கோட்டை நிர்வாகத்தில் ஓட்டை! பவர்ஃபுல் போஸ்டிங்கில் ஊழல் அதிகாரிகள்

g

கொரோனா நெருக்கடிகளுக்கிடையே அரசு நிர்வாகத்தை சீர் படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்து வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த வகையில், 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். ஆனால் மாற்றங்களின் மூலம் நிர்வாகத்தை சரிசெய்ய நினைக்கும் முதல்வரின் நோக்கம் நிறைவேறுமா என்கிற கேள்வி கோட்டையில் எதிரொலித்தபடி இருக்கிறது.

stalin

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "தி.மு.க. ஆட்சியில் சி.எம். டி.ஏ.வின் உறுப்பினர் செயலர், வீட்டுவசதித்துறையின் முதன்மைச் செயலர் என பவர்ஃபுல்லாக இருந்தவர் கார்த்திகேயன். ஓ.பி.எஸ். சொல்வதை வேதவாக்காகக் கொண்ட அ.தி.மு.க.வின் விசுவாசி இவர். ஓ.பி. எஸ்.சின் பினாமி எனச் சொல்லப்படும் தனியார் அரசு நிறுவனமும், தி.மு.க குற்றம்சாட்டிய நிறுவனமுமான பாஷ்யம் கட்டுமான நிறுவனத்துக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தவர் கார்த்திகேயன். அப்படிப்பட்டவரை வீட்டு வசதித்துறையிலிருந்து மாற்றி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக மீண்டும் வலிமையான பதவியில் உட்கார வைத்திருக்கிறது தி.மு.க அரசு. வீட்டுவசதித் துறையைவிட பவர்ஃபுல்லான நெடுஞ்சாலைத் துறையைப் பெறுகிற அளவுக்கு கார்த்திகேயனின் லாபி வலிமையாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் புகார்களைத் தெரிவித்த தி.மு.க., ஓ.பி.எஸ்.சின் செல்லப்பிள்ளையான கார்த்திகேயனுக்கு வலிமையான துறையை ஒதுக்கியதன் பின்னணி என்ன என்ற கேள்வி கோட்டையில் எதிரொலித்தது. இதை அடுத்து அவர் உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்

கொரோனா நெருக்கடிகளுக்கிடையே அரசு நிர்வாகத்தை சீர் படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்து வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த வகையில், 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். ஆனால் மாற்றங்களின் மூலம் நிர்வாகத்தை சரிசெய்ய நினைக்கும் முதல்வரின் நோக்கம் நிறைவேறுமா என்கிற கேள்வி கோட்டையில் எதிரொலித்தபடி இருக்கிறது.

stalin

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "தி.மு.க. ஆட்சியில் சி.எம். டி.ஏ.வின் உறுப்பினர் செயலர், வீட்டுவசதித்துறையின் முதன்மைச் செயலர் என பவர்ஃபுல்லாக இருந்தவர் கார்த்திகேயன். ஓ.பி.எஸ். சொல்வதை வேதவாக்காகக் கொண்ட அ.தி.மு.க.வின் விசுவாசி இவர். ஓ.பி. எஸ்.சின் பினாமி எனச் சொல்லப்படும் தனியார் அரசு நிறுவனமும், தி.மு.க குற்றம்சாட்டிய நிறுவனமுமான பாஷ்யம் கட்டுமான நிறுவனத்துக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தவர் கார்த்திகேயன். அப்படிப்பட்டவரை வீட்டு வசதித்துறையிலிருந்து மாற்றி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக மீண்டும் வலிமையான பதவியில் உட்கார வைத்திருக்கிறது தி.மு.க அரசு. வீட்டுவசதித் துறையைவிட பவர்ஃபுல்லான நெடுஞ்சாலைத் துறையைப் பெறுகிற அளவுக்கு கார்த்திகேயனின் லாபி வலிமையாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் புகார்களைத் தெரிவித்த தி.மு.க., ஓ.பி.எஸ்.சின் செல்லப்பிள்ளையான கார்த்திகேயனுக்கு வலிமையான துறையை ஒதுக்கியதன் பின்னணி என்ன என்ற கேள்வி கோட்டையில் எதிரொலித்தது. இதை அடுத்து அவர் உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார்.

g

அதேபோல, உயர்கல்வித் துறையின் முதன்மைச்செயலாளராக இருந்த அபூர்வாவுக்கு எதிராக ஏகப்பட்ட புகார்கள் உண்டு. துணை வேந்தர்கள் உட்பட கல்லூரி முதல்வர்கள் வரை யாரையும் மதித்ததே இல்லை. சமீபத்தில் நீட் தேர்வு குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்து சர்ச்சையாகி, அரசு தெளிவான விளக்கம் அளித்தது. அந்தக் குழப்பத்துக்கு காரணமும் அபூர்வாதான். அவர் தற்போது கைத்தறி மட்டும் துணி நூல் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பார்ப்பதற்கு டம்மி மாதிரி தெரியும். ஆனால் இலவச வேட்டி-சேலை, பள்ளிச் சீருடைகளுக்கு மட்டுமே வருசத்துக்கு ரூ.1,500 கோடிக்கும் மேலே புழங்கும் வளமான துறைதான் இது.

இப்படி அ.தி.மு.க. ஆட்சியில் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாகவும், ஊழல்களுக்கு சூத்திரதாரிகளாகவும் இருந்த ஐ.ஏ.எஸ். அதி காரிகள் பலரையும் மாற்றம் என்கிற பேரில் பவர் ஃபுல் போஸ்டிங்கிலேயே மீண்டும் மீண்டும் நியமிக்கின்றனர். அதாவது, அதிகாரிகளை பழிவாங்க மாட்டோம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, நிர்வாகத்தை சுமுகமாக நடத்த நினைக்கிறது தி.மு.க. அரசு.

ge

ஆனால் சொல்லி அடித்து போஸ்டிங் வாங்கும் இந்த கில்லாடி கில்லி அதிகாரிகளின் நியமனம், கடந்த 10 ஆண்டு காலம், ’தி.மு.க. ஆதரவு ஐ.ஏ.எஸ்.கள்’ என அ.தி.மு.க. அரசால் பழிவாங்கப் பட்ட தி.மு.க. அதிகாரிகளை அதிருப்தியடைய வைத்திருக்கிறது''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் நாம் விசாரித்த போது, "உண்மையாகவே மாற்றப் பட வேண்டிய அதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழக அரசின் தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக 2018, மார்ச்சில் நியமிக்கப்பட்டார் விவேகானந்தன் ஐ.ஏ.எஸ். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இவரை மட்டும் யாராலும் அசைக்க முடியவில்லை. தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அ.தி.மு.க. வின் மா.செ.என பெயரெடுத்த அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசி.

ge

கடந்த காலங்களில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இவரை சந்திக்க வந்தபோது, அவர்களை சந்திக்காமல் பலமணி நேரம் காத்திருக்க வைப்பார். பொறுமையிழந்து அவர்கள் கிளம்பிவிடவேண்டும் என்பதுதான் விவேகானந்தன் டெக்னிக். கமிஷன் தரும் காண்ட்ராக்டர்கள் மற்றும் அவர்களின் புரோக்கர்களுக்கு மட்டுமே விவேகானந்தனின் தரிசனம் கிடைக்கும். அவர்களிடம் தான் விவாதிப்பார். இதனால், ஆண்டுக் கணக்கில் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனையொட்டி, 300-க்கும் மேற்பட்ட வழக்கு களை சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்த துறை.

மாற்றப்பட வேண்டிய இப்படிப் பட்ட அதிகாரிகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் ஆட்சி மேலிடம் கவனம் செலுத்தவில்லை. இதனால், அதிகாரிகளின் மாற்றம் முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா? யாருடைய ஆலோசனையில் இந்த மாற்றங்கள் நடக்கிறது? என லன்ச் டேபிளில் சீனியர்கள் ரகசியமாக விவாதிப்பது கோட்டையில் அதிகரித் துள்ளது''‘என்கிறார்கள் உளவுத்துறையினர்.

அதிகாரிகளின் மாற்றத்தில் இப்படிப் பட்ட அதிருப்திகள் வெடிப்பதால் இதன் பின்னணியில் யாருடைய தலையீடாவது இருக்கிறதா? என சீனியர் ஐ.ஏ.எஸ்.களிடம் நாம் விசாரித்தபோது, "தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கும், முதல்வரின் செயலா ளர்களுக்கும் தெரியாமலே அதிகாரிகளின் ட்ரான்ஸ்ஃபர்கள் நடக்கிறது. மாற்றம் குறித்து இறையன்புவிடம் பல சமயங்களில் விவாதிக்கப் படுவதில்லை. முதல்வர் தரப்பிலிருந்து தரப்படும் பட்டியலில் கையெழுத்து மட்டுமே போடுகிறார் இறையன்பு.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி மற்றும் அவரது சிஷ்யர்களான தொழில்துறை செக்ரட்டரி முருகானந்தம், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரெசிடென்சியல் கமிஷனராக இருந்த ஹித்தேஷ்குமார் மக்வானா ஆகியோரின் ஆலோசனையில்தான் அதிகாரிகளின் மாற்றம் தூள் பறக்கிறது.

ge

மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனிடம் பி.எஸ்.ஓ.வாக முருகானந்தமும், மக்வானும் இருந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அசோக்வர்தன் ஷெட்டி, வி.ஆர்.எஸ்.சில் பணி விலக நிர்பந்திக்கப்பட்டார். வி.ஆர்.எஸ்.சில் விலகிய ஷெட்டிக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றுத் தந்தவர்கள் முருகானந்தமும் மக்வானாவும்தான்.

ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கும் அசோக்வர்தன் ஷெட்டி, முருகானந்தத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என யோசனை தந்துள்ளார்.

அந்த வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நடந்த ஒரு மீட்டிங்கின்போது, முருகானந்ததுக்கு முதல்வர் தந்த முக்கியத்துவத்தை அதிகாரிகள் உற்று நோக்கினார்கள். 21 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றப்பட்டபோது, மத்திய அரசு பணியிலிருந்த மக் வானை தமிழகத்துக்கு கொண்டு வந்து வீட்டுவசதித்துறை செயலாளராக பவர் ஃபுல்லாக உட்கார வைத்துவிட்டார் முருகானந்தம்.

அதேபோல, தனது மனைவியான சுப்ரியா சாகுவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செக்ரட்டரியாகவும், தனக்கு வேண்டப்பட்ட வர்களான ஷம்புகல்லோலிகரை சமூக நலத்துறை செயலாளராகவும், காக்கர்ல் உஷாவை பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராகவும், சமயமூர்த்தியை வேளாண்துறை செக்ரட்டரியாகவும் கொண்டுவந்துவிட்டார் முருகானந்தம்.

மத்திய அரசு பணியில் உள்ள சிவதாஸ் மீனாவை மாநில அரசுப் பணிக்கு கொண்டுவரவிருப்பது பற்றி நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம். அவர், மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கபட்டுள்ளார்.

ஒவ்வொரு அதிகாரியின் மாற்றத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. இந்த மாற்றத்தில் வட இந்திய அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதுடன் குறிப்பிட்ட சாதியும் சம்மந்தப்பட்டிருக்கிறது.

ஏனெனில், முக்கியத்துறைகளில் நியமிக்கப்பட்டிருக்கும் பல அதிகாரிகள், அவர்கள் வகித்த முந்தைய துறைகளில் எதையும் சாதித்தவர்களாக இல்லை. ஆற்றல் மிகுந்த தமிழர்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளனர்'' என்று கொந்த ளிக்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ்.கள்.

அதிகாரிகளின் இடமாற்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தகுதி மற்றும் திறமைகளை முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கவனித்து, நியமனங்களை மேற்கொள்ளாவிட்டால், வெளிப்படையான -நேர்மையான ஆட்சி என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், அடுத்த 6 மாதத்தில் இந்த அதிகாரிகளால் ஊழல்கள் மலிந்துவிடும் என்பதே ஐ.ஏ.எஸ். தரப்பு மற்றும் உளவுத்துறையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

nkn290521
இதையும் படியுங்கள்
Subscribe