மித்ஷாவின் தமிழக விசிட் என்பது வழக்கம்போலவே பல அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது விசிட்டை பயன்படுத்தி ஏராளமான கலெக்சன் தென் மாவட்டங்களில் நடந்துகொண்டிருக் கிறது. முன்னாள் பா.ஜ.க. மா.த. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்.பி. சீட்டுக்கு வசூல் செய்ததுபோல் அமித்ஷாவின் தமிழக விசிட்டுக்கும் செலவு செய்ய வேண்டும் என்ற போர்வையில் அடுத்து நீங்கதான் எம்.எல்.ஏ. என தொழிலதிபர்களிடமும், ‘பசையான அரசியல்வாதிகளிடமும் பலமான கலெக்சன் நடந்துள்ளது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தொழிலே மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பதுதான். பொதுவாக டெலிபோன் தொடர்புகளுக்கே அரிதானவர் என ஓ.பி.எஸ்.ஸால் குற்றம்சாட்டப்பட்ட நாகேந்திரன் கலெச்சனுக்கு என தனி வாட்ஸ்ஆப் நம்பரே வைத்திருக்கிறார். அதில் தி.மு.க. அமைச்சர்கள், முன்னாள் மா.த.வுக்கு கொடுத்த மாதிரியே பணம் கொடுக்கிறார்கள் ‘அந்த வாட்ஸ்ஆப் நம்பரை கண்காணிப்பு செய்யுங் கள்’என டெல்லிக்கு அந்த நம்பரை புகாராக அனுப்பியிருக்கிறார்கள் பா.ஜ.க.வினர். 

Advertisment

நயினாரால் புதிதாக கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தொழிலதிபர் ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் மற்றும் சவேரா சக்ரவர்த்தி ஆகியோர் கலெக்சனில் தூள் கிளப்புகிறார்களாம். முன்னாள் மா.த., எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ்.சை முன்னிறுத்த, துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் டெல்லிக்கே சென்று கோரிக்கை வைத்தாராம். அதுபற்றி அவர் ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்டபோது, ‘அதுக் கெல்லாம் நான் வரல’ என்று மறுத்து விட்டாராம். ‘அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக்கூடாது’ என முன்னாள் மா.த. தன்னு டைய கடுமையான முயற்சியை தொடரு கிறாராம். அமித்ஷாவின் வருகையை யொட்டி அமித்ஷாவும் எடப்பாடியும் சந்திப்பார்கள் எனக் கணக்கு போட்டு தனது சீட் பேரத்தை துவங்கியுள்ளது பா.ஜ.க. பொன்னார் தனக்கு சீட் வேண்டாம் என மறுத்து விட்டார். மொத்தம் 45 சீட்டுகளில் ஆரம்பித்து பேரம் நடக்கிறது. அதில் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், முன்னாள் மா.த., கருப்பு முருகானந்தம் போன்ற சீனியர்களுக்கு 10 சீட் தரப்படுமாம். கடைசியில் 30 சீட் என பேரத்தில் பா.ஜ.க. இறங்கிவரும். அதில் 25 சீட் என எடப்பாடி நிர்ணயிப்பார் என்கிறது பா.ஜ.க. தரப்பு. 

மொத்தத்தில் முக்குலத்தோர் வாக்குகளை பா.ஜ.க. பக்கம் திரட்டுவதுடன் கூட்டம் நடக்குமிடம் கன்னியாகுமரி என்பதால் பா.ஜ.க.வுக்கு அங்கு இருக்கும் செல்வாக்கில் இருபதாயிரம் பேரை எளிதாக உட்கார வைக்க முடியும். மொத்தம் 40 ஆயிரம் பேர் கூட்டத்திற்கு வரு வார்கள் எனத் திட்ட மிடப்பட்டுள்ளது. ஆனால் முக்குலத் தோரில் ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் நாங்கள் இந்தமுறை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என பா.ஜ.க.விடமே தெரி வித்து விட்டார்கள். முன்னாள் மா.த.  இவர்களை தனியாக போட்டியிட வைத்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தலாம் எனச் செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே தி.மு.க.விலும் ம.தி. மு.க.விலும் கோலோட்சிக் கொண்டிருந்த பிரமுகரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கான முயற்சி தீவிரம் அடைந் துள்ளது. ஓ.பி.எஸ். அமித்ஷாவை சந்திக்காத நிலையில், இ.பி.எஸ். அமித்ஷாவுடன் பேசுவார் என எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிற கோஷத்தை மறுபடியும் முன்வைத்தால் அரசியல் பரபரப்புகள் தொற்றிக்கொள்ளும். மொத்தத்தில் அமித்ஷாவின் இந்த விஜயம் தமிழக அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். அமித்ஷா அங்கு இறங்குவதற்கு ‘ஹெலிபேட்’ தளம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக திருநெல்வேலியில் ஹெலிபேடை அமைத்திருக்கிறார்கள் மாநில போலீசார். 

Advertisment

அமித்ஷா முன்னிலையில் தி.மு.க.வினர் பலர் பா.ஜ.க.வில் இணைவார்கள் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித் திருக்கிறார். ஏற்கெனவே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற கூட் டணிக் கட்சி ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணை யும் எனச் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய வர் முருகன். ம.தி. மு.க.வை குறிவைத்து இவர் சொன்ன ஹேஷ் யம் இன்றுவரை உண் மையாகவில்லை. 

ம.தி.மு.க. ‘தி.மு.க. கூட்டணியில் உறுதி யாக நிற்கிறோம்’ என அறிவித்து விட்டார்கள். அதனால் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க. வில் தி.மு.க.வினர் இணைகிறார்கள் என்பதைக் காட்ட பல முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சிக்காரர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறார்கள் பா.ஜ.க.வினர். 

அவர்களில் பலர் ‘செல்லாத நோட்டுகள்’ என வர்ணிக்கும் தி.மு.க.வினர்... அன்வர் ராஜா, மைத்ரேயன் போல ஆளுமைமிக்க ஆட்களை  பா.ஜ.க.வால் திரட்ட முடியவில்லை என  பா.ஜ.க. முயற்சிகளை கிண்டல் அடிக் கிறார்கள்.   

Advertisment

amitsha1