அயோத்தியாக மாற்ற இந்துத்துவா முயற்சி - கலவர பயத்தில் மதுரை மக்கள்!

ss

ந்தர் மலையைத்தான் இஸ்லாமியர்கள் சிக்கந்தர் மலை என்று மாற்றப்பார்க் கிறார்கள். திருப்பரங்குன்றம் மலையைக் காக்கவேண்டும்' என இந்து முன்னணியினர் தமிழ்நாட்டின் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அறைகூவல் விடுத்தனர்.

இவ்விவகாரத்தில் இரு தரப்பும் போராட்டம் நடத்திவரும் நிலையில்... இந்து முன்னணி பெரிய அளவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆட்களைத் திரட்டிவருவதால் மதுரையில் பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுமென மதுரை மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 3, 4-ஆம் தேதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

tkundram

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிவேண்டுமென இந்து அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினர். இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தலாமென நீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்து முன்னணி, பா.ஜ.க. உட்பட இந்து அமைப்பினர் 2000-க்கும் மேற்பட்டோர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு, “"அறுபடை வீட்டின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தைக் கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக் கிறது. இந்த தி.மு.க. தலிபான் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால்தான் இந்துக்கள் தமிழ்நாட்டில் வாழமுடியும். காவல்துறை நிர்வாகம், அண்ணா சிலைக்கு மாலைபோட அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாக செல்ல அனுமதிவழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழக காவல் துறை செயல்படுகிறது. 144 தடை உத்தரவு இருக்கும் போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாகச் சென்று மாலை போடலாம். இந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதா? இந்த அரசை தூக்கியெறிந்தால் மட்டும்தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும். ஆகவே தமிழக மக்கள் 2026-ல் இதற்கு சரியான பதிலளிப்பார்கள். இந்த அரசுக்கு எதிராக இந்துக்கள் தொடர்ந்து போராடுவார்கள். சிக்கந்தர் என்ற நபர் திருப்பரங்குன்றம் மலைக்கு எதற்குச் சென்றார்? அங்கு குடியிருப்பு கிடையாது. கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் முருகன் கோவிலை இடிக்கச்செல்லும்போது சிக்கந்தர் தாக்கப்பட்டார் என்று சொல்கிறார்கள். சிக்கந்தர் சமாதி திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது என்பது பொய்.

ந்தர் மலையைத்தான் இஸ்லாமியர்கள் சிக்கந்தர் மலை என்று மாற்றப்பார்க் கிறார்கள். திருப்பரங்குன்றம் மலையைக் காக்கவேண்டும்' என இந்து முன்னணியினர் தமிழ்நாட்டின் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அறைகூவல் விடுத்தனர்.

இவ்விவகாரத்தில் இரு தரப்பும் போராட்டம் நடத்திவரும் நிலையில்... இந்து முன்னணி பெரிய அளவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆட்களைத் திரட்டிவருவதால் மதுரையில் பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுமென மதுரை மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 3, 4-ஆம் தேதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

tkundram

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிவேண்டுமென இந்து அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினர். இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தலாமென நீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்து முன்னணி, பா.ஜ.க. உட்பட இந்து அமைப்பினர் 2000-க்கும் மேற்பட்டோர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு, “"அறுபடை வீட்டின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தைக் கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக் கிறது. இந்த தி.மு.க. தலிபான் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால்தான் இந்துக்கள் தமிழ்நாட்டில் வாழமுடியும். காவல்துறை நிர்வாகம், அண்ணா சிலைக்கு மாலைபோட அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாக செல்ல அனுமதிவழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழக காவல் துறை செயல்படுகிறது. 144 தடை உத்தரவு இருக்கும் போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாகச் சென்று மாலை போடலாம். இந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதா? இந்த அரசை தூக்கியெறிந்தால் மட்டும்தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும். ஆகவே தமிழக மக்கள் 2026-ல் இதற்கு சரியான பதிலளிப்பார்கள். இந்த அரசுக்கு எதிராக இந்துக்கள் தொடர்ந்து போராடுவார்கள். சிக்கந்தர் என்ற நபர் திருப்பரங்குன்றம் மலைக்கு எதற்குச் சென்றார்? அங்கு குடியிருப்பு கிடையாது. கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் முருகன் கோவிலை இடிக்கச்செல்லும்போது சிக்கந்தர் தாக்கப்பட்டார் என்று சொல்கிறார்கள். சிக்கந்தர் சமாதி திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது என்பது பொய். 1931 லண்டன் பிரைவி கமிஷன் தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் முருகன் இந்து மக்களுக்குச் சொந்தம், அதை யாரும் பங்குபோட அனுமதிக்கமாட்டோம்.

இஸ்லாமியர்கள் இந்துக்களோடு சகோதரத் துவத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு ஒரேவழி, அயோத்தியில் எப்படி ராமஜென்ம பூமியிலிருந்த மசூதி வேறு இடத்தில் அமைக்கப்பட்டதோ, அதே போல திருப்பரங்குன்றம் மலைமீது இருக்கும் தர்கா வை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மலையை மீட்கும்வரை போராட்டம் தொடரும்''’என்றார்.

tkundram

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியிருக்கும் அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். "என் பெயர் சுப்பிரமணி. நான் திருப்பரங்குன்ற மலை அடிவாரத்தில் வசிக்கிறேன். மலையில் இருக்கும் காசிவிஸ்வநாத கோயிலுக்கும் போவோம். அதனருகில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கும் போவோம். அங்கு நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கலந்துகொள்வோம். கந்தூரி சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன். இந்த தெருவில் முஸ்லிம்களும் இந்துக் களும் மாமன் மச்சான்களாக காலம்காலமாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. இப்ப நடக்கிற போராட்டத்தில் உள்ளூர் மக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வெளியூரிலிருந்து வந்த கட்சி ஆட்களும், பா.ஜ.க. காரர்களும்தான் போராட்டம் செய்கிறார்கள். எங்கள் வீட்டில் ஆண் குழந்தை இல்லை என்பதால் எங்க அப்பா, முருகனுக்கு காவடி எடுப்பதாகவும் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி கொடுப்பதாகவும் நேர்ந்துக்கிட்டார் அப்படிப் பிறந்தவன்தான் நான்''’என்றார்.

மாரிமுத்து என்பவரிடம் பேசினோம். “"எனக்குத் தெரிந்து இத்தனை வருடங்களில் ஒரு நாளும் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் சண்டையே வந்ததில்லை. இந்து அமைப்புகள் வேண்டுமென்றே பிரச்சினையை ஏற்படுத்துகிறார் கள். முதலில் இந்த திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வசிக்கும் இந்து மக்கள், இவர்களிடம் போய் கோரிக்கை வைத்தார்களா? இங்கு எல்லோரும் தாயா, பிள்ளையாதான் வாழ்கிறோம். வெளியிலிருந்து ஆட்கள் பிரச்சினையை உண்டுபண்ணு கிறார்கள்... அவ்வளவுதான் சொல்வேன்''’என்று முடித்துக்கொண்டார்.

rr

முத்துமாரி என்ற பெண்ணின் கருத்தைக் கேட்டோம். "தம்பி, திருப்பரங்குன்ற மக்கள் ஒற்று மையாகத்தான் இருக்கிறோம். அந்த மலைமேல் இருக்கும் இரண்டு தெய்வமும் இங்கிருக்கும் மக்களைக் காப்பாற்றுது. இவங்க தெய்வத்தை ஒரண்ட இழுக்கிறாய்ங்க. மதுரைக்கு ஏதோ கேடுவரப் போகுதோன்னு பயமா இருக்கு''’என்றார்.

தர்கா அருகில் வசிக்கும் முத்துப்பாண்டி நம்மிடம், "நானே சிக்கந்தர் தர்காவில் ஆடுவெட்டி நேர்த்திக் கடன் செலுத்தியிருக்கிறேன். முருகனுக்கு வேலும் குத்தியிருக்கிறேன். இந்த பிரச்சனையே தேவையில்லாதது. வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள்'' என்றார்.

கோயில் வாசலிலிருந்து வெளியே வந்த இந்துத் துறவி பழனிச்சாமி, “"ஊரே ஒரே பதட்டமா இருக்கு. இந்தக் கூத்தையெல் லாம் முருகனே சரிசெய்வான் என்று வெளியே வந்துவிட் டேன் சாமி. எனக்கு எல்லா கடவுள்களும் ஒன்றுதான். சாமிகளுக்கிடையே பேதம் இல்லை. முருகனே குறிஞ்சி நிலத்தை சேர்ந்த கடவுள்தான். அது தமிழர்களின் கடவுள். இப்ப அவனை பார்ப்பனர் களின் கடவுளாக மாற்றிவிட் டார்கள். பழனியில் பண்டாரம் என்ற சமூகம்தான் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யும் பூசாரிகள். இப்ப எல்லா இடத்திலும் பார்ப்பனர்கள் புகுந்துவிட்டார்கள்''’என்றார்.

திருப்பரங்குன்ற பகுதியி லிருந்து வெளியே வந்தபோது ஆர்ப்பாட்டம் முடித்துவந்த பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் முத்துக்குமாரைப் பார்த்தோம். “"அந்த தர்காவை எடுக்கும்வரை விடமாட்டோம். கடந்த டிசம்பரில் தர்காவிற்கு கோழி நேர்த்திக்கடன் செலுத்தச் சென்ற பாய்மார்களை தடுத்து நிறுத்தினார் திருப்பரங்குன்ற காவல் ஆய்வாளர் மதுரைவீரன். அன்றிலிருந்துதான் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதனைத் தொடர்ந்து வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி தர்கா ஆய்வுக்கு வந்து, புனிதமான கோயில் பாதையில் பிரியாணி சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்துதான் நாங்கள் விவகாரத்தைக் கையிலெடுத்தோம். தர்காவுக்கு மேலுள்ள காசிவிஸ்வநாத கோயிலுக்கு 12 பன்றிக்குட்டிகளை நேர்த்திக்கடனாக விடப் போகிறேன் என்று அனுமதிகேட்டு ஆட்சியருக்கும் மாவட்டaa காவல்துறை கமிஷனருக்கும் கடிதம் கொடுத்தேன். இரு சமூகங்களுக்குமிடையே பகையை உருவாக்குகிறேன் என்று என்மேல் காவல்துறை வழக்குப் போட்டது. தர்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக இருக்கிறது. 2012-ல் அங்கே போலீசார் வெடிகுண்டு கண்டுபிடித்து எடுத்தனர் தர்காவை அங்கிருந்து அப்புறப் படுத்தும்வரை போராட்டம் ஓயாது''’என்றார்.

மதநல்லிணக்கக் குழுவின் ஒருங்கிணைப் பாளர் திலீபன் செந்திலிடம் பேசினோம்... "பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் பன்றிக்குட்டிகளை நேர்ந்துவிடப்போவதாகச் சொல்வதெல்லாம் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது போன்றதுதான். வெறுப்புணர்வை விதைத்து, இதுபோன்ற விஷமத்தனமான மோதல் போக்கால், மதக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறார்கள். 1980 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மக்களும், கிறித்துவ மக்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்துகொண்டிருந் தனர். அங்கே மதநல்லிணக்கத்தை, இந்து மக்க ளிடையே மதவெறியூட்டி சிதைத்தது ஆர்.எஸ்.எஸ். அதன் உச்சமே மண்டைக்காடு கலவரம். பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவில் கிறித்துவ இளைஞர்கள் இந்துப் பெண்களை கேலிசெய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை நடத்தியது. அதே பாணியில் மதுரையில் இந்து- முஸ்லிம்களுக் கிடையே வெறுப்புணர் வைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் பெறத் துடிக்கிறது.

சிக்கந்தர் தர்காவை பொறுத்தவரை 8-ஆம் நூற்றாண்டிலிருந்து இருக் கிறது. கடந்த 1923-ல் தேவஸ்தானத்திற்கும் தர்கா ஜமாத்தார்களுக்கு இடையே இடம் சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய நீதியரசர் இராம ஐயர், தர்கா இருக்கும் நெல்லித்தோப்பில், தர்காவும் அதனருகிலுள்ள பள்ளிவாசல் மற்றும் கொடி மரம் ஆகிய 33 செண்ட் பகுதியை விடுத்து மீதியுள்ள பகுதிகள் அனைத்தும் முருகன் கோயில் தேவஸ் தானத்திற்கு சொந்தம் என்று இறுதித் தீர்ப்பு வந்தது. இந்து முன்னணியைச் சேர்ந்த தியாகராஜன் 1990-ல் மீண்டும் வழக்கு தொடர் கிறார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, பழைய தீர்ப்பை உறுதிசெய்கிறது நீதிமன்றம். எச்.ராஜா சொல்வதுபோன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்லவில்லை. தர்கா இருக்கும் இடம் அவர்களுக்கு சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளது. அது இன்றளவும் நடை முறையில் இருக்கிறது''’என்றார். தற்போதைய பிரச்சனைக்கு முதல் காரணமே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரைவீரனின் செயல்பாடு தான். தர்காவில் வழக்கமாக செய்யப்படும் நேர்த்திக்கடனை பா.ஜ.க.வினரின் தூண்டுதலில் தடுத்து நிறுத்துகிறார்.

தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் கணேசன், தாசில்தார் கவிதா, காவல்துறை உதவி ஆணையர் சீதாராமன் ஆகியோர் வேண்டு மென்றே இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கினார்கள். இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இருந்தது. ஆட்சியர் அப்பவே இரு தரப்பையும் அழைத்துப் பேசி சமாதானத்திற்கு வந்திருக்கலாம். அவர் ஏனோ கண்டுகொள்ளவே இல்லை. மேலிருந்து பிரஷர் வந்ததும் 144 தடை போடுகிறார். எனவேதான் சமூகச் செயற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து மதநல்லிணக்க அமைதிக் குழு ஆரம்பித்து ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். மதுரையில் கலவரம் ஏற்படாத வாறு அரசு தனிக்கவனம் செலுத்தி தடுத்து நிறுத்தவேண்டும்''’என்றார்.

______________________________

அரசிற்கு எதிராக மதுரை மாநகர காவல்துறை?

ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட பல இடங்கள் இருந்தும் தான் தோன்றித்தனமாக 144ஐ அமல் படுத்தியது மதுரை மாவட்ட நிர்வாகம். 144 தடையுத்தரவினை அமல்படுத்தும் பொருட்டு மதுரை மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் வெளி மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 5 எஸ்.பி.க்கள் மற்றும் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் மூன்றடுக்கு பாதுகாப்பிற்காக காவல் பணியில் ஈடுபட்டும், சங்கிகள் தனது செய்கையை வெற்றிகரமாக செய்துள்ளனர். போலீஸின் அஜாக் கிரதையால் நிகழ்வு நடை பெற்றதால் பதைபதைப்பில் உள்ளது மதுரை மாவட்டம்.

இது குறித்துப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் பாஸ்கர் மதுரமோ, "திருப் பரங்குன்றம் அமைதியான பூமி. புதிதாக சிலர்வர... அதனை சங்கிகள் தங்களுக்கு சாதக மாக்கிக்கொண்டார் கள். இதற்கு காவல் துறையும் உடந்தை என்பதில்தான் வருத்தமே. அதிலும் உளவுப் பிரிவு போலீஸில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ.க. அதிகாரிகள் தான் இதனை இந்தளவிற்கு பூதா கரமாக்கியது. தங்களுடைய கடமையை சரிவர செய்திருந் தாலே பிரச்சினை வெடித்திருக் காது. இவர்கள் ஆட்சிக்கு எதி ராக செயல்படுகிறார்கள் என் கின்ற அச்சமும் எனக்குண்டு. முதல் சம்பவம் நடைபெற்றபொழுதே அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் மாலைவரை ஒரு மண்ட பத்தில் அடைத்து வைத்து அனுப்பி விட்டிருந்தாலே அடுத்து யாரும் வந்திருக்கமாட்டார்கள். அது எந்த அமைப்பாக இருந்தாலும் மாலை வரை மண்டப சிறை என்றிருந் தாலே எவனும் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டான். 144 போட்டிருக்கின்றார்கள். 2300 போலீஸார் பாதுகாப்பில் இருக் கின்றார்கள். அனைவருக்கும் பரிச்சயமான முகம் தெரிந்த அந்த அமைப்பு தலைவர் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லா மல் கோவிலுக்குள் வந்திருக்க முடியும்? 2011ஆம் ஆண்டு காலத்தில் தி.மு.க.வினரை தேடிப்பிடித்து வேட்டையாடிய நபர் தான் இப்பொழுது மாநகர உளவுப்பிரிவில் உதவி ஆணைய ராக இருக்கின்றார். அதுபோக அத்தகைய காலகட்டத்தில் பணிக்கு வந்தவர்கள்தான் மாநக ரம் காவல் நிலையங்களில் வியாபித்திருக்கின்றனர். ஒரே மாவட்டத்திற்குள் மட்டும் ஏறக் குறைய 10 வருடத்திற்கும் மேலாக பலர் அதிகாரிகளாக இருக்கின்ற னர். இதில் பாதிக்கு மேல் சங்கி அதிகாரிகளாகவே வெளிப்படை யாகவே காண்பித்து வருகின்ற னர். மாநகர காவல்துறையை சரிவர கண்காணித்தாலே போதும். இதுபோல் புதிது புதிகாக பிரச்சினைகள் வெடிக்காது'' என்கிறார் அவர்.

-நாகேந்திரன்

படம்: விவேக்

nkn080225
இதையும் படியுங்கள்
Subscribe