Advertisment

ராங்கால் இந்தித் திணிப்பு! பா.ஜ.க .வை பின்வாங்க வைத்த  தி.மு.க.!

dmk

"ஹலோ தலைவரே… இந்தியைத் திணிக்க முயன்ற ஒன்றிய அரசின் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் தடுத்திருக்கிறதைக் கவனீச்சீங்களா?''” 

Advertisment

"உணர்வுப்பூர்வமான விசயமாச்சே. கவனிக்காம இருப்பேனா? நீ விவரமா சொல்லு.''” 

Advertisment

"திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட மண்டல ரயில்வே அலுவலக நுழைவுவாயிலில், "கர்தவ்ய த்வார்'னு இந்தி மொழியில் பெயர் வெச்சு, அதை மொழிபெயர்க்காம வெறுமனே "கர்தவ்ய த்வார்'னே தமிழிலும் பொறிச்சு வச்சிருக்கு ஒன்றிய அரசின் தென்னக ரயில்வே நிர்வாகம். அதாவது, ஒன்றிய அரசு அலுவலகத்துக்கு பெயர் வைக்கிறோம்ங்கிற பேரில் இந்தியைத் திணிக்க முயற்சிசெய்திருக்காங்க. இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போக, உடனே கடுமையாகக் கண்டித்தார் ஸ்டாலின். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் உட்பட தமிழகத் தலைவர்களின் கண்ட னத்தைத் தொடந்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனக் குரல்கொடுக்க, அந்த இந்திப் பெயரை அழிக்க, தி.மு.க.வினர் படை திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, தென்னக ரயில்வே நிர்வாகம், இந்தி மொழி யிலிருந்த பெயரை உடனடி யாக அகற்றியிருக்கிறது.''” 

"தி.மு.க. கூட்டணியில சேர்ந்த தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைச் சிருக்கே… அந்தக் கட்சியில டெல்லிக்குப் போக யாருக்கு யோகம் இருக்குப்பா?''”

dmk1

"தலைவரே, ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரதான கட்சியிடம் ராஜ்யசபா சீட்டை பிரேம லதா கேட்கிறதே, தனது தம்பி சுதீஷுக்குத்தான். ஆனா, எந்த ஒரு தேர்தலின்போதும் அவர்களுக்கு அந்த யோகம் கிடைத்ததில்லை. முதன்முறையாக பிரேமலதாவின் ஆசையை நிறைவேத்தியிருக்கு தி.மு.க. தம்பி சுதீஷை எம்.பி.யாக்கி ராஜ்யசபாவுக்கு அனுப்ப பிரேமலதா முடிவுசெஞ்சாங்க. ஆனா, கட்சியிலுள்ள சீனியர்கள் சிலர், நீங்க எம்.பி.யாகி டெல்லிக்குப் போங்கம்மா. உங்க பேச்சு நாடாளுமன்றத்துல எதிரொலிக்கணும். உங்க கணீர்ப் பேச்சு டெல்லிவாலாக்களை மிரள வைக்கும். தேசிய அளவுல உங்களோட இமேஜ் உயரும்; நம்ம கட்சிப் பெயர் டெல்லியில பரவணும். தம்பி சுதீஷை எம்.எல்.ஏ.வாக்கி சட்டமன்றத்துக்கு அனுப்பிக்கலாம் என பிரேமலதாவை வலியுறுத்தியிருக்காங்க. இதனால திடீர்னு பிரேமலதாவுக்கு எம்.பி.யாக ஆசை வந்திருக்கு. ஆனா, இதுக்கு சுதீஷ் ஒத்துக்கலை. நான்தான் டெல்லிக்கு போகணும்னு அடம்பிடிச் சிருக்காரு. முடிவில் 5ஆம்  தேதி காலை சுதீஷை வேட்பாளராக அறிவித்திருக்கிறது தே.மு.தி.க.'' ”

"எடப்பாடிக்கு எதிரா நிறைய புதிய கட்சிகள் உருவாகுது போலிருக்கேப்பா.'

"எடப்பாடிக்கு எதிரா நிறைய புதிய கட்சிகள் உருவாகுது போலிருக்கேப்பா.''…”

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.ஸோடு இணைஞ்சி எடப்பாடிக்கு எதிரா அரசியல் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். அ.தி. மு.க.ன்னு கட்சி ஆரம்பிச்சி விஜய்க்கு ஆதரவா இறங்கிட்டாரு. ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவா இருந்த சசிகலாவும் எடப்பாடிக்கு எதிரா புதுக்கட்சியை சமீபத்தில துவக்கினாரு. சசிகலாவோடு இணை வாருன்னு எதிர்பார்த்த ஓ.பி.எஸ், தி.மு.க.வுல ஐக்கியமாயிட்டாரு. அவரோட இருந்த அவரது ஆதரவாளர்கள் எல்லாம் ஓ.பி.எஸ். முடிவெடுக்கிறதுக்கு முந்தியே தி.மு.க.வுல யும், அ.தி.மு.க.வுலயும் தஞ்சமடைஞ்சிட் டாங்க. ஓ.பி.எஸ்.ஸிடம் இருந்த எல்லோ ரும் போனதுக்கப்புறம் மீதமிருந்தவரு பெங்களூர் புகழேந்தி மட்டும்தான். அவரை அ.தி.மு.க.வில் இணையச்சொல்லி எடப்பாடி தூதனுப்பினாரு. ஆனா, அதை மறுத்து புகழேந்தி, புரட்சி அ.தி.மு.க.ங்கிற பேர்ல புதிய கட்சி தொடங்கிட்டாரு. அதை தேர்தல் ஆணையத்துல பதிவுசெய்யுற வேலையில இறங்கியிருக்காரு புகழேந்தி. இப்படி எடப்பாடிக்கு எதிரா பல கட்சிகள் உருவாகிக்கிட்டு இருக்கு.''” 

"எடப்பாடியின் வலதுகரமா இருக்கும் தி.நகர் சத்யாவின் வலதுகரமான பிரசன்னாவை கைதுசெய்து சிறையில் அடைத்த விவகாரத்தில் தி.நகர் சத்யா தப்பிச்சிட்டாராமே?''” 

"டபுள் டாகுமெண்ட் தயாரிச்சு பலரின் சொத்துக்களை அபகரிப்பது தி.நகர் சத்யாவுக்கும் அவரது தொண்டரடிப்பொடியாழ்வார்களுக்கும் வழக்கமான ஒன்று. அப்படி போலி டாகுமெண்ட் மூலம் நில அபகரிப்பு க்ரைம்ல ஈடுபட்டிருக்காரு சத்யாவின் வலதுகரமான பிரசன்னா. அதுதொடர் பான ஒரு புகார் ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு வந்திருக்கு. அதனை விசாரித்தபோது, புகார் உண்மைன்னு தெரிஞ்சதி னால பிரசன்னாவை கைதுசெய்ய உத்தரவிட்டாரு கமிஷனர். உடனே களத்தில் இறங்கிய போலீசார், பிரசன்னாவை கைதுசெய்து சிறையில் அடைச் சிருக்காங்க. சிறைக்கு அனுப்புறதுக்கு முன்னால அவரிடம் போலீசார் விசாரிச்சப்போ, சத்யாவின் பெயரையும் சொல்லியிருக்கார். இதையடுத்து தி.நகர் சத்யாவை நெருங்க மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கு போலீஸ்.''” 

"ராஜ்யசபா சீட்டுக்கான பெயர்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க ஆரம்பிச்சுடுச்சே...?''

"காங்கிரசுக்கு 28+1 என சீட் ஷேரிங்கை முடித்து கூட்டணியை உறுதிசெய்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.விடம் இருக்கும் 2 ராஜ்யசபா சீட்டை திருச்சி சிவாவுக்கும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கும் ஒதுக்கியிருக்கிறாரு. ஐந்தாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாகிறார் திருச்சி சிவா. மீண்டும் சிவா எம்.பி. யாகிறார் என்றும், ஒரு சீட் புதுமுகத் திற்கு ஒதுக்க தி.மு.க.வில் கோரிக்கை எழுந்திருக்கிறதென்றும், ஏற்கனவே முதன்முதலாக நாம்தான் பேசிக்கிட் டோம். அதேபோல புதுமுகத்திற்கு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பா திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் என்பவரை எம்.பி. வேட்பாளரா நிறுத்தியிருக்காங்க. அவர் வடமாநி லங்களில் காங்கிரஸ் பொறுப்பாளரா பணியாற்றியபடி அகில இந்திய காங் கிரஸ் செயலாளரா இருக்காராம்.''” 

"நாங்குநேரி விவகாரம் பத்தி ஏதும் ஸ்கூப் நியூஸ் இருக்கா?"

rang1

"கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பா நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அரிவாள் வெட்டில் இருவர் கொலையாகி, ஐவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். இது குறித்து 'நக்கீரனில்' செய்தி வெளியாகியுள்ளது. கொடூர அரிவாள் வெட்டு சம்பந்தமாக நெல்லை புறநகர் மாவட்ட காவல்துறை 7 நபர்களை கைதுசெய்தது. "கைதுசெய்யப்பட்ட அனைவரும் வெறும் அம்புகளே. நடிகர் ஒருவரிடம் டிரைவ ராக வேலைபார்த்து சமீபத்தில் கொலைவழக்கில் மாட்டிய "முருகக் கடவுள்' பெயர் கொண்ட ஒருவனே இந்த சம்பவத்திற்கு சூத்திரதாரி. அவனுடைய அசைவிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள நாங்குநேரி ஜீயர் மடத்திற் கென பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொத்துக்களாக உள்ளன. அதன் இப்போதைய சந்தை மதிப்பு பல்லாயிரம் கோடி. அதை அனு பவிப்பதிலும், அதன் வில்லங்கங்களிலும், அதன்மூல மாக உருவாகும் அரசியல் அதிகாரத்திலும் ‘நாங்க வைச்சதுதான் இங்க சட்டம், மற்ற எல்லா சமூகத் தினரும் அடங்கியிருக்கணும்’ என்பதற்காக 'அந்த டிரைவரால்' நடத்தப்பட்டதே இந்த கொடூரம்' என குறிப்பு எழுதியுள்ளது மாநில உளவுத்துறை. விரைவில் அந்தப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம் என்கிறது காவல்துறை.''”

"கொடி அறிமுகம் மட்டுமே நடந்த நிலையிலும் சசிகலா கட்சிக்கு வர்றதா நிறைய பேர் தூதுவிடறாங்களாமே?''”

"கட்சிக்கு பெயர் வைக்கவில்லை. அதற்குள் எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சதிகாரத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள், இன்னாள் என பலர் சசிகலாவிடம் சரணடைய தூதுவிட்டு வருகின்றனர். கொடி அறிமுகத்தின்போது ராஜபாளையம் சந்திரபிரபா, தென்காசி பொன்னுத்தாய், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் என பலரும் சசிகலாவின் பக்கம் வந்த நிலையில், மறுநாள் சசிகலாவிடம் வந்துசேர்ந்தார் தென்காசி முன்னாள் எம்.பி.யும், கட்சியின் பெண். மா.செ.வுமான வசந்தி முருகேசன். செங்கோட்டையன் மூலமாக த.வெ.க.வில் இணைய சசிகலா கட்சி தருணம் பார்த்துக்கொண்டிருக்க, இராம்நாடு மா.செ. ஜி.முனியசாமி, விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிசந்திரன் (முன்னாள் சபாநாயகர் காளிமுத்து தம்பி) மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள "குட்டியான' எம்.எல்.ஏ.வும் சசிகலாவிடம் இணைப்பிற்கு தூது விட்டுள்ளனர்.''”

rang

"அஜித்குமார் விவகாரத்துல நான் எந்த அழுத்தமும் கொடுக்கலைன்னு நிகிதா ஜகா வாங்கியிருக்காங்கபோல?''”

"2025, ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போன புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை செய்யப்பட்ட திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் ஜூன் 28ஆம் தேதி உயிரிழந்தார். வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 4-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜரானார், நகை காணாமல்போனதாக புகாரளித்த நிகிதா. நிகிதா அளித்த புகாரை முடித்துவைக்க உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட, இதுகுறித்து உங்களது கருத்து என்ன என நீதிபதி அசன்முகமது, நிகிதாவிடம் கேள்வியெழுப்ப, நிகிதாவோ, "எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை' என்றார். நீதிபதி நிகிதாவின் கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய கூறியதோடு, வழக்கு விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிகிதா, "நான் முதன்முதலில் புகாரளித்தது அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான். பின்னர்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. என் தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்குச் செல்லவில்லை. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது' என்று போலீசார்தான் அனைத்துக்கும் பொறுப்பு என்பதுபோல ஜகா வாங்கியிருக்கிறார்.''”

"சிபாரிசு என்ற பெயரில் அழுத்தம் தரும் பா.ஜ.க.விடம் பொங்கியெழுந்துவிட்டாராமே புதுவை முதல்வர் ரங்கசாமி?''”

"ஆமாம் தலைவரே, ஆரம்பம் முதலே ஜோஸ் சார்லஸின் ல.ஜ.க.வை ரங்கசாமி விரும்பவில்லை. இத்தனை நாள் தன்னை விமர்சித்தவர், பா.ஜ.க. சப்போர்ட் மூலமா கூட்டணியில் நுழையறதை ரங்கசாமி கொஞ்சமும் விரும்பலையாம். இருந்தாலும், விடாமல் ஜோஸ் சார்லஸ் முதல்வருக்கு நன்கு பழக்கமான மணவெளி சுரேஷ் மூலம் சந்திக்க அப்பாய்ண்ட்மென்ட் கேட்டிருக்கிறார். அதுக்கு ஸ்ட்ரிக்டா நோ சொன்ன முதல்வர், அதே கோரிக்கையை வலியுறுத்த போன் செய்த பா.ஜ.க. பொறுப்பாளரிடம், “'ஒன்று... சில விஷயங்களை என்னை முடிவெடுக்க விடுங்கள், இல்லை வேறு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தியுங்கள். ரொம்ப நெருக்கினால், மாநில அந்தஸ்து தந்தால்தான் தேர்தலில் பங்கேற்பேன்னு சொல்லி தேர்தலைப் புறக்கணிச்சுடு வேன்'னு நறுக்குன்னு சொல்லி போனை வெச்சுட்டாராம்.''”

"அன்புமணியோட, ராமதாஸையும் கூட்டணிக்குள் சேர்த்துக்கிட ஆலோசிக்குதாமே அ.தி.மு.க.?''”

“"நிஜந்தான் தலைவரே, டாக்டர் ராமதாஸிடம் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது. அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்பட பலர் ராமதாஸிடம் பேசுகிறார்கள். அவர்கள் ஸ்ரீகாந்தி மகன் முகுந்தன் மூலம் பேசி ராமதாஸை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ராமதாஸுக்கு மூன்று தொகுதிகள் கொடுத்து அவரை அ.தி.மு.க. கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.”

"திருவாடானை தொகுதி உடன்பிறப்புகள் மற்றும் தொகுதி மக்கள் ஆதங்கத்தில் இருக்காங்களாமே?''

"ஆமாங்க தலைவரே... கடந்த 5 வருஷமா காங்கிரஸ் வசமிருந்த அந்தத் தொகுதியில எந்தவித வளர்ச்சிப் பணியும் நடக்கல. இந்த முறையாவது தி.மு.க. வேட்பாளர நிறுத்துவாங்கன்னு எதிர்பார்த் தாங்க. தி.மு.க.வும் -காங்கிரஸும் கூட்டணி சேர்ந்திருக்கிறதுனால, மீண்டும் காங் கிரசுக்கே தொகுதிய ஒதுக்கிடுவாங்க ளோன்னு வருத்தத்துல இருக்காங்களாம். தொகுதிய தி.மு.க.வுக்கு ஒதுக்கி, மக்கள்ட்ட நல்லது செஞ்சு இளரத்தமா துறுதுறுன்னு இருக்கிற அரசு வழக்கறிஞர் கார்த்தி கேயனை தொகுதி வேட்பாளரா அறிவிச்சா தொகுதியும் நல்லா வளர்ச்சிபெறும், தி.மு.க. வும் இன்னும் பலமாகும்னு தொகுதி யைச் சேர்ந்தவங்க பேசிக்கிறாங்க.''

"சரி, நானும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்றேன். தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும், தன்னோட கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வை குஷிப்படுத்தவும்  மத்திய அமலாக்கத்துறையின் 180 அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாம் ஒன்றிய அரசு. அதிகாரிகள் அனை வரும் குறிவைப்பது நேரு வைத்தானாம். அதற்காக திருச்சிக்கு ஒரு பெரிய பட்டாலியன் படை அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படை திருச்சியிலும், சேலத்திலும் முகாமிட்டு வேலை செய்கிறது. கே.என்.நேருவோடு கூடுதலாக செந்தில் பாலாஜியும் குறிவைக்கப்படுகிறாராம்.  அமலாக்கத் துறையின் பார்வையில் மந்திரிகள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இருக்கிறார்களாம். விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் குறிவைத்து கைது செய்வதன்மூலம் ஒன்றிய அரசின் அதிரடி ஆட்டம் தொடங்குமாம்.’ அ.துறை என்னதான் தலைகீழ தண்ணி குடிச்சாலும், அடுத்து ஆட்சிக்கு வரப்போற எங்களை ஒண்ணும் ஆட்ட முடியாதுன்னு ஆளுந்தரப்பு சவால்விடுதாம்.

nkn070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe