ந்த அகராதியிலும் போடவில்லைதான். இருந்தாலும் காங்கிரஸ் என்றாலே கோஷ்டிப் பூசல் என்று நாம் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா பண்ணி புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி வந்தபிறகும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை.

தான் பதவியைவிட்டு இறங்கக் காரணமான சித்து மீது கடும் கோபத்திலிருக்கும் அம்ரீந்தர் சிங், சித்து பா.ஜ.க.விலிருந்து வந்து காங்கிரஸில் இணையலாம் என்றால், தான் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்குப் போய் இணையக்கூடாதா என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித் திருக்கிறார். அதன் பிள்ளையார் சுழியாக மோடியின் வலதுகரமும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவைச் சென்று சந்தித்துவந்திருக்கிறார்.

“"நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வுகாண வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவது தொடர்பாக அமித்ஷாவைச் சந்தித்தேன்''’ என தனது சந்திப்புக்கு சப்பைக்கட்டும் கட்டியிருக்கிறார்.

punjab

Advertisment

இது ஒருபுறமிருக்க, அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற கணக்கில், பஞ்சாப் அரசியலில் அம்மி கணக்காக அசையாமல் இருந்த அம்ரீந்தர் சிங்கை அங்குலம் அங்குலமாக அசைத்து ராஜினாமாவை நோக்கித் தள்ளிச்சென்ற சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

குரு கிரந்த் சாஹிப் நூலை அவமதிப்பு செய்த சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு நற்சான்று வழங்கிய காவல்துறை அதிகாரி இக்பால் பிரீத்சிங் சகோதாவுக்கு டி.ஜி.பி. பொறுப்பு வழங்கப் பட்டுள்ளதற்கும், ஏ.பி.எஸ். தியோலுக்கு அட்வகேட் ஜெனரல் பதவி வழங்கப்பட்டி ருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சித்து விளக்கமளித்துள்ளார்.

தேசிய அரசியலில் உள்ள ஒரு கட்சி, ஒரு தரப்புக்கு எப்போதும் மாற்றுத் தரப்பையும் கட்சியில் வைத்திருப்பதையே விரும்பும். முழுமையாக பஞ்சாப் காங்கிரஸை சித்துவின் கையில் அள்ளித்தராது. மாறாக, பஞ்சாப் காங்கிரஸின் முழு அதிகாரமும் தனது கையில் இருக்கவேண்டும் என சித்து விரும்புகிறார். அதில் பிறரது தலையீடு இருக் கக்கூடாது என்பது அவரது எதிர்பார்ப்பு என்கிறார்கள் சித்துவின் எதிர்பார்ப்பை அறிந்தவர்கள்.

பஞ்சாப் காங்கிரஸின் மற்றொரு தரப்போ, "சித்து வந்த வேலை முடிந்துவிட் டது. பஞ்சாப் காங்கிரஸை சிதைப்பதற் காகவே பா.ஜ.க.விலிருந்து சித்து அனுப்பப் பட்டார். அம்ரீந்தர் சிங் வெளியேறிய நிலையில் இன்னும் வேண்டிய சேதங்களை காங்கிரஸுக்குச் செய்துவிட்டு, தேர்தலுக்கு நெருக்கமாக வெளியேறுவார்' என்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபல் வீட்டுமுன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தியிருப்பது பலரது புருவங்களை உயர்த்தவைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வீட்டுமுன் காங்கிரசார் ஏன் போராட வேண்டும்?

பஞ்சாப் காங்கிரஸில் நிலவிவரும் அசாதாரணக் குழப்பங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த கபில்சிபல், “"பஞ்சாப் நிலவரங்கள் குறித்து கட்சிக் கூட்டங்களில் விவாதிக்கப் படவேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சியில் இப்போதைக்குத் தலைவர்களே இல்லை. எனவே இதுபோன்ற முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

எந்தவொரு நாட்டிலோ அல்லது அர சியல் கட்சியிலோ அதிகாரக் கட்டமைப்பில் தனிநபர் ஏகாதிபத்திய நடைமுறைக்கு இடம்கிடையாது. எனவே உங்களுடைய கருத்தை நாங்கள் கேட்பதுபோல் எங்க ளுடைய கருத்துக்கும் மதிப்பளியுங்கள். எங்களைப் பேச அனுமதியளியுங்கள்''’என்று கூறியிருந்தார். தலைமை குறித்த கபில்சிபலின் இந்தப் பேச்சுதான் கட்சியினரிடையே ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது. இதனால் தில்லியில் ஜோர் பாக் பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண் டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவகாரம் பஞ்சாப் காங்கிரஸோடு மட்டும் நின்றுவிடவில்லை, சத்தீஸ்கரில் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற அடிப்படையில் பூபேஷ் பகேல் பதவியேற்றார். அவருடைய காலகட்டம் முடிந்தநிலையில் டி.எஸ். சிங் தியோ பதவியேற்கவேண்டும். அதற்கு பூபேஷ் உடன்படாத நிலையில் விவ காரம் எழுந்தது. இந்நிலையில் பூபேஷுக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் தில்லி சென்றுள்ளனர். சத்தீஸ்கர் விவகாரத் தை எப்படி சமாளிப்பது என்றும் தலைமைக் குத் தெரியவில்லை. உத்தரபிரதேச காங்கிரஸில் பிரபல முகமாக அறியப்பட்ட ஜிதின் பிரசாத் சில மாதங்களுக்குமுன் பா.ஜ.க.வுக்கு அணி தாவியுள்ளார். கேரளாவில் இரண்டாவது முறையாக கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி யமைத்துள்ள நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த ரதிகுமார், கே.பி. அனில்குமார், பி.எஸ். பிரசாந்த் என பலரும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கும் மேலாகவே காங்கிரஸ் கட்சி தலைவர் யாரு மில்லாமலே தொடர்ந்துவருகிறது. இடைக் காலத் தலைவராக இருந்த சோனியா விலகிய பின்பும் தலைவர் இல்லாமலே காங்கிரஸ் நீடிக்கிறது. தலைவர் பொறுப்பில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லையெனில், உரிய நபரைத் தேர்வுசெய்து தலைமைப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும். “இல்லையெனில் முன்பொரு காலத்தில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருந்தது. அது இந்தியாவுக்கு பல பிரதமர் களை அளித்தது'”என காலம் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதிவிடும்.