எத்தனுக்கு எத்தன்! மோடி-அமித்ஷாவுக்கு தண்ணி காட்டிய சிவக்குமார்!

sivakumar

தெல்லாம் மோடியும்-அமித் ஷாவும் கச்சிதமா காரியத்தை முடித்துவிடுவார்கள் என்றுதான் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து நாடே எதிர்பார்த்தது.

கடந்த 19ஆம் தேதி சனிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோரப் போகும் நேரம். காங்கிரஸை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வின் பிடியில் இருந்ததாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

sivakumar

திடீரென்று சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் துணையுடன் வந்த பிரதீப் கவுடா, அங்கு நின்ற பா.ஜ.க. தலைவர்களை கடந்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை தழுவிக் கொண்டார். அனைவருக்கும் ஆச்சரியம். அதுபோலத்தான் இன்னொரு எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கும் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்தார்.

இவர்களை மீட்டெடுத்ததிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பா.ஜ.க.வின் கழுகுப்பார்வையிலிருந்து காப்பாற்றுவதிலும் முக்கியப்பங்கு வகித்தவர் சிவக்குமார்.

""எனக்கு காந்தத்தன்மையுள்ள பெர்சனாலிட்டியை கடவுள் கொடுத்திருக்கிறார்'' என்று சிவக்குமார் சிரித்துக் கொண்டே கூறுவது வழக்கம். இந்தக் காந்தத்தன்மையுள்ள பெர்சனாலிட்டியிடம்தான், பா.ஜ.க. தல

தெல்லாம் மோடியும்-அமித் ஷாவும் கச்சிதமா காரியத்தை முடித்துவிடுவார்கள் என்றுதான் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து நாடே எதிர்பார்த்தது.

கடந்த 19ஆம் தேதி சனிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோரப் போகும் நேரம். காங்கிரஸை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வின் பிடியில் இருந்ததாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

sivakumar

திடீரென்று சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் துணையுடன் வந்த பிரதீப் கவுடா, அங்கு நின்ற பா.ஜ.க. தலைவர்களை கடந்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை தழுவிக் கொண்டார். அனைவருக்கும் ஆச்சரியம். அதுபோலத்தான் இன்னொரு எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கும் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்தார்.

இவர்களை மீட்டெடுத்ததிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பா.ஜ.க.வின் கழுகுப்பார்வையிலிருந்து காப்பாற்றுவதிலும் முக்கியப்பங்கு வகித்தவர் சிவக்குமார்.

""எனக்கு காந்தத்தன்மையுள்ள பெர்சனாலிட்டியை கடவுள் கொடுத்திருக்கிறார்'' என்று சிவக்குமார் சிரித்துக் கொண்டே கூறுவது வழக்கம். இந்தக் காந்தத்தன்மையுள்ள பெர்சனாலிட்டியிடம்தான், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இருமுறை மூக்குடைபட்டுள்ளார்.

கர்நாடக பணபல பாலிடிக்ஸில் பா.ஜ.க.வுக்கு எப்படி ரெட்டி பிரதர்ஸோ, அப்படி காங்கிரஸுக்கு சிவக்குமாரைச் சொல்கிறார்கள். ஜனார்த்தன ரெட்டி பிரதர்ஸ் பா.ஜ.க.வில் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தாலும் பெல்லாரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அவர்கள் ஆட்டம் காட்டமுடியும். ஆனால், சிவக்குமார் அப்படியல்ல. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தாலும், மாணவர் தலைவராக புகழ்பெற்றவர். காங்கிரஸ் தலைமையே விரும்பி இவரை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமித்தது. 25 வயதிலேயே தேவேகவுடாவை எதிர்த்துப் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அதன்பிறகு கனகபுரா, சாத்தனூர் தொகுதிகளில் 5 முறை வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தேர்தலின்போது வேட்புமனுவில் இவர் காட்டிய சொத்து மதிப்பே 600 கோடி ரூபாய்க்கு மேல். அப்படியானால், உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்? என ஆச்சரியப்படுகிறார்கள் சொந்தக் கட்சியினரே.

