Advertisment

கொடூர கள்ளச்சாராய சாவு! கோட்டை விட்ட தி.மு.க அரசு !

ra

fgzdrgae

Advertisment

கள்ளக்குறிச்சி அருகே, விஷச்சாராயம் குடித்த 39 பேர் (20-ந் தேதி மதியம் 1 மணி நிலவரப்படி) அடுத்தடுத்து பலியான சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஜுன் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கொத்துக் கொத்தாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு ஒன்றுபோலவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதோடு... சிலருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனை நிர்வாகம் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தது.

ஜூன் 19ஆம் தேதி காலை, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், பிரவீன்குமார், சேகர், மற்றொரு சுரேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா ஆகிய மூவர் உயிரிழந்தனர். மருத்துவமனையெங்கும் பலியானவர்களின் உறவினர்களின் ஓலம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

Advertisment

முதல்கட்ட விசாரணையில், கருணாபுரத்தைச் சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவருடைய சகோதரர் தாமோதரன் ஆகியோர் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்றதும், அதை வாங்கிக் குடித்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கண்ணுக்குட்டியின் வீட்டிலிருந்து 200 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சாராயத்தை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் பகுப்பாய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில், அதில் மெத்தனால் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்தே இந்த மரணங்களுக்குக் காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த விஷச்சாராயம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நாராயணசாமி, சுப்ரமணி, ராமு ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஜூன் 19ம் தேதி இரவுக்குள் விஷச்சாராயம் குடித்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20ஆம் தேதி காலையிலிருந்து பலி எண்ணிக்கை உயர்ந்து 37-ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமென அஞ்சப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விக்கிரவாண்டி சட்டமன்

fgzdrgae

Advertisment

கள்ளக்குறிச்சி அருகே, விஷச்சாராயம் குடித்த 39 பேர் (20-ந் தேதி மதியம் 1 மணி நிலவரப்படி) அடுத்தடுத்து பலியான சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஜுன் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கொத்துக் கொத்தாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு ஒன்றுபோலவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதோடு... சிலருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனை நிர்வாகம் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தது.

ஜூன் 19ஆம் தேதி காலை, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், பிரவீன்குமார், சேகர், மற்றொரு சுரேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா ஆகிய மூவர் உயிரிழந்தனர். மருத்துவமனையெங்கும் பலியானவர்களின் உறவினர்களின் ஓலம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

Advertisment

முதல்கட்ட விசாரணையில், கருணாபுரத்தைச் சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவருடைய சகோதரர் தாமோதரன் ஆகியோர் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்றதும், அதை வாங்கிக் குடித்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கண்ணுக்குட்டியின் வீட்டிலிருந்து 200 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சாராயத்தை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் பகுப்பாய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில், அதில் மெத்தனால் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்தே இந்த மரணங்களுக்குக் காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த விஷச்சாராயம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நாராயணசாமி, சுப்ரமணி, ராமு ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஜூன் 19ம் தேதி இரவுக்குள் விஷச்சாராயம் குடித்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20ஆம் தேதி காலையிலிருந்து பலி எண்ணிக்கை உயர்ந்து 37-ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமென அஞ்சப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விஷச்சாராயப் பலி சம்பவம், ஆளுங்கட்சியை ரொம்பவே அப்செட் ஆக்கியதாகச் சொல்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மூத்த அமைச்சர்களான மா.சுப்ரமணியன், எ.வ.வேலு ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், ஊடகங்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத், ""இந்த உயிரிழப்பிற்கு கள்ளச்சாராயம்தான் காரணம் எனச் சிலர் வதந்தி பரப்புகின்றனர். வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு போன்ற காரணங்களால் தான் அவர்கள் இறந்துள்ளனர்'' என்று பூசி மெழுகினார். விஷச்சாராயத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து, பல மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. மெத்தனால் கலந்த சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி மீது ஏற்கெனவே கள்ளச்சாராய வழக்குகள் இருந்தும், அவர்மீது நடவடிக்கை இல்லாததால் தான் இவ்வளவு பெரிய துயரம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்ததால், மாவட்ட காவல்துறை எஸ்.பி., சமய்குமார் மீனாவை பணியிடைநீக்கம் செய்த தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அத்துடன், கள்ளச்சாராய குற்றங்களைத் தடுக்கத் தவறியதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வன், ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி., ஆய்வாளர் பாண்டிசெல்வி, எஸ்.ஐ. பாரதி, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன், எஸ்.ஐ. சிவசந்திரன், ஏட்டு பாஸ்கரன், எஸ்.எஸ்.ஐ. மனோஜ் ஆகியோரும் கூண்டோடு பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். சூட்டோடுசூடாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட புதிய எஸ்.பி.,யாக ரஜத் சதுர்வேதி ஆகியோரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. விஷச்சாராயப் பலிகள் விவகாரத்தில், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அரசுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று அ.தி.மு.க. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராய வழக்கு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருணாபுரம் பகுதி மக்களிடம் கேட்டபோது...

""கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மாவட்டம் வரை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சாராயம் பிரபலம். கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதும் கல்வராயன்மலையை சீர்ப்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்ததில் சாராயம் காய்ச்சுவது ஓரளவு குறைந்தது. கல்வராயன் மலைகிராமங்கள் சிலவற்றில் காய்ச்சப்படும் சாராயம் கீழே இறங்க அடிவாரத்திலுள்ள கீழ்பரிகம் செக்போஸ்ட் கடந்துதான் வரவேண்டும். இங்கே போலீஸ் எந்த கெடுபிடியும் செய்வதில்லை. பகலிலேயே கட்சிக்கொடி கட்டிய கார்களில் சாராயம் கடத்தி வரப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாமல் இருக்க கரியலூர் காவல்நிலையத்துக்கும், கலால் போலீஸýக்கும் மாத மாமூல் மட்டும் 10 லட்சம்வரை தரப்படுகிறதாம்.

மலைச்சாராயம் வரத்து குறைவானதால் பாண்டிச்சேரியில் இருந்து ஸ்பிரீட் கடத்தி வரப்பட்டு அதில் தண்ணீர் கலந்து பாக்கெட் போட்டு விற்கத் தொடங்கினர். மலைச்சாராயம் போல் இதில் போதை அதிகமாகவேண்டும் என தண்ணீர் குறைவாக கலப்பது வழக்கம். இந்த பாக்கெட் சாராயம் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி நகரத்திற்குள் ஏமப்பேர், கனகாபுரம் பகுதிகளில் விற்கப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். அந்த புகாரை கள்ளக்குறிச்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கலால் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் சும்மா பெயருக்கு பெட்டி கேஸ் போட்டு கணக்கு காட்டியுள்ளனர். இதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ் ஆதரவோடு சாராயம் விற்பனை நடந்தது. இப்போதும் தெருவெல்லாம் சாராய காலி பாக்கெட்கள், டம்பளர்கள் இருக்கின்றன. சாராயம் குறித்த புகார்களை எஸ்.பி சமயசிங் மீனா கவனத்துக்கு கொண்டு செல்லாமலே தடுத்துள்ளார் எஸ்.பி தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம். இந்த கூட்டணிக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை இப்போது கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கோவிந்தராஜ் தந்துள்ளார்.

ஜீன் 19ஆம் தேதி காலை சாராயச்சாவு தொடங்கியதும் எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டுகளும் இதனை எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு போகவில்லை. மீடியாவில் செய்தி வெளியான பின்பே எஸ்.பி இதுகுறித்து எஸ்.பி. இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.களை அழைத்து கேட்டபோது, "வேறு எதற்கோ டெத்தானதை சாராயம் என்கிறார்கள்' என விவகாரத்தை மறைத்துள்ளனர். அவர்கள் சொன்னதை நம்பி, "இது விஷச்சாராய சாவு இல்லை' என டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தகவல் சொல்லியுள்ளார் எஸ்.பி. தலைமைச்செயலாளர், மாவட்டஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் விசாரித்தபோது, "எஸ்.பி தனக்கு தந்த ரிப்போர்ட்படி இது விஷச்சாராயம் மரணமில்லை என தகவல் சொன்னார். "சட்டமன்றம் கூடும் சமயத்தில் இது பெரிய பிரச்சனையாகக்கூடாது' என கலெக்டர், எஸ்.பி.க்கு ஆளும்கட்சி மா.செ. கம் எம்.எல்.ஏ. ஒருவர் நெருக்கடி தர... செய்தியாளர்கள் சந்திப்பில் "இது சாராய மரணம் இல்லை' என்றார் கலெக்டர். அடுத்தடுத்த மரணங்கள் இது விஷச்சாராயம்தான் என்பது உறுதியானதால், கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு இருவரும் கள்ளக்குறிச்சிக்கு வருகைதந்து ஆறுதல் சொல்லிச்சென்ற, அடுத்த எட்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து 16 பேர் மரணத்தை தழுவினர். இதுவரை 33 பேர் மரணமடைந்துள்ளனர்.

மாநில உளவுப்பிரிவினரும், மாவட்ட தலைநகரத்திலேயே கள்ளச்சாராயம் விற்பது குறித்து மேலிடத்துக்கு சரியாக நோட் போடவில்லை. மாதா மாதம் அவர்களும் மாமூல் வாங்கியுள்ளனர். விவகாரம் கைமீறிப் போன பின்பே "நிறைய மரணங்கள் நடக்கும்' என ரிப்போர்ட் போட்டு தப்பித்துக்கொண்டது.

மாநில உளவுப்பிரிவுப் போலீஸ் அதிகாரி ஒருவரோ, ""கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இப்ப மட்டுமல்ல எப்பவும் சாராயம் விற்பது வழக்கம்தான். போலீஸôரும் மாமூல் வாங்கிட்டு, கண்டுக்கிறது கிடையாது. சும்மா கணக்கு காட்டுறதுக்காக கல்வராயன் மலையில் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினோம், கீழே கொட்டி அழிச்சோம்னு, வாரத்துக்கு ஒருமுறை பேப்பர்காரங்ககிட்ட படத்தக் கொடுத்து, செய்தி போடச் சொல்றாங்க போலீஸ்காரங்க. இங்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடையிலும், தோட்டத்திலும், ஊர் மந்தையிலும் பாக்கெட் சாராயம் வித்துகிட்டுத்தான் இருக்காங்க. யார், யார் வியாபாரிகள் என்பது உள்ளூர் போலீஸôருக்கு தெரியும். போனவருடம் இப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பக்கத்துல கள்ளச்சாராயம் குடிச்சு 22 பேர் செத்தாங்க. அவங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிச்சார் முதல்வர் ஸ்டாலின். அப்புறம் அது கள்ளச்சாரயம் இல்ல, போலி சாராயம்னு சொன்னாங்க. அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. அதுல பாருங்க சாராயம் விற்றவனும் அத குடிச்சு செத்து போனான். அவன் குடும்பத்திற்கும் நிவாரணம் அறிவிச்சு, பின்னாடி சர்ச்சையானதால், நிவாரண அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது'' என்றார் அவர்.

இது இப்படியிருக்க, முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், "இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்'னு பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞரான பாஸ்கர் மதுரமோ, ""இத்தனை உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராய விவகாரத்தில் அதிகாரிகளுக்கு இடமாற்றம், தற்காலிக சஸ்பெண்ட் மட்டும் போதாது. அதிகாரிகளுக்குத் தெரியும் யார் அதனை விற்பது என்று. ஜனவரி தொடங்கி இன்றுவரை மேற்கண்ட மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவில் மட்டும் 712 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் 33 சாராயம் விற்பனை செய்த வழக்கு. பறிமுதல் செய்தது 2848 லிட்டர்கள். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25. ஆனால், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக பேட்டரி செல், வெல்லம், நமச்சாரம் விற்றவன் மீது எத்தனை வழக்கு போடப்பட்டுள்ளது? அரசு, அதிகாரிகளை நம்பித்தான் உள்ளது. 1996ம் ஆண்டு துவங்கி சுமார் 4 வருடம் அப்போதைய ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் தென் மாவட்டத்தில் முற்றிலுமாக சாராயம் ஒழிக்கப்பட்டது. அதனால் பெரும்பாலான சாதிக் கலவரங்கள் தடுக்கப்பட்டது. அப்போதைய அதிகாரிகள் இப்பொழுது டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி.க்கள் அந்தஸ்தில் இருக்கின்றனர். அவர்களை இங்கு களத்தில் இறக்குங்கள். முற்றிலும் கள்ளச்சாராயம் அழிக்கப்படும். இன்னொன்று, அதிகாரிகளால் தான் இந்த உயிர் இழப்புக்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உச்சபட்ச தண்டனை கொடுங்கள். கள்ளச்சாராயம் என்பதே எங்கும் இருக்காது'' என்கின்றார் அவர்.

கள்ளச்சாராய சாவில் முக்கிய பங்கு ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரைத்தான் அனைவரும் கைகாட்டுகிறார்கள். இந்த எம்.எல்.ஏ. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வராயன் மலைப்பகுதயில் காலங்காலமாக கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்வதில்லையாம்.

nkn220624
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe