தற்போதைய தேர்தலைப்போல் தேர்தல் ஆணையத்தின் மீது வேறெப்போதும் சந்தேகம் எழுந்ததில்லை. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. கட்சியின் கிளைப் பிரிவைப்போல செயல்படுவ தாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தேர்தல் ஆணையம் தோராயமான வாக்குப்பதிவு விவரத்தை மட்டும்தான் இதுவரை வெளியிட்டிருக்கிறதே தவிர, துல்லியமான வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடவில்லை என இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாகக் குரலெழுப்ப, தேர்தல் ஆணையம் ஒரு தரவை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, அந்தத் தரவு குறித்து, “"ஏற்கெனவே இந்தத் தரவு தாமதமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதி யிலும், அதனோடு தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகள், அது தொடர்பான புள்ளி விவரங்களைக் குறிப்பிடவில்லை''’என குற்றம்சாட்டினார்.
அந்தக் குற்றச்சாட்டுக்குப் தேர்தல் ஆணையம் 21 பக்கங்களில் விரிவான பதிலளித் தது. அதில் தேர்தல் ஆணையம் தேர்தலின் முதல் இரு கட்டங்களில், தவறாக நிர்வாகம், புள்ளி விவரங்களைத் தருவதில் தாமதமா
தற்போதைய தேர்தலைப்போல் தேர்தல் ஆணையத்தின் மீது வேறெப்போதும் சந்தேகம் எழுந்ததில்லை. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. கட்சியின் கிளைப் பிரிவைப்போல செயல்படுவ தாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தேர்தல் ஆணையம் தோராயமான வாக்குப்பதிவு விவரத்தை மட்டும்தான் இதுவரை வெளியிட்டிருக்கிறதே தவிர, துல்லியமான வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடவில்லை என இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாகக் குரலெழுப்ப, தேர்தல் ஆணையம் ஒரு தரவை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, அந்தத் தரவு குறித்து, “"ஏற்கெனவே இந்தத் தரவு தாமதமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதி யிலும், அதனோடு தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகள், அது தொடர்பான புள்ளி விவரங்களைக் குறிப்பிடவில்லை''’என குற்றம்சாட்டினார்.
அந்தக் குற்றச்சாட்டுக்குப் தேர்தல் ஆணையம் 21 பக்கங்களில் விரிவான பதிலளித் தது. அதில் தேர்தல் ஆணையம் தேர்தலின் முதல் இரு கட்டங்களில், தவறாக நிர்வாகம், புள்ளி விவரங்களைத் தருவதில் தாமதமாக இருப்பதாகவும் கூறப்படும் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுதலித்தது.
தாமதம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் மதிப்பிடப்பட்ட தரவுகளை அறிவிப்பதில் எப்போதும் காலதாமதம் இருப்பதாகக் கூறியது. "வாக்காளர்கள் மாலை 6:00 மணிக்குப் பிறகும் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்களிப்பதைத் தொடர்கின்றனர், வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன்தான் அதை சரிபார்க்க முடியும்" என்று அது கூறியது.
கார்கேவுக்கு அளித்திருந்த பதிலில் எட்டு இணைப்புகளைச் சேர்த்திருந்ததுடன் கார்கே வின் குற்றச்சாட்டுகள் தேவையற்றவை எனவும் குறிப்பிட்டிருந்தது.
சி.பி.ஐ. (எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "தேர்தல் ஆணையம் ஏன் தேவையற்ற காலதாமதம் நிகழ்ந்தது என்பதற்கான பதிலை இன்னும் கூறவில்லை. அதாவது தேர்தல் ஆணை யம் முதல் இரு கட்டங்களில் தோராய மாகக் கூறிய வாக்குப் பதிவுக்கும், இறுதியாக அறிவித்த வாக்குப்பதிவுக்கு மான வித்தியாசம் 6 சதவிகிதம். இதுதான் சந்தேகங்களை எழுப்புகிறது''’ என்ற அவர் தேர்தல் ஆணையம், “"மாநிலவாரி, தொகுதிவாரி, சட்டமன்றப் பிரிவு வாரியாக, பதிவான வாக்குகளின் ஆரம்ப மற்றும் இறுதி சதவிகிதத்தை வெளி யிடவேண்டும்''’என கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து மே 9 அன்று, வழக் கறிஞர்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகளின் குழு, யோகேந்திர யாதவ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த்பூஷன் உள்ளிட்டோர், நடந்துகொண்டி ருக்கும் பொதுத் தேர்தலின் முதல் மூன்று கட்டங்களில் ஏற்ற இறக்கமான வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, படிவம் 17-ஈஇன் பகுதி ஒ ஐ முன்கூட்டியே வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினர்.
படிவம் 17ஈஇன் பகுதி ஒ என்பது பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் கணக்கு. இது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியால் நிரப்பப்படவேண்டும். இதன் உண்மையான நகல் தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 நலின்படி ஒவ்வொரு வேட்பாளரின் வாக்குச்சாவடி முகவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதில் கவலைக்குரிய அம்சம் என்னவெனில், ஏப்ரல் 19 அன்று தேர்தல் ஆணையம் ஊடகங்களுக்கு அளித்த வாக்குப் பதிவு தரவு 62.37% சதவிகிதம். ஏப்ரல் 30 அன்று வெளியிட்ட இறுதித் தரவின்படி அது 66.14 சதவிகிதம், வித்தியாசம் 3.77 சதவிகிதம். அதேசமயம் லட்சத்தீவு, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் இந்த இறுதி வாக்குப்பதிவு 10 சதவிகிதத்துக்கு அதிகமாக அதிகரித்துள்ளது.
இரண்டாவது கட்டத் தேர்தலில் இதைக் கணக்கிட வழியில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் வாக்குப்பதிவு விகிதத்தையே வெளியிடவில்லை. மாறாக, தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் வாக்குப் பதிவு செயலியில் இந்த விவரங்களைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டது. மணிப்பூரில் ஏப்ரல் 28ஆம் தேதி 81.9 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக செயலி அறிவித்தது. ஏப்ரல் 30-ஆம் தேதி 2.95 சதவிகிதம் திருத்தங்களுடன் 84.85 சதவிகிதம் வாக்குப் பதிவான தாக அறிவித்தது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “முதல்கட்டத் தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பின் வாக்களித்தவர்களின் முழுமையான சதவிகித விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதலில் அது கூறிய சதவிகிதத்துக்கும் பின்பு வெளியிட்ட சதவிகிதத்துக்கும் வித்தியாசம் 6.14 சதவிகிதம். அதாவது கிட்டத்தட்ட 1 கோடி வாக்குகள் வித்தியாசம்.
மகாராஷ்டிராவில் முதல் கட்டத்தில் நடந்த தேர்தலில் இந்த வித்தியாசம் 8 லட்சம் வாக்குகள். அதாவது ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் இறுதி வாக்காளர் சதவிகிதத்தில் அதிகரித்துள்ளது. எப்படி இத்தனை அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர் சதவிகிதம் அதிகரித்தது என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்கவேண்டும் என்றிருந்தார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய் குரேஷி, "தேர்தல் நடந்த ஒரு மணி நேரத்துக்குள் ஊடகங்களுக்கு துல்லியமான வாக்குப் பதிவு சதவிகிதத்தை சொல்லாமலிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத நடைமுறை'' என்றிருக்கிறார். இந்த நடை முறையை, அதாவது தேர்தல் நடந்த 24 மணி நேரத்தில் துல்லியமான வாக்குப்பதிவு விகிதத்தை அறிவிக்காமல் தாமதப்படுத்தும் நடை முறையை 2019-லேயே மெதுவாக பரீட்சித்துப் பார்த்துவிட்டது பா.ஜ.க. என்கிறார்கள்.
என்ன நடக்கிறது? தேர்தல் ஆணையத்தின் மீது படியும் சந்தேகத்தின் கறை எப்போது அகலப்போகிறது?