amitshaஒக்கலிக்கர் சமுதாயத்தவரான இவருடைய வளர்ச்சியை தாங்க முடியாமல்தான் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியைவிட்டு வெளியேறினார். சித்தராமய்யா அரசில் மின்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சிவக்குமார்தான், கடந்த ஆண்டு குஜராத் சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸின் மானத்தை காப்பாற்றியவர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை எப்படியும் தோற்கடிக்க அமித் ஷா திட்டமிட்டார். குஜராத் பேரவையில் காங்கிரஸுக்கு இருந்த 57 உறுப்பினர்களில் 6 பேரை ராஜினாமா செய்ய வைத்தார். காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருந்தவரையே கட்சிமாறச்செய்து பா.ஜ.க.வின் வேட்பாளராக அறிவித்தார். வெற்றிபெற 44 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீஸ் அதிகாரிகளைக் கொண்டே கடத்தினார் அமித் ஷா.

இந்நிலையில்தான், காங்கிரஸைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களையும் மீட்டு கர்நாடகாவுக்கு கொண்டுவந்தார் சிவக்குமார். தனது ரிஸார்ட்டிலேயே பாதுகாப்பாக தங்கவைத்தார். உடனே, சிவக்குமார் மீது மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை ரெய்டுகள் ஏவப்பட்டன. ரெய்டுகளுக்கு அஞ்சாமல் எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்தினார். அமித் ஷாவின் முயற்சியை முறியடித்து அகமது படேல் வெற்றிபெற உதவினார். குஜராத் பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் மேலவையில் கிடைத்த வெற்றி காங்கிரஸுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அமித் ஷாவுக்கு கிடைத்த முதல் அடி அதுதான்.

குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கர்நாடக பேரவைத் தேர்தல்தான் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் சவாலாக இருந்தது. சித்தராமய்யாவின் அரசியல் வியூகங்களை முறியடிக்க மோடி 10 நாட்கள் 32 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அமித்ஷா ஒரு மாதம் கர்நாடகாவிலேயே தங்கி பணியாற்றினார்.

காங்கிரஸை தோற்கடிக்க பலவிதமான தகிடுதத்தங்களை மேற்கொண்டார்கள். ஆனாலும் பா.ஜ.க. 36 சதவீத வாக்குகளுடன் 104 இடங்களை மட்டுமே பெற்றது. 38 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 78 இடங்களையும், 18 சதவீத வாக்குகளைப் பெற்ற ம.ஜ.த. 38 இடங்களையும் பெற்றன.

முந்தைய தேர்தலில் அமித் ஷாவின் தந்திரங்களை பார்த்திருந்த காங்கிரஸ், இந்தமுறை தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே ம.ஜ.த.வுடன் தொடர்பில் இருந்தது. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சி ம.ஜ.த.வுக்கு முதல்வர் வாய்ப்பைக் கொடுத்து பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்தது. இதை எதிர்பார்க்காத பா.ஜ.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைத் தூக்கத் தொடங்கியது. ரெட்டி சகோதரர்கள் இரண்டு எம்.எல்.ஏ.க்களைத் தூக்கியேவிட்டனர்.

பா.ஜ.க.வின் தந்திரத்தை சிவக்குமார்தான் முறியடித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தனது ரிஸார்ட்டிலும், ஆந்திராவிலுமாக பத்திரப்படுத்தினார். உச்சநீதிமன்றத்தின் உதவியோடு பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவை தகர்ப்பதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

""பா.ஜ.க. தரப்பில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் அவர்களுடன் எனது சோர்ஸுகள் மூலம் நான் தொடர்பில்தான் இருந்தேன்'' என்கிறார் சிவக்குமார். அதாவது பா.ஜ.க.விலும் அவருக்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

அமித் ஷா, மோடி ஆகியோரின் இமேஜை தகர்த்ததிலும் பா.ஜ.க.வின் மிகப்பெரிய கணக்கு தவறாக முடிந்ததற்கும் காரணம், காங்கிரஸின் பணபலமான சிவக்குமார்தான் என்கிறார்கள் கர்நாடக அரசியல் நோக்கர்கள். எடியூரப்பா ஆட்சியை 56 மணி நேரத்தில் கவிழ்த்து, குமாரசாமி முதல்வராக வழியமைத்து, அதில் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரை துணைமுதல்வராக்கியதன் பின்னணியில் உள்ள சிவக்குமாரும் நிறைய எதிர்பார்ப்பில் இருக்கிறாராம்.

-ஆதனூர் சோழன்

nkn01.6.18
இதையும் படியுங்கள்
Subscribe