பொதுமக்களைவிட கொரோனா குறித்த நியாயமான அச்சத்தில் இருக்கிறார்கள் மருத்துவர்கள். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸுகள், பிற மருத்துவப்பணியாளர்கள் என இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் டாக்டர்களின் எண்ணிக்கை மட்டும் 50க்கு மேல்.
கொரோனா நோயை கண்டறிந்து சொன்ன சீன மருத்துவர் லீ தான் மருத்துவர்களில் முதல் பலி. இந்தோனேஷியாவில் சிகிச்சையளித்த டாக்டர் தனக்கு நோய்த்தொற்று இருப்பதை அறிந்து, வீட்டு வாசலில் நின்று மனைவி-குழந்தைகளிடம் பிரியாவிடை பெற்றுச் சென்ற படம் எல்லோரையும் உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, இத்தாலியில் 14 டாக்டர்கள் உயிரிழந்தார்கள். தமிழக மருத்துவர்களின் நிலை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்தோம்…
தலைமை மருத்துவமனையின் நிலை!
தமிழகத்தின் நம்பர் 1 அரசு மருத்துவமனை சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை. இங்கு டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் நிலை குறித்து நாம் விசாரித்தபோது, “2020 ஜனவரி-31 ந் தேதிதான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் கொரோனா வார்டில் அட்மிட் ஆனார். அவருக்கு நெகட்டிவ் என டெஸ்ட் காட்டியது. அதன்பின்னர் பலரும் அறிகுறிகளுடன் அட்மிட் செய்யப்பட்டார்கள். மார்ச் 4- ந்தேதி ஸ்டான்லி மருத் துவமனையில் அட்மிட் ஆகி அங்கிருந்து ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு 5-ந்தேதி அனுப்பப்பட்ட வெங்கடாசலபதிக்கு பரிசோதனை செய்தோம். பரிசோதனை முடிவு இரண்டு நாட்கள் தாமதமானபோதே நாங்கள் கொஞ்சம் அலர்ட்டாகி, கூட்டு மருந்து சிகிச்சைகளை மேற்கொண்டோம். 8- ந்தேதி அவருக்கு பாசிட்டிவ் என உறுதியானது. அதை அமைச்சர் விஜயபாஸ்கரும் முறைப்படி அறிவித்தார்.
மார்ச்-13 ந்தேதியும் 14 ந்தேதியும் அவரை பரிசோதித்ததில் நெகட்டிவ் காண்பித்த பிறகுதான் அவரை வீட்டுக்கே அனுப்பினோம். அதற்கடுத்த, பாசிட்டிவ் கேஸ்களையும் சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளோம். டாக்டர்களைப் போல நர்ஸுகள் சுகாதாரப்பணியாளர்கள் அனைவரும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். ஆனால், முதுநிலை மருத்துவர்களுக்கு என்-95 மாஸ்க் உள்ளிட்ட மருத்துவப்பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க மறுக்கிறார்கள். ஓ.பி. எனப்படும் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்க்கும் டாக்டர்களுக்கு சாதாரண
பொதுமக்களைவிட கொரோனா குறித்த நியாயமான அச்சத்தில் இருக்கிறார்கள் மருத்துவர்கள். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸுகள், பிற மருத்துவப்பணியாளர்கள் என இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் டாக்டர்களின் எண்ணிக்கை மட்டும் 50க்கு மேல்.
கொரோனா நோயை கண்டறிந்து சொன்ன சீன மருத்துவர் லீ தான் மருத்துவர்களில் முதல் பலி. இந்தோனேஷியாவில் சிகிச்சையளித்த டாக்டர் தனக்கு நோய்த்தொற்று இருப்பதை அறிந்து, வீட்டு வாசலில் நின்று மனைவி-குழந்தைகளிடம் பிரியாவிடை பெற்றுச் சென்ற படம் எல்லோரையும் உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, இத்தாலியில் 14 டாக்டர்கள் உயிரிழந்தார்கள். தமிழக மருத்துவர்களின் நிலை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்தோம்…
தலைமை மருத்துவமனையின் நிலை!
தமிழகத்தின் நம்பர் 1 அரசு மருத்துவமனை சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை. இங்கு டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் நிலை குறித்து நாம் விசாரித்தபோது, “2020 ஜனவரி-31 ந் தேதிதான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் கொரோனா வார்டில் அட்மிட் ஆனார். அவருக்கு நெகட்டிவ் என டெஸ்ட் காட்டியது. அதன்பின்னர் பலரும் அறிகுறிகளுடன் அட்மிட் செய்யப்பட்டார்கள். மார்ச் 4- ந்தேதி ஸ்டான்லி மருத் துவமனையில் அட்மிட் ஆகி அங்கிருந்து ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு 5-ந்தேதி அனுப்பப்பட்ட வெங்கடாசலபதிக்கு பரிசோதனை செய்தோம். பரிசோதனை முடிவு இரண்டு நாட்கள் தாமதமானபோதே நாங்கள் கொஞ்சம் அலர்ட்டாகி, கூட்டு மருந்து சிகிச்சைகளை மேற்கொண்டோம். 8- ந்தேதி அவருக்கு பாசிட்டிவ் என உறுதியானது. அதை அமைச்சர் விஜயபாஸ்கரும் முறைப்படி அறிவித்தார்.
மார்ச்-13 ந்தேதியும் 14 ந்தேதியும் அவரை பரிசோதித்ததில் நெகட்டிவ் காண்பித்த பிறகுதான் அவரை வீட்டுக்கே அனுப்பினோம். அதற்கடுத்த, பாசிட்டிவ் கேஸ்களையும் சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளோம். டாக்டர்களைப் போல நர்ஸுகள் சுகாதாரப்பணியாளர்கள் அனைவரும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். ஆனால், முதுநிலை மருத்துவர்களுக்கு என்-95 மாஸ்க் உள்ளிட்ட மருத்துவப்பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க மறுக்கிறார்கள். ஓ.பி. எனப்படும் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்க்கும் டாக்டர்களுக்கு சாதாரண மாஸ்க்கை கொடுக்கிறார்கள். சண்டைப்போட்டுத்தான் என் -95 மாஸ்க்குகளை வாங்கவேண்டியிருக்கிறது.
குவாரண்டைன் வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸுகள், மருத்துவப்பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவேண்டும். ஆனால், செய்யப்படுவதில்லை. கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கு இருமல் மற்றும் தொண்டைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யவேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார். அவருக்கும் பரிசோதனை செய்யவில்லை.
215, 236, 226, 246, 256 ஆகிய வார்டுகளில்தான் கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் ரகுநந்தன் தான் இந்த பொதுமருத்துவப் பிரிவிற்கான தலைவர். கொரோனாவிற்கான நோடல் ஆஃபிசரும் அவர்தான். ஒவ்வொரு வார்டுக்கும் உள்ள நர்ஸிங் சூப்பிரெண்டண்டுகள் தான் மாஸ்க் உள்ளிட்ட பி.பி.இ. (தனித்த பாதுகாப்பு) உபகரணங்களை ஏற்பாடு செய்துகொடுக்கவேண்டும். இவர்களில் பலர், முதுநிலை மருத்துவர்களைவிட பல ஆண்டுகள் சீனியர்கள் என்பதால் ஈகோவும் தடுக்கிறது. பி.பி.இ. கிட்களின் பற்றாக்குறையும் அதிகம். இதுகுறித்து ஹெச்.ஓ.டி. ரகுநந்தனிடம் கூறினால் தேவையில்லாத பிரச்சனையாகி தேர்வில் கைவைப்பார்களோ என்ற அச்சத்தில் எதையும் கேட்காமல் இருக்கிறார்கள் முதுநிலை மருத்துவர்கள்.
தலைமை மருத்துவருக்கு தொற்று அறிகுறி!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துறைத்தலைவர் ஒருவரே கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால், இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. அப்படி, பரிசோதனை செய்து உறுதி படுத்திவிட்டால் சர்ச்சையாகி விடும் என்று டாக்டர்களின் உயிருடன் விளையாடிக்கொண்டிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. டைப்-1, டைப்-2, டைப்-3 என மூன்றுவிதமான பி.பி.இ. கிட்கள் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதுவும், கொரோனா வார்டில் நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு டைப்-3 எனப்படும் அதிபாது காப்பான உபகரணங்களை வழங்கவேண்டும்.
டைப் 3ன்படி ஒரு சர்ஜிகல் குல்லா, சர்ஜிக்கல் கவுன், ஒரு ஜோடி க்ளவுஸ், ஒரு ஜோடி பூட்ஸ் தரப்படவேண்டும். இவை அனைத்தும் டிஸ்போஸபிள் வகையைச் சேர்ந்தவை. பயன் படுத்தப்பட்ட பிறகு, பாதுகாப் பாக தூக்கிப் போட்டுவிட வேண்டும். பிறகு, புதிதாக இதுபோன்ற பாதுகாப்பு உடைகள் தரப்பட வேண்டும். ஆனால், டைப்-1 சாதாரண உபகரணங்களை வழங்கு கிறார்கள். ஆர்டர் கொடுத்தும் இன்னும் வரவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. வட மாவட்டைச்சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை அளித்த பி.ஜி. டாக்டருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டுள் ளது. அவரது, அப்பாவும் டாக்டர் என்பதால் அவரை அழைத்துப்போய் குவாரண்டைன் செய்து, சிகிச்சை கொடுத்து வருகிறார்.
பாதுகாப்பு கருவிகள் தட்டுப்பாடு ஏன்?
இதுகுறித்து, நம்மிடம் பேசும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ராமலிங்கம், “பொதுமக்களுக்கு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதைவிட கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுத்தான் மிக எளிதாக கொரோனா தொற்று பரவுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளில் நூற்றுக்கு இரண்டுபேர் மரணிக்கிறார்கள் என்றால், நோயாளிகளை நெருங்கி சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர் கள் 15 பேர் மரணத்தை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது.. ஒரு நோயாளியிடம் விசாரிப்பதற்கே 15 நிமிடங்களாவது தேவைப்படும். அதிலேயே, எளிதாக தொற்ற வாய்ப்புள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ட்யூப் போடும்போது 15 செண் டிமீட்டர் அருகே இருப்பதால் இருமல், தும்மல், நீர்த்திவாலைகள் மூலம் உடனே தொற்றிவிடும் வாய்ப்பு அதிகம். இதில் மயக்கவியல் மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
2019 டிசம்பர் மாதமே கொரோனா குறித்த தகவல்கள் வெகுவாக பரவ ஆரம்பித்துவிட்டன. அபபோதே, பி.பி.இ. கிட் உட்பட மருத்துவ உப கரணங்களை தயாராக வைத்துக்கொள்ளவேண்டிய இந்தியா தனது உற்பத்திகளையே வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்ய ஆரம்பித்துவிட்டது. மார்ச் மாதம்தான் விழித்துக்கொள்ள ஆரம்பித்தது. ஆனால், அதற்குள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. தற்போது, சீக்கிரமாகவும் அதிகமாகவும் தயாரிக்க வேண்டும் என்ற அவசரத்தால் முழுமையான பாதுகாப்பில்லாமல் தயாரித்து அனுப்பப்படு கின்றன.
கொரோனாவை உறுதி செய்யும் ஆர்.டி. பி.சி.ஆர். கன்ஃபர்மேஷன் டெஸ்ட் வெளியில் 4,000 ரூபாய். அதனால், குறைந்த அளவுக்குத்தான் அரசாங்கம் மையங்களை உருவாக்கி பரிசோதனை செய்துகொண்டிருந்தது. தற்போது, மையங்களை அதிகப்படுத்தினாலும் போதுமான பரிசோதனைகளை செய்வதில்லை. ஆனால், 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் மட்டுமே செலவாகும் ரேப்பிட் எனப் படும் ஆண்டிஜன் - ஆண்டிபாடி பரிசோதனையாவது செய்து அதற்கான சிகிச்சையை தொடர்ந்திருக்கலாம். அதற்கான கருவிகளை, ஏபரல்-8 ந்தேதிதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள், 25,000 அரசு செவிலியர்கள், 15,000 த்துக்குமேற்பட்ட மருத்துவப்பணியாளர்கள் என 75,000 பேருக்கும் இந்த ரேப்பிட் பரிசோதனையை செய்யவேண்டும். அதிலிருந்து, சந்தேகம் ஏற்பட் டால் ஆர்.டி.பி.சி.ஆர். கன்ஃபர்மேஷன் பரிசோதனையை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மதுரையில் முதல் முதலில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர் எப்படி? என்று தமிழக சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோதுதான் டெல்லி மீட்டிங் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பதைக் கண்டுபிடித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறிகளே இல்லை. இப்படி, அறிகுறிகுறி இல்லாத அந்த மீட்டிங்கிற்கே செல்லாத எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது என்பதை பரிசோதித்தால்தானே தெரியும்? அதனால், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்பது கேள்விக்குறி. தென் கொரியாவில் எல்லாம் தெருவுக்கு தெரு பூத் அமைத்து பரிசோதனை செய்வதுபோல இங்கும் பரிசோதனை செய்து பாசிட்டிவ் ஆனவர்களை தனிமைப்படுத்தினால் மட்டுமே மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கமுடியும். டாக்டர்கள் அச்சமின்றி கொரோனா வார்டுக்குள் நுழையவேண்டும் என்றால் தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அப்போதுதான், பொதுமக்களை அவர்களால் காப்பாற்றமுடியும்’’ என்கிறார் கோரிக்கையாக.
சமூக சமத்துவத் திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி நம்மிடம், “மும்பையில் 26 நர்ஸுகள், 3 டாக்டர் கள் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரள திருவனந்தபுரம் சித்தி ரை திருநாள் மருத்துவ மனையில் 40க்கு மேற் பட்ட மருத்துவப்பணியாளர் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். டெல்லி மருத்துவமனையில் 108 மருத் துவப்பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பீகார் நாளந்தா மருத்துவமனையில் 83 ஜூனியர் அசிஸ்டெண்டுகள் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ளவர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்பவர்கள் அறிகுறிகள் இல்லையென்றாலும் பரிசோதிக்கப்படவேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர். வழிமுறையை கொடுத்துள்ளது. ஆனால், டாக்டர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு செய்து உறுதிபடுத்திவிட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்பதற்காவும் பரிசோதனையே செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம்’’ என்கிறார்.
கொரோனா வயதானவர்களை அதிகமாக பாதித்து உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க புதிதாக டாக்டரை நியமிப்பதற்கு பதில், ஓய்வுபெற்ற மருத்துவர்களையே மறுபடியும் இரண்டு மாதத் திற்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசின் உத்தரவால் வயதான டாக்டர் களுக்கும் கொரோனா தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவது போன்ற தோற்றத்தை சுகாதாரத்துறை உருவாக்குகிறது.
பல மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களில் கொரோனா பாதித்தவர்கள் குறித்து உறுதிபடுத்தப்பட்டாலும் அது மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
ஊரடங்கு உத்தரவுபோட்டு பல்வேறு விதங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசு, கொரோனாவிடம் மருத்துவ ரீதியாகப் போரிட்டுக்கொண்டிருக் கும் டாக்டர்கள், நர்ஸுகள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங் களை வழங்குவதோடு பரிசோதித்து சிகிச்சையும் அளிக்கவேண்டும். அப்போதுதான், அவர்களால் பொதுமக்களை காப்பாற்ற முடியும்.
-மனோசௌந்தர்
__________
வஞ்சிக்கும் மோடி அரசு!
பிரதமருடனான வீடியோ கான்ஃபரன்சில் ஒவ்வொரு மாநில முதல்வரும் நிதித்தேவை குறித்து வலியுறுத்தினார். தமிழகத்தைப் பொறுத்தவரை முதலில் 9000 கோடி அதன்பிறகு மேலும் 3000 கோடி என முதல்வர் வலியுறுத்தியிருந்தார். இந் நிலையில், மராட்டியத்திற்கு 1,611 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு 966 கோடியும், ம.பி.க்கு 910 கோடியும் ஒதுக்கியுள்ள மோடி அரசு, கொரோனா தொற்று அதிகரித்து வரும் தமிழகத்துக்கு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.