வடசென்னைக்கு இலக்கண முகம், இலக்கிய முகம், இசை முகம், நாடக முகம், வீர தீர முகம், போராட்ட முகம், விளையாட்டு முகம், அரசியல் எழுச்சி முகம், சமய முகம், பகுத்தறிவு முகம் என பல்வேறு முகங்கள் உண்டு. ஊடகங்களில் பொது வெளிகளில் இத்தனை முகங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை. அடிதடி கேங்ஸ்டர் முகங்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
வடசென்னை பற்றிய திரைப்படங்களின் வரிசை 1982-ல் பீ.லெனின் இயக்கிய "எத்தனை கோணம் எத்தனை பார்வை' படத்தின் "சார்பட்டா பரம்பரை' கதாபாத்திரத்தின் வழியாக தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாக் அவுட் (1992, பீ.லெனின்), மெட்ராஸ் (2014, பா.ரஞ்சித்), பூலோகம் (2015, கல்யாணகிருஷ்ணன்), இறுதிச் சுற்று (2016, சுதா கொங்கரா) வடசென்னை (2018, வெற்றிமாறன்) என திரைப்படங்கள் உருவாக்கப் பட்டு வந்திருக்கின்றன; பாராட்டப்பட்டுள்ளன.
வடசென்னையின் பிரபலமான குத்துச்சண்டை கோதா, "நாக்அவுட்', "இறுதிச் சுற்று', "பூலோகம்' படங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வந்தன.
1982-ல் ஜெயகாந்தனின் இரண்டு சிறுகதைகளை இணைத்து பீ.லெனின் இயக்கிய "எத்தனை கோணம் எத்தனை பார்வை' திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை வாத்தியா ராக தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார். சார்பட்டா பரம்பரை வீரனாக தியாக ராஜன் நடித்திருப்பார்.
எழுத்தாளர் த.ஜெயகாந்தன் 1981-ல் எழுதிய குறுநாவல் "கரு', பாக்ஸிங் வீரனைப் பற்றியது. நாவலின் நாயகன் கன்ஷாட் கந்தசாமி, வட சென்னையின் சதுர்சூர்ய சார்பட
வடசென்னைக்கு இலக்கண முகம், இலக்கிய முகம், இசை முகம், நாடக முகம், வீர தீர முகம், போராட்ட முகம், விளையாட்டு முகம், அரசியல் எழுச்சி முகம், சமய முகம், பகுத்தறிவு முகம் என பல்வேறு முகங்கள் உண்டு. ஊடகங்களில் பொது வெளிகளில் இத்தனை முகங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை. அடிதடி கேங்ஸ்டர் முகங்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
வடசென்னை பற்றிய திரைப்படங்களின் வரிசை 1982-ல் பீ.லெனின் இயக்கிய "எத்தனை கோணம் எத்தனை பார்வை' படத்தின் "சார்பட்டா பரம்பரை' கதாபாத்திரத்தின் வழியாக தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாக் அவுட் (1992, பீ.லெனின்), மெட்ராஸ் (2014, பா.ரஞ்சித்), பூலோகம் (2015, கல்யாணகிருஷ்ணன்), இறுதிச் சுற்று (2016, சுதா கொங்கரா) வடசென்னை (2018, வெற்றிமாறன்) என திரைப்படங்கள் உருவாக்கப் பட்டு வந்திருக்கின்றன; பாராட்டப்பட்டுள்ளன.
வடசென்னையின் பிரபலமான குத்துச்சண்டை கோதா, "நாக்அவுட்', "இறுதிச் சுற்று', "பூலோகம்' படங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வந்தன.
1982-ல் ஜெயகாந்தனின் இரண்டு சிறுகதைகளை இணைத்து பீ.லெனின் இயக்கிய "எத்தனை கோணம் எத்தனை பார்வை' திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை வாத்தியா ராக தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார். சார்பட்டா பரம்பரை வீரனாக தியாக ராஜன் நடித்திருப்பார்.
எழுத்தாளர் த.ஜெயகாந்தன் 1981-ல் எழுதிய குறுநாவல் "கரு', பாக்ஸிங் வீரனைப் பற்றியது. நாவலின் நாயகன் கன்ஷாட் கந்தசாமி, வட சென்னையின் சதுர்சூர்ய சார்பட்டா பரம்பரை யின் வாத்தியார் சூளை வடிவேல் நாயக்கரின் சீடன். "கரு' நாவலின் பாத்திர அமைப்புகளை, அவைகளின் உணர்வுகளை, அவைகள் பேசும் வசனங்களை, சூழல் சார்ந்த சித்தரிப்புகளை அரசியல் பார்வை போன்ற வைகளை அப்படியே தூக்கி "சார்பட்டா'வில் பயன்படுத்தியுள்ளனர்.
