தலைமை ஆசிரியர் துணை நடிகையுடன் ஆட்டம்! -அரசுப் பள்ளி மாணவர்கள் வாட்டம்!

ss

ட்டி புடிச்சேன்.. நான் கட்டிப் புடிச்சேன்..

என் வெட்கம் விட்டு மூச்சு மூட்டக் கட்டிப் புடிச்சேன்..’

இந்தப் பாடலின் பின்னணியில் வாழைத் தோட்டத்தில் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்து ஆடிய காணொலியை லேப்டாப்பில் ஓடவிட்டு நம்மிடம் காட்டிய இருவர் “இவரை நல்லா பார்த்துக்கங்க..”என்று ஆட்டம் போட்ட அந்த நபரின் பெயரை அரசகுமார்’எனக் குறிப்பிட்டனர். மற்றொரு யூடியூப் காணொலியில் "சவுடு படத்துல நான் வில்லனா நடிச்சிருக்கேன். வெறித்தனமான அயிட்டம் சாங்ல கலக்குற வில்லி ஷோபிகாவுக்கு நானும் ஒரு ரசிகன்..'’எனப் பெருமிதப்பட்டுக் கொள்கிறார் அந்த அரசகுமார்.

ss

"அரசகுமார் ஒரு நடிகர் என்பதைச் சொல்லவா வந்தீர்கள்?''’என்று கேட்டோம் அந்த இருவரிடம்.

அதற்கு அவர்கள், "விருதுநகர் நகராட்சி யோட குடிநீர் ஆதாரமா இருக்கு ஆனைக்குட்டம் அணை. நாங்க ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களா வேலை பார்க்கிறோம். அரசகுமார் எங்க ஸ்கூலோட தலைமை ஆசிரியர். ஒண்ணே கால் லட்ச ரூபாய் கவர்மெண்ட் சம்பளம் வாங்கிட்டு, ஸ்கூல கட் அடிச்சிட்டு சினிமாவுல நடிக்கிறாரு. பேமஸான சினிமா பாட்டுக்கு துணை நடிகைகளோட டான்ஸ் ஆடி, யூடியூப்ல போட் றாரு. அந்த யூடியூப் லிங்க்கை ஸ்டூடண்ட்ஸுக்கு அனுப்ப

ட்டி புடிச்சேன்.. நான் கட்டிப் புடிச்சேன்..

என் வெட்கம் விட்டு மூச்சு மூட்டக் கட்டிப் புடிச்சேன்..’

இந்தப் பாடலின் பின்னணியில் வாழைத் தோட்டத்தில் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்து ஆடிய காணொலியை லேப்டாப்பில் ஓடவிட்டு நம்மிடம் காட்டிய இருவர் “இவரை நல்லா பார்த்துக்கங்க..”என்று ஆட்டம் போட்ட அந்த நபரின் பெயரை அரசகுமார்’எனக் குறிப்பிட்டனர். மற்றொரு யூடியூப் காணொலியில் "சவுடு படத்துல நான் வில்லனா நடிச்சிருக்கேன். வெறித்தனமான அயிட்டம் சாங்ல கலக்குற வில்லி ஷோபிகாவுக்கு நானும் ஒரு ரசிகன்..'’எனப் பெருமிதப்பட்டுக் கொள்கிறார் அந்த அரசகுமார்.

ss

"அரசகுமார் ஒரு நடிகர் என்பதைச் சொல்லவா வந்தீர்கள்?''’என்று கேட்டோம் அந்த இருவரிடம்.

