Advertisment

நம்பிக்கையில்லா தீர்மானம்! பரபரப்பில் பேரணாம்பட்டு நகராட்சி!

ss

கரமன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்கள் ஆளும்கட்சி கவுன்சிலர்கள்.

Advertisment

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி சேர்மன் பிரேமா வெற்றிவேல். வைஸ்சேர்மனாக தி.மு.க. நகர செயலாளர் ஜூபேர் அகமது உள்ளார். நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வில் 15 கவுன்சிலர்களும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலரும், 4 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர். பதவிக்கு வந்து 18 மாதங்கள் கடந் துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நகரமன்ற தலைவர் பிரேமா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் ஜானகி, சுல்தானா, சின்னா, ஷாகீரா பேகம், இந்திரா காந்தி, வரலட்சுமி, முஸ்லிம் லீக் கவுன்சிலர் தன்வீரா பேகம், சுயேட்சை கவுன்சிலர்கள் அத்திக், அப்துல் ஹமீத், நாகஜோதி ஆகியோர், கமிஷனர் வேலவனிடம் கடிதம் தந்துள்ளனர். இது அறிவாலயம் வரை பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

pp

நம்பிக்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் தந்துள்ள 5வது வார்டு கவுன்சிலர் அப்துல்ஹமீத் நம்மிடம், "நகராட்சி அலு வலகத்துக்கு ஸ்டேஷனரி வாங்கினேன், பிரிண்டருக்கு டோனர் வாங்கினேன் என 20 லட்ச ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. சமீபத்தில் நகராட்சிக்கு 2.5 கோடி ரூபாய் நிதி வந்தது. அந்த நிதியை அனைத்து வார்டு களுக்கும் பிரித்துத் தராமல், துணைத்தலைவர் தனக்கும், தன்னோடுள்ள சில கவுன்சிலர்களுக்கும் மட்டும் ஒதுக்கிக்கொண்டு, அவர்களின் வார்டு களில் மட்டும் பணிகளைச் செய்கிறார்கள். எங்கள் வார்டுகளில் குண்டுங்குழியுமான சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது. தெருவிளக்கு எரிவதில்லை. இப்படியிருப்பதால் மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள். இதுவரை சேர்மன் ஒருமுறைகூட மக்களிடம் குறைகேட்டதில்லை. 18 மாதங்களில் 6 கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளன .அதான் இந்த முடிவுக்கு வந்தோம்'' என்றார்.

Advertisment

ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் நம்மிடம், "15 வருடத்துக்கு முன்பு சுயேட்சை கவுன்சிலரா ஜெயிச்சிட்டு தி.மு.க.வுக்கு வந்தவருக்கு கட்சியில் ந.செ. பதவி, வைஸ்சேர்மன், சேர்மன் பதவிகளைத் தந்தது கட்சித் தலைமை. இவர் சேர்மனாக இருக்கும்போதே சில முறை விஜிலென்ஸ் ரெய்டும், இவர் வீட்டில் ஐ.டி. ரெய்டும் நடந்தது. இப்போது வைஸ்சேர்மனாக இருக்கார். ஆனால் சேர்மனாகவே நடந்துக்கறார். சேர்மனுக்காக அரசு ஒதுக்கியுள்ள ஜீப்பையே வைஸ்சேர்மன் தான் பயன்படுத்துறார். நகரமன்றக் கூட்டத் திலேயே சேர்மன் டம்மியா உட்கார்ந்துக்கிட்டு இருக்காங்க. ஒப்பந்ததாரர்களிடம் 15 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொண்டு, 2 சதவீதம் மட்டும்தான் தந்தாங்கன்னு கவுன்சிலர்களை ஏமாத்தறார். சேர்மனிடம் வார்டு குறைகளை முறையிட்டால் வைஸ்சேர்மனைப் பாருங்கன்னு சொல்றாங்க. வைஸ்சேர்மன் நாங்க சொல்றதை கேட்கறதேயில்லை. மா.செ. நந்தகுமாரிடம் முறையிட்டும் அவர் கண்டுக்கல. செயல்படாத சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் தந்ததும் மா.செ. நந்தகுமார் எங்களை அழைத்து, "அமைதியா இருங்க... எம்.பி. தேர்தல் வருது, உங்க சண்டையால் அங்க கட்சியை காலி செய்துடாதிங்க'ன்னு கேட்டுக்கிட்டார்'' என்றார்.

pp

நகரமன்ற தலைவர் பிரேமா வெற்றிவேலை தொடர்புகொண்டபோது நம்மிடம் பேசிய வெற்றிவேல், "எங்களுக்கு தெரியாததை ந.செ.விடம் கேட்டு செய்யறோம். அதுக்காக அவரின் கட்டுப்பாட்டில் இருக்கோம்னு சொல்றது பொய். காண்ட்ராக்ட் விட்டால்தானே கமிஷன் தர்றதுக்கு? எப்போ பார்த்தாலும் பணம், பணம்னு கேட்டால் நாங்க என்ன செய்யறது? சிலரின் தூண்டுத லால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் தந்திருக்காங்க'' என்றார்.

dd

குற்றச்சாட்டுகள் குறித்து நகரமன்ற துணைத்தலைவரும், தி.மு.க. ந.செ.வுமான ஜூபேர் அகமதுவிடம் கேட்டபோது, "நான் ஏற்கெனவே சேர்மன், வைஸ்சேர்மனாக இருந்திருக் கிறேன். இப்போது வைஸ் சேர்மனாக இருக்கிறேன். சேர்மனாக இருக்கறவங்க அந்த பதவிக்கு புதுசா வந்திருப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்டு செய்றாங்க. சேர்மன் ஒருமுறை துறை அமைச்சர் நடத்திய கூட்டத்துக்கும், இன்னொரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டத்துக்கும் சென்றதால் நான் கூட்டத்தை நடத்தினேன். என்மீது 2 கோடி ரூபாய்க்கு ஊழல் புகாரை சிலர் சொன்னார்கள். 200 ரூபாய் ஊழல் புகாரை நிரூபியுங்கள் எனச்சொன்னேன் இதுவரை புகார் சொன்னவர் ஆதாரத்தை தரவில்லை. கார்களுக்கு லட்சங்களில் டீசல் போட்டதாக தவறான தகவலைப் பரப்பினார்கள். இதற்கு முன்பு கமிஷனராக இருந்தவங்க எந்த வேலையும் செய்யல. எந்த டெண்டரும் விடல. இப்போது 2 கோடியில் தெருவிளக்கு மாற்றுவது, நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 56 சாலைகள் போடுவதற்கு நிதி வந்துள் ளது. இதற்கான டெண்டர்கள் இனிதான் நடக்கப்போகிறது. நிர்வாகம் வெளிப்படை யாக நடக்கிறது. சுயேட்சை கவுன்சிலர்கள், எங்கள் கட்சியைச் சேர்ந்த சில கவுன் சிலர்களுக்கு ஆசை காட்டியதால் அவர்களோடு சேர்ந்துக்கொண்டு பிரச்சினை செய்தாங்க'' என்றார்.

சமாதானம் செய்யப்பட்டா லும் பிரச்சனை புகைந்துகொண்டே யிருக்கிறது. பேரணாம்பட்டு போல் குடியாத்தம் நகராட்சியிலும் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாமா என கவுன்சிலர்கள் சிலர் ரகசியமாக ஆலோசனை நடத்திவரு கின்றனர்.

nkn260823
இதையும் படியுங்கள்
Subscribe