"எத்தனை கோணம் எத்தனை பார்வை', "பூலோகம்' படங்கள் குத்துச்சண்டை பரம்பரை பற்றி அடையாளப்பூர்வமாக தொடக்கத்தில் பேசிய திரைப்படங்கள்.
பா.இரஞ்சித் இயக்கி இருக்கிற "சார்பட்டா பரம்பரை' படம், குத்துச்சண்டையில் ஈடுபட்ட சார்பட்டா பரம்பரையின் 1975-1980 காலப் பரப்பின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு குறிப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அவ்வாறே எதிர் ஜதை ஆட்டக்காரர்களான, இடியப்ப பரம்பரை கதையும் சொல்லப்படுகிறது. பரம்பரை என்பது சாதி ரீதியா னது அல்ல. குத்துச்சண்டை கற்றுத்தரும் குரு-சீடர் மரபில் வருகின்றது. இந்த பரம்பரையில் அனைத்துச் சாதி இளைஞர்கள் இருந்தனர். இசுலாமியர், கிருத்துவர், ஆங்கிலோ இந்தியர்கள் இருந்தனர்.
வடசென்னை நிலத்தில் இருந்த தமிழ் குத்துச் சண்டை, அமெரிக்கா, இங்கிலாந்து குத்துச்சண்டை பாதிப்பில் ஆக்ரோசமான ஆங்கில குத்துச்சண்டை யாக, கைகளில் கட்டப்பட்டிருந்த வெள்ளைத்துணிக் குப் பதிலாக க்ளவுஸ் என்பதாகவும் மாறி களத்திற்கு வந்தன.
வடசென்னையின் உழைப்பாளி இளைஞர் களுக்கு குத்துச்சண்டையைக் கற்றுக் கொடுத்த குரு -சீட பயிற்றுவிப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டு சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம் பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, சுண்ணாம்பு குளம் பரம்பரை என பிரிகின்றது.
காலப்போக் கில் சார்பட்டா எதிர் இடியப்ப பரம்பரை மட்டுமே, எஞ்சி கோதாவில் 1986 வரை ஈடுபட்டன. பாக்ஸிங்கில் வன்முறை அரசியல் செயல்பாடுகள் நுழையவே, அதோடு டிக்கெட், வசூல், போட்டி ரீதியிலான குத்துச் சண்டை ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கொடையாளர்களின் கவனம் தொலைக்காட்சி சேனல் வருகைக்குப் பின்பு கிரிக்கெட் விளையாட்டுகள் , வேறு வேறு நிகழ்விற்கு ஸ்பான்சர்களாக இருந்து தொலைக்காட்சிகள் வழியாக விரிவான நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதில் கவனம்போனதும், பாக்சிங் விளையாட்டு நின்று போவதற்கான முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
வட சென்னையின் சூளை, புளியந் தோப்பு, வியாசர்பாடி, அயனாவரம், ராய புரம், துறைமுகம் லேன், ரேவ், பனைமரத் தொட்டி, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, யானைக்கவுனி, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் குத்துச்சண்டை வீரர்களும் பயிற்சி மையங்களும் இயங்கி வந்தன.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.கே.கபாலி முன்னெடுப்பில் பாக்சிங் நடைபெறும் இடங்களில் ஒன்றாக தென்சென்னை மயிலாப்பூர் மந்தைவெளி இருந்தது. வடசென்னையில் பாக்சிங் உழைப்பாளர் மக்கள் மத்தியில் செல்வாக் கோடு இருந்தது. பரவலான பகுதிகளில் பாக்சிங் பயிற்சிக்கூடங்களும் பாக்சிங், க்ளப்புகளும் இருந்தன. ராயபுரம், காசிமேடு பகுதிகளில் இருந்தது மட்டுமே சார்பட்டா பரம்பரை என்று புவியியல் அடையாள உரிமை கோர இயலாது. துறைமுகம் லேன், சூளை, யானைகவுனி, சாணிகுளம், எண்ணூர் இங்கெல்லாம் சார்பட்டா பரம்பரை வீரர்கள் இருந்தனர். பயிற்சிகளும் நடைபெற்றன. நாற்பதாண்டுகளுக்கு முன்புவரை ஓகோவென ஆடப்பட்டு வந்த வடசென்னையின் குத்துச்சண்டைக் களங்களை, நிலங்களை, மனிதர்களை அவர்கள் பேசிய வட்டாரமொழியை, அவர்களிடம் கிளைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசியலை இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை அடக்குமுறை அரசியலை, அதனை தமிழ்நாட்டில் வழிமொழிந்த, புதிதாக உருவாகியிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உள்ளூர் பேட்டை அரசியலை படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் ரிங் மேடைக்கு அரசியல் அடையாளங் களோடு வீரர்கள் வருவதுபோல, நிசத்தில் அவ்வாறு வீரர்கள் தங்களின் அரசியல் சார்பை பகிரங்கப்படுத்திக் கொண்டது கிடையாது. போட்டியை கான்ட்ராக்ட் எடுத்து நடத்தும் நபர்களின் அரசியல் ஆர்வம் மற்றும் மாநகராட்சியின் அனுமதி பெறுதலை எளிதாக்க பேட்டை சார்ந்த அரசியல்வாதிகளை தலைமை தாங்க வாழ்த்திப் பேச அழைப்பது உண்டு.
