சுதந்திரப் போராட்ட தலைவர்கள், வீரர்கள் தங்களை தாங்கள் சார்ந்த சமூகத்தின் அடையாளமாக அவர்கள் அப்போது காட்டிக் கொண்டதில்லை. ஆனால் பிற்பகுதியில் அவர்கள் தங்கள் சமூகத்தின் வீரத்தின் அடையாளமாக அச்சமூக அமைப்புகள் அறிவிப்பு செய்து அவர்களின் நினைவு மற்றும் பிறந்த நாளை கொண்டாடி போற்றுகின்றன. அப்படித்தான் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொங்கு மண்டலத்தில் பெயர் பெற்றவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேய படைகளை எதிர்த்து மூன்று போர் புரிந்ததாகவும் அதில் இரண்டில் வெற்றி பெற்று மூன்றாவது போரில் ஆங்கிலேய படைகளால் கைது செய்யப்பட்டு சங்ககிரி மலைக்கோட்டையில் வைத்து தீரன் சின்னமலை ஆடி-18 அன்று தூக்கிலிடப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளது.

oo

தீரன் சின்னமலை பிறந்த சமூகம் கொங்கு வேளாள கவுண்டர் சமூகம் என்பதால் கடந்த பல ஆண்டுகளாக அச்சமூக அமைப்புகள் தீரன் சின்னமலைக்கு சிறப்பு செய்து கொண்டாடி வருகின்றன. சின்னமலை பிறந்த ஓடாநிலை கிராமத்தில் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டி தி.மு.க. ஆட்சியில் அரசு விழாவாக அறிவிக்கப் பட்டு அவரது நினைவு மற்றும் பிறந்த நாட் களில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அச்சமூகத்தை சார்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அந்நாட்களில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இந்த சின்னமலையுடன் அவரது படையில் பயணித்து வந்தவர்தான் பொல்லான் என்பவர். இவரை சின்னமலைக்கு தூக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பே ஆடி 1-ந் தேதி அரச்சலூர் அருகே உள்ள நல்ல மங்காபாளையம் என்ற அவரது கிராமத்தில் வைத்து சுட்டுக் கொன்றது ஆங்கிலேய படை. அப்படி உயிர்த் தியாகம் செய்த இந்த வீரர் பொல்லானுக்கு எந்த சிறப்பும் செய்யவில்லை. பொல்லான் பிறந்த சமூகம் பட்டியல் இனப் பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகம். நீண்ட நெடுங்காலத் திற்குப் பிறகு பொல்லான் இந்த வருடத்திலிருந்து அரசு சார் பில் போற்றப்பட தொடங்கியுள் ளார். இதற்காக தொடர் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளது அருந்ததி யினர் இளைஞர் பேரவை மற் றும் பொல்லான் வரலாறு மீட் புக் குழு ஆகிய அமைப்பினர்.

Advertisment

dd

இதன் ஒருங்கிணைப் பாளரான வடிவேல் நம்மிடம் ""பொல்லான், தீரன் சின்ன மலையின் போர்ப் படை தளபதியாக இருந்தவர். ஆங்கி லேய ஆட்சி நிர்வாகத்தில் சின்னமலையின் ஒற்றராக ஊடுருவி ஆங்கில படையின் போர்த் தொடுப்பை தெரிந்து சின்னமலைக்கு ரகசிய தகவல் அனுப்பியவர். சின்னமலை யின் ஆள்தான் பொல்லான் என்பதை தெரிந்து தான் பொல் லானை ஆங்கிலப் படை சுட்டுக் கொன்றது. வர லாற்று ஆதாரங் களை எடுத்த நாங்கள் கடந்த ஆறேழு வருடங் களாக பொல்லா னுக்கு அரசு சிறப்பு சேர்க்க வேண்டும். எப்படி தீரன் சின்ன மலை கொண்டாடப்படு கிறாரோ அதுபோல் பொல் லானும் கொண்டாடப்பட வேண்டும் என்று முதல்வர் முதல் அனைத்து துறை அதிகாரிகள் அமைச்சர்கள் வரை எல்லோருக்கும் மனு கொடுத்தோம் ஆர்ப்பாட்டம், தர்ணா, கவன ஈர்ப்பு என பல போராட்டங்களும் நடத்தி னோம்

பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடி-1 அன்று அவரது கிராமத்தில் அவர் படத்தை வைத்து எங்கள் சமூக மக்கள் மரியாதை செய்து வந்தோம் ஆனால் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று போலீசும் அரசு அதிகாரி களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அப்போது வேறு வழியில்லாமல் இந்த அரசு "பொல்லான், தீரன் சின்னமலையின் படைப் பிரிவில் இருந்தவர் தான் அவரது நினைவு நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. நீதிமன்றம் அதையே உத்தரவாக வெளியிட்டது.

Advertisment

இதன்மூலம் எங்கள் சமூகம் வெற்றி பெற் றுள்ளது. இந்த வருடம் மொடக் குறிச்சி யூனியன் அலுவலகத்தில் சென்ற ஆடி-1 (ஜூலை 17) பொல்லான் படம் வைத்து அரக அதி காரிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். பொல் லானுக்கு அவரது கிரா மத்தில் சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும். சாதி பாகுபாடு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு இதை செய்யும் என நம்புகிறோம்'' என்றார்.

- ஜீவாதங்கவேல்