Advertisment

தேசிய நெடுஞ்சாலை வழியாக கிராமங்களில்  நுழையும் இந்தி! -சுதாரிக்குமா தமிழகம்?

hindi


சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் தொடங்கி இந்தித் திணிப்பு முயற்சி தமிழ்நாட்டில் எடுபடவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியை புகுத்த முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியை புகுத்துவதை எதிர்த்து உயிர்நீத்த தாளமுத்து, நடராஜன் தொடங்கி பலர் தமிழ்மொழி காக்க உயிர் கொடுத்திருக்கின்றனர். 

Advertisment

ராஜாஜி, பள்ளிகளில் இந்தியைத் திணித்தபோது கரந்தை தமிழ்ச்சங்கம் கொடுத்த முதல் குரல் பட்டிதொட்டி எங்கும் பற்றியது. தமிழ்ச் சங்கங்கள், திராவிட இயக்கங்கள் என பல்வேறு அமைப்புகளும் போராடி தாய்மொழி தமிழை மீட்டு வைத்திருக்கின்றனர். 

Advertisment

தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பிற்காக போராடி சிறை சென்றவர்கள் ஏராளம். இந்தியை எதிர்த்துப் போராடிய கலைஞரை கைதுசெய்த போலீசார் லாரியில் ஏற்றி பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர். இதனை சட்டமன்றத்திலேய


சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் தொடங்கி இந்தித் திணிப்பு முயற்சி தமிழ்நாட்டில் எடுபடவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியை புகுத்த முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியை புகுத்துவதை எதிர்த்து உயிர்நீத்த தாளமுத்து, நடராஜன் தொடங்கி பலர் தமிழ்மொழி காக்க உயிர் கொடுத்திருக்கின்றனர். 

Advertisment

ராஜாஜி, பள்ளிகளில் இந்தியைத் திணித்தபோது கரந்தை தமிழ்ச்சங்கம் கொடுத்த முதல் குரல் பட்டிதொட்டி எங்கும் பற்றியது. தமிழ்ச் சங்கங்கள், திராவிட இயக்கங்கள் என பல்வேறு அமைப்புகளும் போராடி தாய்மொழி தமிழை மீட்டு வைத்திருக்கின்றனர். 

Advertisment

தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பிற்காக போராடி சிறை சென்றவர்கள் ஏராளம். இந்தியை எதிர்த்துப் போராடிய கலைஞரை கைதுசெய்த போலீசார் லாரியில் ஏற்றி பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர். இதனை சட்டமன்றத்திலேயே அண்ணா பதிவுசெய்திருக்கிறார். இப்படி யெல்லாம் தாய்மொழி காத்த தமிழ்நாட்டில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப் போராட்டத்துக்கான நெருக்கடியைத் தூண்டிவருகிறது ஒன்றிய அரசு. மும்மொழிக் கொள்கை என்று தொடங்கி பல்வேறு வடிவங்களில் இந்தியை திணிக்க முயன்ற போதெல்லாம் தோற்றுப் போனவர்கள் தற்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்தியை தமிழக கிராமங்களில் புகுத்தி வருகின்றனர். 

அதேநேரத்தில் புதிய பராசக்தி திரைப்படம் வெளியாகி "தமிழ்த் தீ பரவட்டும்' என்று இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பரவிவருகிறது.

அதாவது, காரைக்குடி- புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்          முதலில் வழிகாட்டிப் பலகைகளை இந்தியில் வைத்தவர்கள், தற்போது குக்கிராமங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் கூட            தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளில் எழுதியுள்ளனர். இதனைப் பார்த்த தஞ்சாவூர், திருமயம் பகுதிகளிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்துவருகின்றனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள கிராமங் களிலும் இந்தி எழுத்துகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

hindi1

தஞ்சாவூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை அழிக்க இயக்கம் நடத்திவரும் வழக்கறிஞர் ஜீவகுமார் நம்மிடம்... "தாய்மொழி காக்கப்பட வேண்டும். தமிழ் மொழி போற்றப்பட வேண்டும். இந்தித் திணிப்பை அடித்து விரட்டவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த தஞ்சாவூரில்தான், இந்தியை எதிர்த்ததால் முதல் பலிகளும் நடந்தன. அப்படிப்பட்ட இந்த மண்ணில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கிராம பெயர்ப்பலகை களில் இந்தி நுழைவதை எப்படி ஏற்கமுடியும்? தேசிய நெடுஞ்சாலைகளில் மும்மொழி பெயர்ப்பலகைகள் வைக்க கடந்த 2025 அக்டோபர் 20-ஆம் தேதி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்பிறகு முதல் முறையாக காரைக்குடி -புதுக்கோட்டை  -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிகாட்டிப் பலகையில் இந்தியில் எழுதியவர்கள் அடுத்து கிராமங்களில் பெயர்ப் பலகைகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதியுள்ளனர். இது பற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்ட தற்கு மும்மொழியில் பெயர்ப்பலகை வைக்க அரசாணை உள்ளது என்று பதில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த கடிதத்தில் இந்தியும், ஆங்கிலமும் உள்ளது. தமிழ் மொழி இல்லை. மும்மொழி அரசாணை என்று சொல்லும் தேசிய நெடுஞ் சாலைத்துறை அவர்களின் கடிதத்தில் தமிழைச் சேர்க்கவில்லை.

இந்த நிலையில்தான் இந்தி எழுத்துக் களை அகற்றவேண்டும் என்று இயக்கம் நடத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். மேலும், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து முதல்கட்டமாக தஞ்சாவூர் முதல் கந்தர்வக்கோட்டைவரை உள்ள கிராமங்களில் வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகை களில் இந்தி எழுத்துகளை அழித்திருக்கிறோம். தொடர்ந்து அழித்துக்கொண்டிருக்கிறோம். இதேபோல அந்தந்த கிராமங்களிலும் இளைஞர்கள் தமிழ்மொழி ஆர்வலர்கள்,  இந்தியில் உள்ள பெயர்ப் பலகைகளை அழிக்க முன்வர வேண்டும். மேலும், தமிழ் மொழி காக்க தமிழ்நாடு அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்ûயென்றால் 

இப்போது தேசிய நெடுஞ்சாலைக் கிராமங்கள் வழியாக உள்ளே நுழையும் இந்தி, அடுத்தடுத்து வெவ்வேறு வடிவங்களில் வந்து கால் ஊன்றிவிடும். கால் ஊன்றிவிட்டால் அப்புறம் விரட்டுவது ரொம்பவே கடினமாகிவிடும்''’ என்றார்.

தமிழ் இளைஞர்கள் ஆரம்பத்திலே சுதாரித்து இந்தி பெயர்ப் பலகைகளுக்கு எதிராகக் கிளம்பினால் இந்தி நுழைவை தொடக்கத்திலேயே தடுக்கலாம்.

nkn210126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe