கலைஞர் முதல்வராக இருந்தபோது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் அமைக்க விரும்பினார். அவர் காலத்தில் அதற்கான கட்டுமான வேலைகள் வேகமாக நடந்தது. அந்தப் புதிய சட்டசபைக் கட்டிடம் சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டது.
2011-ஆம் ஆண்டு ஜெ. ஆட்சி வரும்வரை சில சட்டசபைக் கூட்டங்கள் பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்ட அந்த புதிய சட்டசபை வளாகத்தில் நடந்தது. அந்த சட்டசபை வளாகத்துடன் புதிய தலைமைச் செயலகத்தையும் கலைஞர் கட்டினார். கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகம் 36 அரசுத்துறைகள் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறி அவர் கட்டிய சட்டசபையை விட பழைய சட்டசபையே சிறந்தது என 2011-ஆம் ஆண்டு அறிவித்தார் ஜெ.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ஒருமுறை கூட போகாமல் அந்தக் கட்டிடத்தையே நிராகரித்தார் ஜெ. அதற்கு முன் 2001-2006 காலகட்டத்தில் ஜெ.வின் பங்களா அமைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை சிறுதாவூர் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஆலோ சனை செய்து கைவிட்டார். தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் ஆறாயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி விட்டது என்றும், அங்கே அலுவலகம் திறப்பதற்காக தி.மு.க. அமைச்சர்கள் பெயரில் நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி யுள்ளனர் என்றும் இந்த முயற்சிகளை பா.ஜ.க. எதிர்க்கும் என மே மாதம் 8-ஆம் தேதி அண்ணாமலை அறிக்கை வெளி யிட்டுள்ளார்.
இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் கேட்டபோது, மகாபலிபுரம் நகரத்தின் நுழைவாயிலான பூஞ்சேரி பக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையான கிழக்கு கடற்கரை சாலை பகுதியான கடம்பாக்கம் என்கிற கிராமத்தில் தி.மு.க. நூறு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. தனியாரிடம் வாங்கப்பட்ட நிலத்தில் எம்.ஏ.எம்.ராமசாமியின் உதவியாளரான ராஜேந்திரனின் நிலமும் வருகிறது. தி.மு.க. இந்த நிலத்தை 2020-ஆம் ஆண்டே வாங்கிவிட்டது. நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வாகனங் களை நிறுத்துவதில் சிரமம் இருக் கிறது. பொதுக்குழு, செயற்குழு, மாநாடு போன்றவற்றை கலைஞர் அரங்கம் எனப்படும் அண்ணா அறிவாலயத்துக்குப் பக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த முடியவில்லை என்பதால் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன் இந்த நிலம் வாங்கப் பட்டது. அதன் பத்திரப் பதிவுக்கு மு.க.ஸ்டாலினே நேரடியாக திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து கையொப்பமிட்டார்.
"அண்ணா அறிவாலயம்' போல "கலைஞர் அறிவாலயம்' என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான திருமண மண்டபத்தைக் கட்டி, அங்கு பொதுக்குழு, செயற்குழு, மாநாடு நடத்துவது என தி.மு.க.வின் அறக்கட்டளை முடிவு செய்தது. எதிர்க்கட்சியாக எடப்பாடி ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட சொத்து அது என்கிறார்கள் தி.மு.க. தலைமை நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.
"இதற்கும், அண்ணாமலை சொல்லும் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம், 6,000 ஏக்கர் அரசாணை, ஆரம்பகட்ட வேலை என இதற்கும் என்ன சம்பந்தம்?' என தமிழக அரசு வட்டாரங்களைக் கேட்டோம். மே மாதம் முதல்வாரத் தில் முதல்வர் ஸ்டாலின், அதிகாரி களிடம் ஒரு விவகாரத்தைப் பற்றி விவாதித்தார். முதல்வரோடு மிக நெருக்கமான அதிகாரிகள் அந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். அதில் முதல்வர் "மகாபலிபுரத்துக்குப் பக்கத்தில் தலைமைச் செயலகத்தை மாற்றலாம் என ஒரு திட்டம் இருக்கிறது' என பேசியிருக்கிறார்.
அவர் பேசிய மறுநாளே, அண்ணாமலை அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். இது முதல்வருக்கு பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அந்த அதிகாரிகளிடம், "நான் உங்களிடம் மட்டும்தான் பேசினேன். இது எப்படி அண்ணாமலைக்குப் போனது'' என கோபத்துடன் கேட்டிருக்கிறார். இந்த அதிகாரிகள் முதல்வரின் யோசனை பற்றி தங்களுக்குள் பேசியிருக்கிறார்கள். அதில் ஒருவர் மத்திய அரசுக்கு முதல்வரின் யோசனை பற்றி தெரிவித்திருக்கிறார். "இப்படித்தான் தமிழக அரசின் ரகசியங்கள் கசிந்து மத்திய அரசுக்கு சொல்லப்படுகிறதா? என முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்' என்கிறார்கள் கோட்டையில் உள்ள உயரதிகாரிகள்.
கலைஞர் சட்டசபை அமைந்த ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞரின் சிலையை அமைத்து அழகு பார்த்த முதல்வர் ஸ்டாலின், விவாதத்திற்குள்ளான அந்தக் கட்டிடத்தில் இயங்கிவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை உடனடியாக மாற்ற விரும்பவில்லை. அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டங் களையும் ஆராய்ந்துவரு கிறார். மாமல்லபுரத் தில் கலைஞர் அறிவா லயம் என்பது கட்சி யின் திட்டம். தலை மைச் செயலகம் என்பது முதல்வரின் தற்போதைய எண்ணம்.
"இது ஒரு கனவுத் திட்டம். அதை அண்ணா மலைக்கு மெசேஜ் போட்டு தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டார்கள் அதி காரிகள்' என முதல் வரின் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கள் தி.மு.க. மூத்த தலைவர்கள்.