அதற்கு அவர்கள், "விருதுநகர் நகராட்சி யோட குடிநீர் ஆதாரமா இருக்கு ஆனைக்குட்டம் அணை. நாங்க ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களா வேலை பார்க்கிறோம். அரசகுமார் எங்க ஸ்கூலோட தலைமை ஆசிரியர். ஒண்ணே கால் லட்ச ரூபாய் கவர்மெண்ட் சம்பளம் வாங்கிட்டு, ஸ்கூல கட் அடிச்சிட்டு சினிமாவுல நடிக்கிறாரு. பேமஸான சினிமா பாட்டுக்கு துணை நடிகைகளோட டான்ஸ் ஆடி, யூடியூப்ல போட் றாரு. அந்த யூடியூப் லிங்க்கை ஸ்டூடண்ட்ஸுக்கு அனுப்பி, ஷேர் பண்ணச் சொல்றாரு. லைக் பண்ணச் சொல்றாரு. ஸ்கூல் ப்ரேயர் மீட்டிங்லகூட மைக்கை பிடிச்சு சினிமா பாட்டு பாடுறாரு. இவரு கேப்டன் விஜயகாந்த் ரசிகர் வேற. விஜயகாந்த் இறந்த அன்னைக்கு ஸ்கூல்ல ஒரே அழுகை. நாள் முழுக்க சோகப் பாட்டா பாடிட்டு இருந்தாரு. மாரி செல்வராஜ் டைரக்ஷன்ல "பைசன்' படத்துல இப்ப நடிக்கிறாரு. சரியா சொல்லணும்னா அரசகுமார் ஒரு சினிமா பைத்தியம். பொதுவா ஸ்கூலுக்கு 10 மணிக்கு மேல.. பெரும்பாலும் 11 மணிக்குத்தான் வருவாரு. சினிமா ஆக்டிங்ல இந்த அளவுக்கு வெறி இருக்கிறதுனால, கூட வேலை பார்க்கிற டீச்சர்ஸ், ஸ்டூடண்ட்ஸ் அப்பு றம் பேரண்ட்ஸுன்னு எல்லாரும் அரசகுமாரை ஒரு மாதிரி வெறுத்துப்போயி பார்க்கிறாங்க.

tt

இதுக்கு முன்னால சிவகாசி கல்வி மாவட்ட அலுவலரா இருந்தாரு சிதம்பரநாதன். அவரு அந்த விஷயத்துல வீக்கானவரு. அவரோட ரொம்ப நெருக்கமா இருந்தாரு அரசகுமார். அப்ப குற்றாலத்துக்கு போயி லூட்டி அடிச்ச போட்டோ எல்லாம் வாட்ஸ்-ஆப்ல வந்துச்சு. முத்துராஜுங்கிற கணித ஆசிரியரோட உழைப்பூதியத்தை கொடுக்காம வேணும்னே பிரச்சனை பண்ணுனாரு அரசகுமார். ஒருகட்டத்துல ஜாதியைச் சொல்லி அரசகுமாரை முத்துராஜ் திட்டியதா பொய்யான கம்ப்ளைண்ட் வாங்கி, முத்துராஜை மிரட்டி மன்னிப்பு கடிதம் எல்லாம் வாங்கினாரு சிதம்பரநாதன். அந்த அளவுக்கு அரசகுமாருக்கு, சிதம்பரநாதன் சப்போர்ட் பண்ணுனாருன்னா அதுக்கு காரணம்.. தப்பான பழக்கம்தான்.

அரசகுமாருக்கு வேண்டிய இன்னொரு பெரிய அதிகாரி ஜெயமான ஒருத்தர். இவரு சென்னைல கல்வித்துறைல இணை இயக்குநரா இருக்காரு. அவருகூட துணை நடிகைகள பழகவிட்டு, அந்தச் செல்வாக்குல அரசகுமார் தப்பிச்சிடறாரு. முன்பு விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.வா இருந்தாரு இந்த ஜெயமானவர். அப்பவே கூட வேலை பார்க்கிற வீக்கானவங் கள ஊட்டிக்கெல்லாம் டூர் கூட்டிட்டுப் போவாரு அரசகுமார். ஜெயமானவருடனான அந்த நெருக்கத்தை இன்னைக்கு வரைக்கும் மெயின்டெயின் பண்ணுறாரு அரசகுமார். இது மட்டுமில்ல.. பள்ளிக்கு வராமலேயே வருகைப் பதிவேட்டில் வந்ததாகக் கையொப்பமிட்டது உள்ளிட்ட நெறய புகார் அவர் மேல இருக்கு''’என்றனர்.

ss

நாம் ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரசகுமாரிடம் பேசினோம்.

எந்த லீவுன்னாலும் லீவ் லெட்டர் கொடுத்துட்டு ப்ரொசீஜர்படி ரெஜிஸ்டர்ல பதிவு பண்ணிட்டு சனி, ஞாயிறுகள்ல மட்டும் தான் நடிக்கப் போவேன். "விருமாண்டி'ல வர்ற நடிகர் சண்முகராஜாவும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவரு நிகழ் நாடக மையம்னு வச்சிருக் காரு. முன்னால மதுரைல இருந்துச்சு. இப்ப சென்னைல இருக்கு. சனி, ஞாயிறுகள்ல அங்கு போவேன். கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவுல போவேன். ஆனைக்குட்டம் ஸ்கூல்ல மூணு வருஷமா ஒர்க் பண்ணுறேன். என் மேல புகார் சொல்லுறவங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குப் புரியல. ஒவ்வொரு வருஷமும் சரியா இந்த நேரத்துல ஏதாவது புகார் வந்துருது. பட்டியலின ஆசிரியர்ங்கிற ஜாதி பாகுபாடு கல்வித்துறைல ரொம்ப இருக்கு. சினிமா, யூடியூப்ங்கிறது என்னோட பெர்சனல். தலைமை ஆசிரியர்ங்கிற முறைல என்னோட மேலதிகாரி சிதம்பரநாதன்கூட பழகுனத தப்பா சொன்னா எப்படி? போட்டோ ஆதாரம் இருக்கா? சென்னைல கல்வித்துறை இணை இயக்குநரா இருக்கிற அவரும் நானும் மதுரை காமராஜர் யுனிவர்சிடில ஒண்ணா படிச்சோம். அவருக்கு நான் துணை நடிகைகள சப்ளை பண்ணுறேனா? இதெல்லாம் எனக்கு இருக்கிற செல்வாக்கா? இதைக் கேட்டால் மேப்படி குமாரே சிரிச்சிருவாரு. எப்பவாவது.. மேப்படி சாரு மெல்ல கற்போர்

பயிற்சி அளிக்கிற நிகழ்ச்சி நடத்த மதுரைக்கு வருவாரு. தமிழ்நாடு முழுக்க அந்தப் பயிற்சி அவரு தலைமைல நடக்கும். அப்படி வர்றப்ப விருதுநகர் மாவட்டத்துல இருந்து என்னைக் கூப்பிடுவாரு. ரெண்டுபேரும் பார்த்துக்குவோம். அவ்வளவு தான். இதே ஸ்கூல்ல உமாசங்கர்ங்கிற ஆசிரியர் வாராவாரம் கம்பன் கழகத்துல பேசுறதுக்கு போறாரு. ஜெயா டிவி, பிஹைண்ட் உட்ஸ்ல பேட்டி எல்லாம் கொடுக்கிறாரு. அதை தப்புன்னு யாரும் சொல்லல''’என்றவரிடம்... ‘ "நடிப்பா? தலைமை ஆசிரியர் பணியா? எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்?''’என்று கேட்டபோது, “ஆசிரியர் பணிதான் மொதல்ல. இதுதான் நிரந்தரம். இதுல மாற்றுக் கருத்தே இல்ல''’என்று ஒரே போடாகப் போட்டார்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரை தொடர்புகொண்டோம்.

"அந்த ஸ்கூல் டீச்சர்ஸ நேர்ல கூப்பிட்டு தனித்தனியா விசாரிச்சேன். அதுல ஒரு சில தகவல்கள் உண்மைன்னு தெரியவந்துச்சு. தலைமை ஆசிரியர் அரசகுமார்கிட்ட விளக்கம் கேட்டி ருக்கோம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யாங்கிறத தெரிஞ்சு நாங்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கணும். இன்னும் அவர் விளக்கம் கொடுக்கல. அவர் விளக்கம் தந்த பிறகு ஃபார்வேர்ட் பண்ணி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறதுக்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கு''’என்றார்.

தங்களது தலைமை ஆசிரியர் துணை நடிகைகளுடன் ஆட்டம் போடும் காட்சியை யூடியூபில் பார்க்கின்ற மாண வர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை எப்படியிருக்கும்? கல்வித்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் கிறதே?

th

nkn120425
இதையும் படியுங்கள்
Subscribe