Advertisment

ஆணவக் கொலை? பரிதவிப்பில் குடும்பம்! -மதுரை திகு... திகு!

ss

ன் மகன் ஆணவக் கொலை செய்யப்பட் டிருப்பதாக பெற்றோர் வலியுறுத்த, போலீசா ரோ அப்படியெல்லாம் இல்லையெனக் கூற, அக் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே போராட்டம் நடத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத் தைச் சேர்ந்த காளையனின் தந்தை லிங்கு சாமியிடம் பேசினோம்... "என் மகன் காளையன் டிப்ளமோ பட்டதாரி. அதே கிராமத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்ததாகச் சொல்லி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி என் வீட்டிற்கே வந்து மிரட்டினார்கள். ‘"கீழ் சாதியான உனக்கு எங்க வீட்டுப் பெண் கேட் குதோ? குடும்பத்தோடு எரிச்சுப் புதைச்சுடு வோம்!'’ என்று எங்களை மிரட்டியவர்கள், என் மகனை இழுத்துப்போட்டு அடித்தார்கள். நான் அவர்களை கையெடுத்துக் கும்பிட்டு, "மன்னிச் சு

ன் மகன் ஆணவக் கொலை செய்யப்பட் டிருப்பதாக பெற்றோர் வலியுறுத்த, போலீசா ரோ அப்படியெல்லாம் இல்லையெனக் கூற, அக் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே போராட்டம் நடத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத் தைச் சேர்ந்த காளையனின் தந்தை லிங்கு சாமியிடம் பேசினோம்... "என் மகன் காளையன் டிப்ளமோ பட்டதாரி. அதே கிராமத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்ததாகச் சொல்லி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி என் வீட்டிற்கே வந்து மிரட்டினார்கள். ‘"கீழ் சாதியான உனக்கு எங்க வீட்டுப் பெண் கேட் குதோ? குடும்பத்தோடு எரிச்சுப் புதைச்சுடு வோம்!'’ என்று எங்களை மிரட்டியவர்கள், என் மகனை இழுத்துப்போட்டு அடித்தார்கள். நான் அவர்களை கையெடுத்துக் கும்பிட்டு, "மன்னிச் சுடுங்க, அவனை கண்டிக்கிறேன்... உங்க பக்கமே வரமாட்டான்' என்று கெஞ்சியும் விடாமல் என் மகனை அடித்துவிட்டுச் சென்றார்கள்

Advertisment

mm

கொஞ்சநேரத்தில் இன்ஸ்பெக்டர், “"உன் மகன் காளையன் மீது புகார் வந்திருக்கு. ஸ்டேச னுக்கு வா' என்று கூப்பிடவும் நான், என் மகனை அழைத்துச்சென்றேன். அங்கு பெண்ணின் தாய் மாமா இராமர், சித்தி மஹா, அவர்களது ஆட்கள் வந்திருந்தனர். போலீஸார் என் மகனை "ஏண்டா அந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டினியாமே.. உன்னை போக்ஸோ வழக்கில் உள்ளே தள்ளிடுவோம்'' என்று எங்கள் கண்முன்னாலே மிரட்டினார்கள். "குடும்பத்தோடு பெண்வீட்டார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு போங்கள்' என்றார்கள்.

நானும், என் மனைவியும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். ஆனா என் மகன் காளையன், "நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண் டும். அவ என்னை காதலிக்கலைனு சொல்லட் டும், மன்னிப்பு கேட்கிறேன்' என்றதும் அவனை அடிக்கப் பாய்ந்தார்கள். "அவன் சின்னப்பையன் விட்டுருங்க, இனி அந்தப் பொண்ணு இருக்கிற பக்கமே வரமாட்டான்' என்று சொல்லி வீடுவந்து சேர்ந்தோம். அடுத்தநாள் வேலைக்குப் போன மகன் இரவாகியும் வீடு திரும்பவில்லை. போனும் ஸ்விட்ச்-ஆப் ஆயிருந்தது. சந்தேகப் பட்டு கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித் தோம். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடிவந்த நிலை யில், இரண்டு நாள் கழித்து எங்கள் கிராமத்திலிருக்கும் கண்மாயில் காளையன் சடல மாக ஒதுங்கியுள்ளதாக போலீ ஸார் தெரிவித்தனர். அவன் ரொம்ப தைரியமானவன். ஏதோ பண்ணிட்டாங்க என்று கதறியழுதோம். போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிறகு உடலை ஒப்படைத்தனர். வழக்கை சந்தேக மரணம் என மாற்றி பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும்'' என்று கதறினார்.

Advertisment

திருமங்கலம் காவல் ஆய்வாளரிடம் பேசினோம். "காளையன் மரணம் குறித்து போஸ்மார்ட் டம் ரிப்போர்ட் முழு மையாக வரவில்லை. விசாரணை செய்துவருகிறோம். வேறு எதுவும் கேட்காதீர் கள்''’என்று தொடர்பைத் துண்டித்தார்.

மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் நம்மிடம், “"இந்த சம்பவம் நடந்த ஊரான வேப்பங்குளம், மருதங்குளம் சாதிய வன்கொடுமைகள் ஊறிய கிராமங்கள். ஏற்கனவே கீரிப்பட்டி, பாப்பாபட்டியை தலித் தொகுதியாக அறிவித்ததால் தேர்தல் நடக்காதபோது இந்த கிராமங்களிலும் தேர்தல் நடக்கவில்லை. பையன், பொண்ணு இரண்டும் வெவ்வேற சமூகம். இருவரும் காதலித்துவந்துள்ளனர். அந்த பெண்ணின் சித்தி, பையனின் சித்தப்பாவிற்கு போன்செய்து "எங்க உறவுக்கார இளந்தாரிப் பையன்கள் காளையனை அடிக் கப்போறதா பேசிக்கிறாங்க. அவனை எங்காவது வெளியூருக்கு அனுப்பி வையுங்க' என்று எச்சரித்த ஆடியோவையும் காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் காண்பித்துவிட்டோம்.

காவல் உயரதிகாரிகளே இந்த விசயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஆணவக் கொலை. காளையனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும். வழக்கை சி.பி.சிஐ.டி. வசம் ஒப்படைக்கவேண்டும். அதுவரை உடலை வாங்கமாட் டோம்''’என்றார் ஆவேசமாக.

கொல்லப்பட்ட காளையனின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்குமா?

nkn290125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe