Advertisment

சினிமாவாகும் தேவர் வரலாறு! இளையராஜா கேட்ட கேள்வி!

devar

மது தேசத்தலைவர்களில் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், காமராஜர், பாரதி உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறு முழுநீள சினிமாவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

devar

1982-ல் வெளியான "காந்தி'’திரைப்படத்தை உருவாக்கிய பெருமை ஹாலிவுட் கலைஞர்களையே சேரும். பல ஆஸ்கார் விருதுகளைக் குவித்த "காந்தி'’சினிமா போல், இதுவரை எந்த தலைவரின் வாழ்க்கையும் படமாக்கப்படவில்லை. அவ்வளவு நேர்த்தியாக உருவான "காந்தி'யின் டைரக்டர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் கடின உழைப்பும் காந்தியாகவே வாழ்ந்த ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லியின் அசாத்திய நடிப்பும் ஒட்டு மொத்த இந்தியர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Advertisment

இந்தியா முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே அப்படம் ரிலீசானபோது, ஒட்டுமொத்த இந்தியர்

மது தேசத்தலைவர்களில் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், காமராஜர், பாரதி உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறு முழுநீள சினிமாவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

devar

1982-ல் வெளியான "காந்தி'’திரைப்படத்தை உருவாக்கிய பெருமை ஹாலிவுட் கலைஞர்களையே சேரும். பல ஆஸ்கார் விருதுகளைக் குவித்த "காந்தி'’சினிமா போல், இதுவரை எந்த தலைவரின் வாழ்க்கையும் படமாக்கப்படவில்லை. அவ்வளவு நேர்த்தியாக உருவான "காந்தி'யின் டைரக்டர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் கடின உழைப்பும் காந்தியாகவே வாழ்ந்த ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லியின் அசாத்திய நடிப்பும் ஒட்டு மொத்த இந்தியர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Advertisment

இந்தியா முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே அப்படம் ரிலீசானபோது, ஒட்டுமொத்த இந்தியர்களும் அப்படத்தைக் கொண்டாடினார்கள். பின்னர் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

"காந்தி'’சினிமாவுக்கு ஈடாக இல்லையென்றாலும் அதில் பாதியளவாவது ஜெயிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி யிருக்கிறார்... தமிழ் சினிமாவின் டிரெண்ட்செட்டர், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைய அச்சாரம் போட்ட "ஊமை விழிகள்'’டைரக்டர் அரவிந்தராஜ்.

"தேசிய தலைவர்'’என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறை பதிவு செய்யும் அந்த சினிமாவில் தேவராக நடிக்கப்போவது ஜெ.எம்.பஷீர் என்கிற விஜய்கார்த்திக். படத்தை தயாரிப்பவர் மதுரையைச் சேர்ந்த ஏ.எம்.சௌத்ரி. படத்திற்கு பலம் சேர்ப்பது இசைஞானி இளையராஜா.

"தேவர்' வேடத்தில் நடிப்பது குறித்தும் இளையராஜா இசை அமைக்க ஒத்துக் கொண்டது குறித்தும் ஜெ.எம்.பஷீர் நம்மிடம் மனம் திறந்து பேசினார். ""48 நாட்கள் விரதமிருந்துதான் ஐயா தேவராக மேக்-அப் போட்டேன். இந்தக் கதையை அரவிந்தராஜ் டைரக்ட் பண்ணினால்தான் சரியாக இருக்கும் என்ற முடிவுடன் அவரைச் சந்தித்து, தேவர் கெட்டப்பில் உள்ள எனது போட்டோவைக் காட்டியதும் ஒத்துக்கொண்டார். மற்ற டெக்னீஷியன்களையும் முடிவு செய்துவிட்டு, இசைஞானிதான் இசையமைக்க வேண்டும் என்ற முடிவுடன், அவரைச் சந்திக்கும் முயற்சிகளில் இறங்கினோம். கொரோனா காலம் என்பதால் யாரையும் சந்திக்காத அவர், எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்.

சந்திக்க வந்த காரணத்தைச் சொன்னதும், ""ஐயா படத்துக்கு தாராளமா பண்றேன்யா. ஆமா தேவரா நடிக்கப் போற ஹீரோ யாரு''ன்னு கேட்டதும்... என்னோட மேக்-அப் ஸ்டில்ஸை காட்டினேன். அதப் பார்த்துட்டு, "யோவ்... அச்சு அசலா ஐயா மாதிரியே இருக்கய்யா'’என பாராட்டிவிட்டு, "எல்லா உண்மைகளையும் பதிவு பண்ணுவீகள்ல'ன்னு கேட்டாரு. இதற்கு மேல் டைரக்டர் பேசுவது தான் சரியாக இருக்கும்'' எனச் சொல்லி, டைரக்டர் அரவிந்தராஜை நம்மிடம் பேச வைத்தார்.

devar

""இசைஞானியுடன் எனக்கு இதுதான் முதல் படம். ஸ்கிரிப்ட் புக்கை கொடுத்துட்டு, "நீங்க இசையமைக்க சம்மதிச்சாலே இந்தப் படத்தோட வெற்றி 60% உறுதி'ன்னு சொல்லிட்டு அரைமணி நேரம் பேசினேன். "முதுகுளத்தூர் கோர்ட் சம்பவம், இமானுவேல் சேகரன் கேரக்டர் இதையெல்லாம் படத்துல சொல்லுவீங்கள்ல' என என்னிடமும் கேட்ட போது, ""கண்டிப்பாங்கய்யா...''’என உறுதியளித்தேன். மற்ற தலைவர்களின் கேரக்டரில் நடிக்கப்போறவர்களை விசாரித்துவிட்டு, ""பிரமாதமா மியூசிக் பண்ணித் தர்றேன். என்னுடைய சினிமா கேரியரில் இது ரொம்ப முக்கியமான படம்''’எனச் சொல்லி எங்களை மகிழ்ச்சியாக வழியனுப்பினார் இசைஞானி அண்ணன் இளையராஜா என சந்திப்பை உணர்ச்சிப்பூர்வமாக சொன்னவர், படம் குறித்து மேலும் சில தகவல்களை மனம் திறந்து பேசினார்.

devar

""இது ரொம்பவும் காம்ப்ளிகேட்டான கதை என்பதால் சமூக பொறுப்புடனும் யாருடைய உணர்ச்சியையும் தூண்டிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்கிறோம். படத்தில் காந்தி, நேரு, காமராஜர், பெரியார், ராஜாஜி, பக்தவத்சலம், ம.பொ.சி. கேரக்டர்களில் நடிக்க இரண்டாயிரம் பேருக்கு இண்டர்வியூ வைத்து செலக்ட்பண்ணி, அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்துள்ளோம்''’என்றார் நம்பிக்கையுடன்.

-பரமு

nkn281020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe