Advertisment

ஊழல் செய்தவருக்கு உயர் பதவியா? -அரசு கல்லூரி கலாட்டா!

ss

மிழக உயர்கல்வித்துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத் தின் கீழ் தமிழகம் முழுவதும் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாணவர்களின் கல்விக் கட்டணத் தில் ஊழல் செய்ததாக பெண் முதல்வர் ஒருவர் மீது குற்றச் சாட்டுகள் கோட்டைக்கு பறந்துள்ளன.

Advertisment

இதுகுறித்து விசாரித்த போது,”"மதுரை அரசு பாலிடெக் னிக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார் தேன்மொழி. இதே கல்லூரியில் இவர் விரிவுரையாள ராக பணியாற்றிய சமயத்தில், இந்தியா-கனடா கூட்டுப்பயிற்சித் திட்டத்தின் தொடர்கல்வி மேலா

மிழக உயர்கல்வித்துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத் தின் கீழ் தமிழகம் முழுவதும் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாணவர்களின் கல்விக் கட்டணத் தில் ஊழல் செய்ததாக பெண் முதல்வர் ஒருவர் மீது குற்றச் சாட்டுகள் கோட்டைக்கு பறந்துள்ளன.

Advertisment

இதுகுறித்து விசாரித்த போது,”"மதுரை அரசு பாலிடெக் னிக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார் தேன்மொழி. இதே கல்லூரியில் இவர் விரிவுரையாள ராக பணியாற்றிய சமயத்தில், இந்தியா-கனடா கூட்டுப்பயிற்சித் திட்டத்தின் தொடர்கல்வி மேலா ளர் பொறுப்பில் நியமிக்கப் பட்டிருந்தார். அப்போது, இத் திட்டத்தில் படிக்க வந்த மாண வர்கள் செலுத்திய கல்விக் கட்ட ணத்தில் தேன்மொழி ஊழல் செய்திருப்பதாக ஆடிட்டிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Advertisment

ஆனால், ஆக்சன் எடுக்காத நிர்வாகம், ஊழல் செய்த பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது. 1,49,475 ரூபாயை தேன்மொழி திருப்பிச் செலுத்தியதும் அவருக்கு பதவி உயர்வளித்து கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வ ராக நியமிக்கப்பட்டார். இதை யறிந்து, நேர்மையான பேரா சிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

s

இந்த நிலையில், எந்த கல்லூரியில் கல்விக் கட்டணத்தில் முறைகேடு செய்தாரோ அதே மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முதல்வராக வந்து விட்டார் தேன்மொழி. மீண்டும் ஊழல் நடக்கத்தொடங்கியிருக் கிறது. இவரது அதிகார துஷ்பிர யோகம் கொடிகட்டிப் பறக்கிறது.

கல்லூரியிலுள்ள பணி மனை போதகர் ஜான்பீட்டரை மதரீதியாக ஒருமையில் கேவல மாக தேன்மொழி விமர்சிக்க, இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கமிஷனருக்கும், தமிழக அரசின் சிறுபான்மை நலவாரிய தலைவருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் ஜான் பீட்டர். இதனை விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மூன்று பேருமே தேன் மொழியைவிட ஜூனியர்கள் என்பதால் அவர்கள் எப்படி தேன்மொழியிடம் நேர்மையாக விசாரிக்க முடியும்? ஆக, ஊழல் செய்தவர்களுக்கெல்லாம் உயர்பதவி கொடுத்து கல்லூரி யை சீரழிக்கின்றனர்''’ என் கிறார்கள் உயர்கல்வித்துறை யினர்.

இதுகுறித்து தேன் மொழியை தொடர்புகொண்டு கேட்டபோது, "கல்விக் கட்டணத்தில் ஊழல் செய்தது ஒரு பெண் அக்கவுண்டண்ட். இதே ஊழல் எனக்கு முந்தைய பீரியடிலும், எனக்கு பிந்தைய பீரியடிலும் நடந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த அக்கவுண்டண்டால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால், பொறுப்பிலிருந்த எங்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்த ஊழல்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அதேபோல, பணிமனையை சுத்தமாக வைத்துக் கொள்ளாத தாலும், பணி ரெக்கார்டுகளை எடுத்து வராததாலும் ஜான்பீட்டரிடம் நான் கேள்வி எழுப்பியதால் என்மீது அபாண்டமாக புகார் சொல்கிறார். அவரது புகாரில் சிறிதும் உண்மை கிடையாது. நான் அப்பழுக்கற்ற அரசு அதிகாரி. வேண்டுமென்றே எனக்கு எதிராக பழி போடு கிறார்கள்''’என்கிறார் தேன் மொழி.

-இளையர்

nkn010524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe