"ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மீது இந்தியாவில் எவ்வளவு மோசடி மற்றும் பாலியல் புகார்கள் இருக்கின்றதோ, அதற்கு மேலாக அதிகளவு புகார்கள் அமெரிக்கா வில் இருக்கின்றது'' என முன்னரே இதுகுறித்து "நக்கீரன்' குறிப்பிட்டி ருந்தது. இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், போதை வஸ்துகள் பயன்பாட்டுக் குற்றங்கள், மோசடி பணப் பரிவர்த்தனைகள், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் வாரன் கவுண்டி போலீஸார் விசாரித்து வந்தனர். புகாரில் ஆஜராகக்கூறி மாவட்ட ஆணையர் குழுமம் சம்மன் அனுப்பிய நிலையில், "இந்துவாக இருந்த ஜக்கி வாசுதேவ் கிறிஸ்தவனாக மாறியது'தான் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
சம்மனை வாங்கியதுமே மிரண்டுபோன ஜக்கி வாசுதேவ், "வாரன் கவுண்டி மாவட்ட ஆணையர் கள் குழுவினால் கேட்கப்படும் கேள்விகளால் பக்தர்கள் மத்தியில் மரியாதை என்பதே துளியும் இருக்காது. ஆகையால் நாம் ஆஜராகக்கூடாது' என்று முடிவெடுத்து, டென்னஸி மாநிலத்திலுள்ள ஈஷாவில் வசிக்கும், அமெரிக்காவிலுள்ள ஈஷா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் உஷா தோஷி, அமெரிக்க ஈஷா அறக்கட்டளையின் பொருளாளர் செந்தில்குமார் கன்னியப்பன் உள் ளிட்ட நபர்களை தன்னுடைய பொறுப்பாளர் களாக அனுப்பிவைத்தார் ஜக்கி வாசுதேவ். அங்கு ஈஷாவின் வரி ஏய்ப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் டென்னஸி மெக்மின் வில்லியில் அமைந் துள்ள ஈஷா அறக் கட்டளையில், கம்யூனில் இருந்த ஜேக்கப் மாதாவின் மரணம் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் உட்பட ஈஷா அறக்கட்டளையின் செயல் பாடுகள் குறித்து அவர்களிடம் கடுமையாக விசாரிக்கப்பட்டது.
குறிப்பாக, "2024ஆம் ஆண்டில் சொத்து மற்றும் விற்பனை வரியாக சுமார் $450,000 தொகை செலுத்தப் படுகிறது. தலைவர் வெயில், அதில் சுமார் $221,000 தொகையை சொத்து வரிகள் என்று குறிப் பிட்டுள்ளார். இது விற்பனை வரியில் $221,000 முதல் $450,000 வரை பெரிய வித்தியா சத்தை ஏற் படுத்துகிறது. $200,000 மதிப்புள்ள விற்பனை வரி குறித்து தங்களது பதில் என்ன?'' எனக் கேள்வி கேட்கப்பட்டது. ஜக்கி வாசுதேவ் சார்பாக வந்த பிரதிநிதிகளில் ஒருவரான பொருளாளர் செந்தில்குமார் கன்னியப்பன் வியர்த் துக்கொட்டிய நிலையில், குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக பதில் கூறாமல், "இது சிலரால் இயக்கப் படுகின்றது'' என்றார். ஆனால் வாரன்கவுண்டி மாவட்ட ஆணையர்களோ "நேரடியாக பதில் கூறுங்கள்'' என விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
விசாரணை முடிந்தவுடனேயே, ஜக்கி வாசு தேவின் "கீ போர்டு வாரியர்ஸ்' (சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள்) மூலம், "சத்குரு ஜக்கி வாசு தேவ் தலைமையின் கீழ் 1992ஆம் ஆண்டு நிறுவப் பட்ட ஈஷா அறக்கட்டளை, அமெரிக்காவில் இயங்க, இது உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது. அங்கு 2023ஆம் ஆண்டில் இலாப நோக்கற்ற அமைப்பிற்கான வரித்தாக்கல்கள் மூலம் $132 மில்லியன் நிகர சொத்துக்களைக் காட்டியது. பிரிட்டனில், ஈஷா அறக்கட்டளை பெர்க்ஷயரின் ஸ்லோ (நப்ர்ன்ஞ்ட்)வை தளமாகக்கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இது வங்கியில் $9 மில்லியன் நிதியைக் கொண்டுள்ளது. இருப்பினும், குழந்தை பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உட்பட சிலரின் கூற்றுக்களால் ஈஷா மற்றும் அதன் குருவின் பிம்பம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது'' என்றது.
இது இப்படியிருக்க, ஜக்கி வாசுதேவின் கிரி மினல் மூளைத்தனம் அதிவேகமாக சுழல "சனாதினி சாண்டாவாக' மாறியது தான் ஹைலைட்டே! "கோவையில் நமக்கு எதிராக புதிது புதிதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. "நக்கீரன்' நமக்கு எதிராகக் கடுமையாக எழுதுகிறது. இங்கும் பல்வேறு புகார்கள் நம் ஈஷா மீது! இதனை மாற்றியமைக்க வேண்டுமென எண்ணி "பைபிளை' கையில் எடுத்துள்ளார் சத்குரு ஜக்கி வாசுதேவ். நேரடியாகவே, "சமூகத்தில் நிறைய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயமாக அவர்களுக்காக ஒரு பிரார்த்தனை அமர்வை நடத்தத் தயாராக இருப்போம். தேவை இருந்தால், பைபிள் படிப்பை நடத்த நாங்கள் நிச்சயமாகத் தயாராக இருப்போம். யாருடைய கவலைகளையும் தீர்க்க என்ன தேவைப் பட்டாலும், அதை நீங்கள் மறந்துவிடுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், கிறிஸ்தவம் உட்பட மதத்திற்கும், யோகாவிற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். யோகா என்பது ஒரு பயன்பாடு மட்டுமே. இது ஒரு கருவிகளின் தொகுப்பு. இது ஒரு நல்ல மனதையும், நல்ல உடலையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்களின் தொகுப்பு. எனது மத நம்பிக்கையை வலுப்படுத்த நான் அதைப் பயன்படுத்தினேன். இந்த இரண்டு விஷயங்களிலும் நானே என் வாழ்க்கையில் நிறைய சவால்களைச் சமாளிக்கப் பயன்படுத்தினேன்.' எனக் கிறிஸ்தவர்களுக்கு உரையாற்றி சமூக வலைத் தளத்தில் பரவவிட்டார். அதாவது, தலைக்கு மேல் இங்கு கத்தி தொங்குகின்றது. இங்குள்ள பிரச்சனை களை சமாளிக்க "கிறிஸ்தவத்தினை' கையிலெடுத் துள்ளார்'' என்றார் டென்னஸியில் வாழும் ஜக்கியின் முன்னாள் பக்தை ஒருவர்.
தன்னுடைய தேவைகளுக்காக இந்தியாவில் இந்து... அமெரிக்காவில் கிறிஸ்து. ஜக்கி வாசுதேவின் பரிணாம வளர்ச்சி எந்த எல்லைக்கு செல்லும் என்பதுதான் சனாதனிகளின் கேள்வி! விடை பகிர்வாரா ஜக்கி வாசுதேவ்?