திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாட்டை சேர்ந்தவர் திருவரசன். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்துவரும் திருவரசன், தருமபுரி ஒட்டப்பட்டியிலுள்ள சமூகநீதி அரசு மாணவர் தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 19 மாணவர்கள் சேர்ந்து திருவரசனை அடித்துத் துன்புறுத்தி, அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். விடுதிக்கு சம்பந்தமில்லாத இருவர் விடுதிக்குள் வந்தும் அடித்துள்ளனர்.
அதன்பின் நடந்தவற்றை திருவரசன் நம்மிடம், “"என்னோட அறையில் இருந்த சீனியர் மாணவனின் ஹெட்போனை எடுத்து நான் பேசிக்கொண்டிருந்தேன். அது காணாமல் அவன் உட்பட மற்றவர்கள் தேடிக்கொண்டிருந்துள்ளார் கள். அவன் எங்கிட்ட கேட்கும்போது நான்தான்டா வச்சிருக்கேன்னு தந்துட்டேன். அதுக்காக 19 மாணவர்கள் சேர்ந்து என் வாய்ல துணிய வச்சி அடிச்சவங்க, என் கழுத்துல கத்தியை வெச்சு குத்திப்போட்டுடுவோம்னு சொன்னாங்க. மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் போனோம். எங்கிட்ட
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாட்டை சேர்ந்தவர் திருவரசன். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்துவரும் திருவரசன், தருமபுரி ஒட்டப்பட்டியிலுள்ள சமூகநீதி அரசு மாணவர் தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 19 மாணவர்கள் சேர்ந்து திருவரசனை அடித்துத் துன்புறுத்தி, அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். விடுதிக்கு சம்பந்தமில்லாத இருவர் விடுதிக்குள் வந்தும் அடித்துள்ளனர்.
அதன்பின் நடந்தவற்றை திருவரசன் நம்மிடம், “"என்னோட அறையில் இருந்த சீனியர் மாணவனின் ஹெட்போனை எடுத்து நான் பேசிக்கொண்டிருந்தேன். அது காணாமல் அவன் உட்பட மற்றவர்கள் தேடிக்கொண்டிருந்துள்ளார் கள். அவன் எங்கிட்ட கேட்கும்போது நான்தான்டா வச்சிருக்கேன்னு தந்துட்டேன். அதுக்காக 19 மாணவர்கள் சேர்ந்து என் வாய்ல துணிய வச்சி அடிச்சவங்க, என் கழுத்துல கத்தியை வெச்சு குத்திப்போட்டுடுவோம்னு சொன்னாங்க. மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் போனோம். எங்கிட்ட புகார் வாங்கி அவுங்கமேல வழக்கு போட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு முந்தின நாளே அவங்க அறையிலிருந்த கஞ்சா, சரக்கு எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டாங்க''’என்றார்.
மாணவன் தந்த புகாரின் அடிப்படையில் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறார்கள் உட்பட 21 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள் ளது. இரண்டு மாணவர்கள் தலைமறைவாகியுள்ள னர். இந்த பிரச்சனையை மறைக்க முயல்கிறார்கள் அதிகாரிகள் என வெதும்புகிறார்கள் ஜவ்வாது மலையின் மலைவாழ் மக்கள் சங்கத்தினர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட பட்டியல்- பழங்குடியின துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “"விடுதியில் 400 பேர் இருக்காங்க. விடுதியில் போதைப் பொருள் இருக்கறதுக்கான வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்ட வார்டன் சாமி நாதனிடம் விளக்கம் கேட்டுருக்கு, வாட்ச்மேன் மகேந்திரனை இடமாற்றம் செய்துட்டோம்''’ என்கிறார்.