நாக்அவுட் கிங் ஆறுமுகம், புலவர் பா.வீரமணி போன்ற மீனவ மக்கள்சார் அறிஞர்கள் வீரர்களிடம் தகவல்களை திரட்டிக்கொண்டு, தனது அரசியல் நாயகன் கபிலனை லைம்லைட்டில் நிறுத்துவதற்காக நிஜத்தில் குத்துச்சண்டை நாயகர்களாக இருந்த திராவிட வீரன் கித்தேரிமுத்து, டாமிகன் சுந்தர்ராஜன், டேன்சிங் ஏழுமலை, ஆறுமுகம் போன்றோரின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களை, நாயக பிம்பத்தைச் சுற்றி ரஞ்சித் கட்டமைத்திருக்கிறார்.
தி.மு.க. அரசியலில் ஆர்வம் காட்டியவர்கள் கித்தேரி முத்து, டாமிகன் சுந்தர்ராஜன், திருவொற்றியூர் டி.டி.மாசி போன்றோர் இருந்தாலும் பாக்சிங்கில் இவர்கள் அரசியலை இணைக்கவில்லை என்கிறார் புலவர் பா.வீரமணி. ‘திராவிட வீரன்’ வியாசர்பாடி ரங்கன் என திரைப்படத்தில் போர்டு வைத்துக் காட்டப்படுகிற பாத்திரம் நிஜத்தில் திராவிட வீரன் காசிமேடு கித்தேரி முத்துவின் நேரடி பாதிப்பாகும்.
"சார்பட்டா பரம்பரை வரலாறு சார்ந்த படம்' என அறிவிக்கப்படாவிட்டாலும் இத்தகைய காட்சிகள், பாத்திரங்கள், களங்கள் வரலாற்றுக் காலத்தடத்தை அடையாளம் காட்டுவதால் வரலாற்றுப் பிழைகள் நம் கண்ணில் தட்டுப்படுகின்றன.
வேறுபல காட்சிகளிலும் நம் கண்ணுக்கு சில தவறுகள் திரைப்படத்தில் தெரிகின்றன.
"வானம் விடிஞ்சிடுச்சு காட்டுடா மோளத்தை' பாடல் காட்சியில், ரேவ் குடியிருப்பில் "இந்திய குடியரசு கட்சியின் மன்றம்' என காட்டப்படும் இடத்தில் கபிலன் பாக்சிங் கற்றுக் கொடுப்பதாக காட்சி ஒன்று வரும்.
துறைமுக ரேவ் தொழிலாளர்களின் வேலை உத்தரவாதத்திற்கு அவர்களின் வாழ்வை பாதுகாப்பதற்கு மெட்ராஸ் துறைமுகத் தில் சி.ஐ.டி.யூ. இருந்தது. அதன் தலைவ ராக வி.பி.சிந்தன் என்ற போராளி இருந்தார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அவசரநிலையை எதிர்த்துப் போராடி யது. துறைமுக தொழிலாளர்கள் மத்தியில் புகழோடு இருந்த இடதுசாரி களின் பங்கையும் சொல்லியிருந்தால் வரலாற்றுப் பார்வை சமன்பட்டிருக்கும்.