். பணத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் எடுக்கலாம். அதி காரிகள் சொல்கிற விஷயங்களுக்கு தலையாட்ட வேண்டும் என்பதைத்தான் போதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவருமான சங்கராபுரம் திருப்பதி, “""கிராம ஊராட்சி என்பது தன்னாட்சி பெற்ற ஒரு உள்ளூர் அரசாங்கம். மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளும் அந்த அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். கிராம ஊராட்சிமன்ற மற்றும் கிராமசபை தீர்மானங்களை அரசுத் துறைகள் மதிக்கவேண்டும். இதையெல்லாம் பயிற்சி முகாம்களில் அதிகாரிகள் சொல்லித் தருவதில்லை. மக்கள் பிரதிநிதிகளும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தைப் படிப்பதில்லை. இந்த சட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற பதவியே கிடையாது. ஆனாலும், குறிப்பிட்ட திட் டப் பணிகளுக்கு அவரிடம் அனுமதி பெற்ற பிறகே, அதற் கான தொகையை எடுக்கவேண் டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு.

பஞ்சாயத்துத் தலைவருக்கு அந்த கிராமத்தின் செயல் அலுவலர் (ஊஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) என்ற இன்னொரு பொறுப்பும் இருக்கிறது. ஆனால், அப்படியொரு பதவி இருப்பதே இங்கு பலருக்குத் தெரியாது. அதுபோக ஏனைய அதிகாரங்களைப் பற்றி, தலைவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் இல்லை. தெரிந்துவிட்டால் அதிகாரிகளால் பணம் பார்க்க முடியாதில்லையா'' என்றார்.

Advertisment

fff

கிராம பஞ்சாயத்தின் செலவினங்கள் பற்றிப்பேசிய திருப்பதி, ""கிராம பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி செலவிட வேண்டும். ஆனால், அந்த நிதியை எடுப்பதற்கு பல கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டரின் கடிதத் துடன் ஊராட்சி அலுவலகத்தில் காத்துக்கிடப் பார்கள். "இந்தப் பொருளை வாங்குங்கள். அதில் இத்தனை சதவீதம் கமிஷன் கிடைக்கும். ஆடிட் குழப்பமோ, பிரச்சனையோ அறவே கிடையாது' என்பார்கள். அந்த நொடியே பல தலைவர்கள் வாயில் ஜொள்ளு வடியத் தொடங்கிவிடும். தேர் தலுக்காக லட்சங்களில் முதலீடு போட்டவர்கள், நீதியை நிலைநாட்டவா துடிப்பார்கள்?

சரி, அந்தக் கம்பெனி யாருடையது என்று தேடிப்பார்த்தால், கம்பெனியின் உரிமையாளர் யாராவது ஒரு அமைச்சரின் பினாமியாக இருப் பார். 2011-2016 காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் மூலமாக மாதாமாதம் காசோலை வந்துசேரும். அதில் "உங்க ஊராட்சிக்கு இவ்வளவு பணம் வந்திருக்கு. அதற்கு இத்தனை சதவீதம் கமிஷனைக் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லவும்' என அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பறக்கும். அந்தக் கமிஷன் அதிகாரிகளில் தொடங்கி, அமைச்சர்வரை சிறகடித்துப் பறக்கும். இன்னும் இன்னும் நிறையவே இருக்கிறது. நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

மக்களின் குறைகள் களையப்படுமா என்ற கேள்விக்கான விடை எப்போது கிடைக்கப் போகிறதோ? -எஸ்.பி.சேகர்

nkn140120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe