கிறிஸ்துமஸ் திருவிழாவை தமிழ்நாட்டி லுள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் கொண் டாடுவதன்மூலம் சிறுபான்மையினரான கிறிஸ்தவர் களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலோ, கிறிஸ்தவர்கள் மீதான இந்துத்வ அமைப்பினரின் தாக்குதல் அதிகரித்து வருவதால், அதை தடுக்கக்கோரி, கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியிருப்பது தேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ் தான், உத்ர காண்ட், சத்திஸ்கர், மத்தியப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் உள் ளிட்ட மாநிலங்களில், இந்துத்வ கும்பல், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

Advertisment

உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு, கிறிஸ்துமஸ் தினத்தை புறந்தள்ளிவிட்டு, அன்றைய நாளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு  "நல்லாட்சி தினம்' என்று அறி வித்து, அதை கொண்டாடுவதற்காக அன்றைய நாளில் கண்டிப்பாக அனைத்துப் பள்ளிகளும் திறந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக் கும் வருகைப்பதிவு அவசியம் எனக் கண்டிப் புடன் கூறியுள்ளது. இதன்மூலம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மறைமுகமாகத் தடை செய்வதாக கிறிஸ்தவ அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.

ராஜஸ்தானில் துங்கர்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சிவாரா கிராமத்தில், செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பிரார்த் தனைக் கூட்டத்தில் நுழைந்த இந்துத்வா கும்பல், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அங்குள்ள பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள்மீது தாக்குதல் நடத்தியது. உத்தரகாண்ட் ஹரித்துவாரி லுள்ள உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஹோட்டலில் நடக்கவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகக்கூறிய இந்துத்வ அமைப்புகளின் நெருக்கடியால் ரத்து செய்யப் பட்டது. டெல்லியில், சாண்டா க்ளாஸ் தொப்பி களை அணிந்தபடி அரட்டையடித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ இளம்பெண்களிடம், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக்கூறி வம்புக்கிழுத்த பஜ்ரங்தள் கும்பல், அப்பெண்களை அங்கிருந்து விரட்டியடித்தது.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், கிறிஸ்தவர்கள் மீதான வழக்குப்பதிவுகளும் அதிகரித்துள்ளதை எதிர்த்து கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி யிருந்த நிலையில், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்த சிலர், கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளில் சத்திஸ்கர் மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்புவிடுத்தது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் பார்வையற்ற கிறிஸ்தவ பெண்மீது, பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் அஞ்சுபார்கவி என்பவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பார்வையற்ற பெண் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டி, "பார்வையற்ற இந்த பெண், அடுத்த பிறவியிலும் பார்வையற்றவராகத் தான் பிறப்பார்' என சாபம் விடுவதுபோல் பேசிய அஞ்சுபார்கவி, அப்பெண் மீது தாக்குதல் நடத்த, அவரை போலீசார் வந்து சமாதானப்படுத்தி தடுக்கிறார்கள். 

ஏற்கனவே கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஜபல்பூரிலுள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த இந்துத்வா குண்டர்கள், அந்த தேவாலயத்தில் மதமாற்ற முயற்சிகள் நடப்பதாகக்கூறி அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டனர். அதன் தொடர்ச்சியாகத் தான் பார்வையற்ற பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒடிஷா மாநிலத்தில் பூரி நகரில், சாலையோரத்தில் கிறிஸ்துமஸ் குல்லா, முகமூடிகளை விற்பனை செய்த வியாபாரியை, அச்சாலையில் பயணித்த இந்துத்வா கும்பல், "இங்கெல்லாம் கிறிஸ்தவ பொருட்களை விற்கக்கூடாது'' என அதட்டி மிரட்டி விரட்டியடித்தது.

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் கிறிஸ்தவ போதகர் ராஜு சதாசிவத்தையும் அவரது மனைவி யையும், சத்யனிஷ்ட் ஆர்யா என்ற இந்துத்வா ரவுடி, கிறிஸ்தவ மதம் குறித்து இழிவாகப் பேசி மிரட்டிய வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைர லாகப் பரவி பலரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மரணமடைந்த கிறிஸ்தவரை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரும் கலவரமாகி, இறந்தவரின் வீட்டுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுக்க பரபரப்பாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜாபுவா மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவ பாடல்களைப் பாடுவதற்கு உள்ளூர் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து இந்தூர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்ததில், கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல், கேரளாவில் பாலக்காட்டில், வீடு, வீடாகச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் சிறுவர், சிறுமிகளின் கேரல் குழுவினர் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் தாக்குதல் நடத்திய விவ காரம் அங்கே பரபரப்பாகியுள்ளது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுங்கட்சி, சம்பந்தப் பட்ட ஆர்.எஸ்.எஸ். ரவுடிகளை கைது செய் துள்ளது. திருவனந்தபுரத்தில் அஞ்சல்துறை சார்பாக நடத்தவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். கீதத்தையும் சேர்க்க வேண்டுமென்று இந்துத்வா சார்பாளர்கள் நெருக்கடி கொடுத்ததால், அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது. இப்படியாக, நாடு முழுக்க திட்டமிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்துத்வா அமைப்புகள் பிரச்சினையைத் தூண்டிவருவது, கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும், மத நல்லிணக்கத்தை விரும்பும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.