வீட்டுக்கு சீல்! விரக்தியில் தற்கொலை! வேடிக்கை பார்த்த போலீஸ்!

ss

போலீஸ் அதிகாரிகள், சட்டம் படித்தவர்களின் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் தகிக்கிறது. வல்லநாடு பெருமாள் கோயில் தெருவிலிருப்பவர் லாரி டிரைவரான சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு ப்ளஸ் 2 பயிலும் ஒரு மகளும், 10ஆம் வகுப்பு படிக்கிற ஒரு மகனும் உள்ளனர்.

ss

சங்கரன் சொந்தமாகத் தொழில் செய்வதற் காக லாரி வாங்கும்பொருட்டு தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 2020ஆம் ஆண்டில் 5 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். இதற்காக மாதந் தோறும் வட்டியாக ரூ.11 ஆயிரம் கட்டி வந்திருக் கிறார். சீராக ஓடிய லாரி ஓட்டம், கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும் படுத்துவிட்டது. விளைவு, ஓட்டமில்லாததால் சங்கரன் அந்த லாரியை விற்றுள்ளார். அவரால் கடந்த சில மாதங்களாகவே தவணைத் தொகையைக் கட்ட முடியாமல் போயிருக்கிறது. தவணைக் கடனைக் கட்டச் சொல்லி சங்கரனுக்கு நெருக்கடி கொடுத்த நிதி நிறுவனம், அவரது வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுமாறு கோ

போலீஸ் அதிகாரிகள், சட்டம் படித்தவர்களின் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் தகிக்கிறது. வல்லநாடு பெருமாள் கோயில் தெருவிலிருப்பவர் லாரி டிரைவரான சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு ப்ளஸ் 2 பயிலும் ஒரு மகளும், 10ஆம் வகுப்பு படிக்கிற ஒரு மகனும் உள்ளனர்.

ss

சங்கரன் சொந்தமாகத் தொழில் செய்வதற் காக லாரி வாங்கும்பொருட்டு தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 2020ஆம் ஆண்டில் 5 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். இதற்காக மாதந் தோறும் வட்டியாக ரூ.11 ஆயிரம் கட்டி வந்திருக் கிறார். சீராக ஓடிய லாரி ஓட்டம், கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும் படுத்துவிட்டது. விளைவு, ஓட்டமில்லாததால் சங்கரன் அந்த லாரியை விற்றுள்ளார். அவரால் கடந்த சில மாதங்களாகவே தவணைத் தொகையைக் கட்ட முடியாமல் போயிருக்கிறது. தவணைக் கடனைக் கட்டச் சொல்லி சங்கரனுக்கு நெருக்கடி கொடுத்த நிதி நிறுவனம், அவரது வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக் கிறது. நீதிமன்றமும் வீட்டை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

அதனடிப்படையில் நிதி நிறுவனம் போலீஸ் வரை போனதில், தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், முறப்பநாடு காவல் நிலைய போலீசார், நிதி நிறுவன ஊழியர்கள், அதன் வக்கீல்கள், பிப்ரவரி 1ஆம் தேதியன்று காலையில், வல்லநாட்டிலுள்ள சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்திருக்கிறார் கள். டி.எஸ்.பி. முன்னிலையில், வீட்டிலிருந்த சங்கரன், அவரது மனைவி பத்ரகாளி ஆகியோரை வலுக்கட்டாயமாக நிதி நிறுவனத்தினர் வெளி யேற்றியிருக்கிறார்கள். இதனால் கூச்சல் குழப்பமாக அந்தத் தெருவாசிகள் சங்கரன் வீட்டின் முன்பாகத் திரண்டனர்.

வீட்டிற்கு சீல் வைத்துவிடுவார் களே எனப் பதறிய சங்கரன், "ஐயா இப்ப நா ஐம்பதாயிரம் வச்சிருக்கேன். இன் னும் ரெண்டே நாள்ல ஒரு லட்சம் வந் துறும், கட்றேன். கொஞ்சம் பொறுங்க'' என்று சொல்லிக் கெஞ்சியதை டி.எஸ்.பி. கேட்கவேயில்லையாம். மாறாக கணவன் -மனைவியை அவர் வலுக்கட் டாயமாக வெளியேற்றியிருக்கிறார். வீட்டுச் சாமான்களை ஒதுக்கிக்கொள்ள மனைவி பத்ரகாளி கெஞ்சிக்கேட்டும் அவ காசம் கொடுக்கவில்லை யாம். அவர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டை சீல் வைப்பதி லேயே குறியாயிருந் திருக்கிறார்கள்.

ss

அதுசமயம் விரக்தி யில் வேகமாக வீட்டிற் குள்ளே ஓடிய பத்ரகாளி, வீட்டிலிருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து வந்து குடித்திருக் கிறார். இதைக்கண்டு பதறிப்போன பத்ரகாளியின் தாய் தடுக்க, அலறிய கணவர் சங்கரன் ஓடிவர, போலீசாரோ பூச்சி மருந்து பாட்டிலைத் தட்டிவிட, கீழே விழுந்த பூச்சி மருந்தை எடுத்து சங்கரனும் குடித்திருக்கிறார். குடித்த பூச்சி மருந்தின் வேகம் ஏற, கணவனும், மனைவியும் மயங்கி விழுந்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், வீட்டைப் பூட்டி சீல் வைப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். மயங்கிய சங்கரனோ, வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்குப் போராடியிருக்கிறார்.

பதறிப்போன தெருவாசிகள், முதலுதவி யாவது பண்ணுங்கய்யா எனக் கெஞ்சியும் கேட்காத டி.எஸ்.பி.யும், நிறுவன ஊழியர்களும், அவர் நடிக் கிறார் எனக்கூறி அந்த மக்களை விரட்டியதோடு, ஒங்க மேலயும் கேஸ் போடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்களாம். இதனிடையே, அந்தத் தெருவாசியான ராஜ், மற்றவர்களுடன் சேர்ந்து சங்கரனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஆட்டோவை அழைத்துவர, ஈவிரக்கமின்றி ஆட்டோவையும் எச்சரித்து திருப்பிவிட்டிருக்கிறார்கள் நிதி நிறுவனத்தினர்.

ssஇப்படியாக, வீடு முழுமைக்கும் சீல் வைத்த பின்னரே தம்பதியரின் சீரியஸான நிலையைக் கண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர் போலீசார். ஆனால் போகும் வழியிலேயே சங்கரனின் உயிர்பிரிந்தது. பத்ரகாளிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு கொடுமையாக, சங்கரன் வளர்த்த மூன்று நாய்களையும் வீட்டினுள்ளேயே வைத்து சீல் வைத்ததால், அவை உணவின்றி பரிதாபமாகக் குரைத்தபடியிருக்கின்றன வாம். நிதி நிறுவன அதிகாரிகள், மக்களைக் காப்பாற்றவேண்டிய போலீசார், வழக்கறிஞர்களின் கண்முன்னே இரண்டு மனிதர்கள் விஷம் குடித்து உயிருக்காகத் துள்ளத் துடித்துக் கொண்டிருப்பதையும் தெரிந்தே கொஞ்சங்கூடப் பதறாமல், அவர்களைக் காப்பாற்ற நினைக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதால் ஒருவரின் உயிர் போயிருக்கிறது. இன்னொருவர் உயிருக்குப் போராடியபடியிருக்கிறார்.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்க, அப்பகுதி மக்கள், போலீசாரின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து, தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். "இந்த டி.எஸ்.பி. மட்டும் நெனைச்சிருந்தா சங்கரனைக் காப்பாத்திருக்கலாம்" என்று கொந்தளித்த வல்லநாடுவாசிகள், "அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வந்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும்'' என்றனர் கொந்தளிப்புடன்.

இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி. சுதிரைத் தொடர்பு கொண்டு கேட்டதில், "ப்ராப்ளம் சால்வாயிருச்சி'' என்று மட்டும் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தவர், அதன்பின் தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். தூத்துக்குடி எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜானைத் தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்புகளை ஏற்கவில்லை. சீல் வைத்த வீட்டை மீண்டும் திறக்கலாம். போன உயிர் திரும்புமா?

-ப.இராம்குமார்

nkn080225
இதையும் படியுங்கள்
Subscribe