சம்பவம் 2
தருமபுரி மாவட்டம் அம்பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் மகன் ஈஸ்வரன். வேலூர் மாவட்டம் அகரம் கிராமத்திலுள்ள எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பத்திலுள்ள சமூகநீதி மாணவர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். தற்போது இரண்டு கிட்னி செயலிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கள் கட்சியின் வடக்கு மா.செ. ஓம்பிரகாஷ், "ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என வார்டனிடம் சொன்ன போது, பக்கத்துல ஏதாவது டாக்டரைப் பார்த்துக் கன்னு சொல்லியிருக்காரு. ரூம்ல இருக்கற பசங்க ஆம்பூரில் குமரன் கிளினிக் பழனிவேல்ராஜனிடம் அழைத்துப்போக, அவர் இரண்டு ஊசி போட்டு மாத்திரை தந்து அனுப்பியிருக்காரு. காய்ச்சல் அதிகமா இருந்ததால் அவுங்க வீட்டுக்கு தகவல் சொன்னதும் அவனை ரயில்ல ஏத்திவிடுங்கனு சொல்லியிருக்காங்க. மொரப்பூரில் ரயில்ல இருந்து இறங்கினதும் மயங்கிவிழுந்திருக்கான். முதலில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி, பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பார்த்தப்ப கிட்னி செயலிழந்திருப்பது தெரியவந்திருக்கு, அதுக்கு ஊசிதான் காரணம்னு ரிப்போர்ட்ல சொல்லிருக்கு. விசாரிச்சப்ப, பழனிவேல்ராஜன் போலி மருத்துவர் அப்படின்னு தெரிஞ்சது, சேலம் போய் பார்க்கும்போது ஒரு கிட்னிதான் செயலிழந்திருந்தது, இப்போ இரண்டு கிட்னியும் செயலிழந்துடுச்சி. புகாரின் அடிப்படையில் அந்த போலி மருத்துவரை கைதுசெய்து கிளினிக்குக்கு சீல் வைத்துள்ளனர் மருத்துவ அதிகாரிகள்''’என்றார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி நலத்துறை அலுவலர் கதிர்சங்க ரிடம் நாம் தொடர்புகொண்டு கேட்ட போது, “"அது பள்ளி விடுதி, கந்திலி வார்டன் கூடுதலா அதனைக் கவனிக் கிறார். தருமபுரியிலிருந்து வர்றேன், ஒருநாள் தங்கிக்கிறேன்னு சொன்ன தால் அந்த பையனை விதிமுறைகளை மீறி மனிதாபிமான அடிப் படையில் ஒருநாள், இரண்டுநாள் தங்க வச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஆன்லைன் ரெக்கார்டுகளைக்கூட பார்த்துக்கொள்ளலாம். அதில் அந்த மாணவன் பெயர் இருக்காது அவ்வளவுதான்''’என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை சாந்த குமாரிடம் கேட்டபோது, "மூன்று மாதமாக அந்த விடுதியில் தங்கித்தான் காலேஜ் போய்வந்தான். என் மகன் துணிகள்கூட அங்கேதான் இருக்கு. என்னிடம் அந்த வார்டன் தொடர்புகொண்டு எப்படி இருக்கான்னு கேட்டார். செலவுக்கு பணம் தர்றதா சொன்னார்''’என்றார்.
அந்த மாணவன் விடுதியிலிருந்துதான் போய்வந்தது உறுதியாகியுள்ளது. ரெக்கார்ட் இல்லாமல் எப்படி மாணவர்களை தங்கவைத்தார் கள் அதிகாரிகள்? அவர்களுக்கு உணவு வழங்கியது எப்படி? என்கிற கேள்விகள் எழுகின்றன. அதேபோல் மற்றொரு சம்பவத்தில், "விடுதிக்குள் கஞ்சா, மது புழங்குகிறது' என்கிறார் அடிபட்ட மாணவர். "அதெல்லாம் இல்லை' என்கிறார் சம்பந்தப்பட்ட அதிகாரி.
விடுதி வார்டன், வாட்ச்மேன் மாணவர் களைக் கண்காணிக்காததாலே இந்த இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை நியாயமாக விசாரணை நடத்த எந்த மாவட்ட உயரதிகாரியும் முயற்சிக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியம் இரண்டு மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி யுள்ளது. விடுதியில் பெரிய அளவில் அதிகாரிகள் மோசடி வேலை செய்கிறார்கள்.
"உண்மை வெளிவரவும், பாதிக் கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைக் கவும் அரசு உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும்' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.