டி.எம்.கே. பைல்ஸ் ஒஒ பெரிய பெட்டியுடன் ஆளுநரை சந்திக்க சென்றார் மா.தலைவர். அந்தப் பெட்டியில் என்ன இருந்தது?
2வது பைல்ஸ் வெளியாவதற்கு முன்பு தி.மு.க.வை இதற்குமேல் அடிக்காதீங்கன்னு டெல்லியிலிருந்து சொல்லிட்டாங்க. அது என்ன லாபி நடந்தது என்று அப்ப தெரியாது. ஆனால் இவர் (மா.தலைவர்) அந்த கிரிப்பை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு ஆளுநரிடம் போய் கொடுத்துவிட்டு வருவோம் என்று போனார். அது வெறும் பெட்டிதான். அதில் ஒன்றும் கிடையாது.
நாங்க புகைப்படத்துல பார்க்கும்போது பெரிய பெட்டியா இருக்கே. நிறைய புகார்கள், ஆதாரங்கள் இருக்கும் என்று நினைத்தோம். அதில் ஒன்றும் இல்லையா?
தூக்கிட்டுப்போனதை நான் பார்த்தேன். அவ்வளவு வெயிட் இருந்தா அப்படி தூக்க முடியாது. வெறும் பெட்டிதான், அசால்டா தூக்கிட்டுப்போய் வைச்சாங்க. ஃபைல்கள் இருந்தால் பெட்டியை திறந்து காட்டி வெளியில் அடுக்க வேண்டியதுதானே. at least 1000 a4 sheet-ஆவது வைச்சிருக்கலாம்.
பெட்டியை திறந்து பார்த்து ஆளுநர் ஏமாந்திருப்பார்?
ஆளுநருக்கு வெறும் பெட்டி. மாநிலத் தலைவருக்கு பணப்பெட்டி.
உங்கள் எக்ஸ் பக்கத்தில் "தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா? மா.தலைவர் மீது நடவடிக்கை ஏன் இல்லை? கவுண்டர் லாபியா? நயங்.சேகர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?'' என பதிவிட்டிருந்தீர்களே? பா.ஜ.க.வில் சமூகம் பார்க்கிறார்களா?
முன்பெல்லாம் பா.ஜ.க. என்றால் பிராமணர்கள் கட்சி. உயர் த

முன்பெல்லாம் பா.ஜ.க. என்றால் பிராமணர்கள் கட்சி. உயர் தட்டு மக்கள் மட்டும்தான் இருப்பார்கள். இல.கணேசன் ஆளுநர் ஆவது வரைக்கும், மண்டல தலைவர்கள் கமலாலயத்திற்குள் வரக்கூடாது. அதை உடைக்கணும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் அது சிரமம். என்னை டி.எம்.கே. ஸ்லீப்பர் செல் என்கிறீர்கள். எஸ்.வி.சேகர் எல்லாத்தையும் கிழிகிழின்னு கிழிக்கிறார். ஏன் அவர் மேல் நடவடிக்கை இல்லை. கலைஞர் 100 நிகழ்ச்சி மேடையில் ஏறி பேசியிருக்கிறார். பா.ஜ.க. 40 தொகுதியிலும் தோற்றதற்கு தனது வீட்டு முன்பு வெடி வெடித்துக் கொண்டாடுகிறார். ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை. Party discipline என சொல்றவங்க எல்லார் மேலேயும் நடவடிக்கை எடுங்க.
பணம் கையாடல் பண்ணியவர்கள், தேர்தல் நேரத்தில் பணம் வசூல் செய்தவர்கள், கட்சிப் பணத்தை அமுக்கியவர்கள், பெண்கள் விசயத்தில் சிக்கியவர்கள் இருக்கிறார்கள். இந்த மந்திரிகிட்ட கூப்பிட்டு போறேன், அந்த மந்திரிகிட்ட கூப்பிட்டு போறேன், கையெழுத்து வாங்கித் தர்றேன், இந்த வாரியம் வாங்கித் தர்றேன், அந்த வாரியம் வாங்கித் தர்றேன் எனச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். நமீதா புருஷன்கிட்டேயே ஆட்டைய போட்டவர்கள் இருக்கிறார்கள். ரவுடிகளுக்கு பதவி கொடுக்குறீங்க. அவர்கள் குண்டாஸில் போயிட்டு வந்தாக்கூட சேர்த்துக்கொள்றீங்க. நாங்க என்ன மட்டமா போயிட்டோம். நியாயம், ஒழுக்கம் என இருந்தால் எல்லார் மேலேயும் நடவடிக்கை எடுங்க. கேசவ விநாயகத்திற்கு வேண்டியவன் என்றால் உன்னால (மா.தலைவர்) தொட முடியாது. உன் கீழ இருக்கிறதால ஈஸியா மிதிக்கிறத்துக்கு நான்தான் கிடைச்சனா.
மாநில தலைவரை நம்பி கட்சியில சேர்ந்ததைவிட கேசவ விநாயகத்தை நம்பி கட்சியில் சேர்ந்திருக்கணும் என்று சொல்ல வர்றீங்களா?
ஆமாம். 2வது முறை கட்சிக்குள் வந்தப்ப கேசவவிநாயகம் என்னிடம் பேசினார். "அவன் (மாநில தலைவர்) மோசமானவன். அவன நம்பாத. போன முறை நம்பி ஏமாந்த. உன்ன மாதிரி ஒரு ஆள் என்கிட்ட இருந் தால் இந்த ஊரையே நான் ஆளுவேன். ஒரு தேவன் என்கூட இருக்கணும். ஒரு கூர்மையான கத்தி என்கிட்ட இருக்கணும், நாளைக்கு என்கிட்ட வந்துவிடு, உனக்கு என்ன வேணுமோ நான் செய்யுறேன். நடந்ததை நீயும் மறந்துவிடு, நானும் மறந்துவிடுகிறேன்'' எனப் பேசினார். ஆறுமாதம் சஸ்பெண்ட் என சொன்ன மாநில தலைவர், 13 மாதம் வரை என்னை கட்சியில் சேர்க்கவில்லை. ஆகையால் கேசவவிநாயகம் சொல்வது சரிதான் என இருந்தேன். அ.தி.மு.க.வுக்கு போய்விடுவார் என்று செய்தி பரவியதும் திடீரென கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள்.
கட்சியில் சேர்த்த 3வது நாள் திருச்சிக்கு நடைபயணம் வந்தார் மா.தலைவர். அவரை பார்க்க சென்றபோது, இங்க இருக்கிறவங்க ஏதாவது சொல்லுவாங்க. யாரையும் நம்பாதீங்க. நான் இருக்கேன். கைவிட மாட்டேன். உங்கள எந்த இடத்திற்கு கொண்டுபோக கட்சியில சேர்த்தேனோ அந்த இடத்திற்கு நான் கொண்டுபோவேன் என்று சொன்னவுடன்தான் கேசவ விநாயகம் பக்கம் போகாமல் இவரை நம்பியே இருந்தேன்.
சென்சார் போர்டில் உள்ள அனைத்து பதவியையும் போட்டது கேசவ விநாயகம். சென்ட்ரல், கமிஷன், வாரியம், சேர்மன் எல்லாமே கேசவவிநாயகம்தான். இந்த ஆளால (மாநில தலைவர்) ஒரு புல்லு பூண்டு கூட எடுக்க முடியாது.
மாநில தலைவர் நினைச்சா அந்தப் பதவியில யாரையும் உட்கார வைக்க முடியாதா?
அவர் ரொம்ப சுயநலமாக இருக்கிறார். தான் வாழ்ந்தால் போதும், தனக்கு கிடைத்தால் போதும் என்று இருக்கிறார். கேபினெட் மினிஸ்டர் பதவி வேண்டாம் என்கிற அளவுக்கு இவர் என்ன நல்லவரா? கேபினெட்டில் இருப்பதைவிட இங்கு பத்து மடங்கு அதிகமாக சம்பாதித் துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஙஞசஊவ-ஙஒசஉஊஉ. சுகம் கண்டுவிட்டார். பணத்துக்கு அடிமையாகி விட்டார். பணத்துக்காக அலைகிறார்.
மாநில தலைவர் பதவிக்கு போட்டி வந்து விட்டது என தமிழிசையை நினைக்கிறாரா?
அவர் வெளியில் காண்பிக்க மாட்டார். டெல்லியில் இருந்து கூப்பிட்டு, தமிழிசையை கண்டிச்சிட் டோம். நீங்க பாத்து நடந்து கொள்ளுங்க என்றதும், அய்யய்யோ எனக்கு என்னங்க இருக்கு. எனக்கு அவுங்க அக்காங்க, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லீங்க. நானே அவுங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு, தமிழிசை வீட்டுக்கு போய் அவரை பார்த்து சால்வையை போட்டார்.
உங்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னபோது மாநில தலைவர் அதனை எதிர்க்க வில்லையா?
எதிர்க்கவில்லை. கல்யாணராமனை நீக்கணும் என்று சொல்கிறார். அதற்கு தமிழிசை, சூர்யாவும்தான் என்னை தாக்கி பேசுகிறார் என்றதும், அங்கு இருப்பவர்கள் எல்லோர் மேலேயும் நடவடிக்கை எடுங்கன்னு சொல்லியுள்ளனர். சரி நீக்கிவிடுவோம் என்று இந்த ஆள் (மாநில தலைவர்) கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டார்.
ஆனால் அவர் (மா.த.) பிளே பண்ணியது என்னவென்றால், முதல் தடவை கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்க்கவிடாதது கேசவவிநாயகம்தான் என்று சொன்னார். இப்போது நீக்கத்துக்கு தமிழிசைதான் காரணம் என்கிறார்.
நீக்கிய பிறகு மாநிலத் தலைவரிடம் பேசினீர்களா?
போன் பண்றாரு, அப்புறம் எப்படி போனை எடுக்காம இருக்க முடியும். அன்று எனக்கு பிறந்த நாள். அன்றைக்கு நீக்கியுள்ளனர். வேற எந்த நாள்ல இந்த நாய்ங்க பதவியில் இருந்து நீக்கியிருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என்ன பத்து பைசாவுக்கு தேறாத பதவி. கட்சியே குப்பைத் தொட்டியில கிடக்கு. இந்த பதவியை வைச்சிகிட்டு விசிட்டிங் கார்டு காட்டினா ஒரு ரூபாய் கொடுப்பானா எவனாவது.
மாநில தலைவர் சம்பாதித்துவிட்டார் என்கிறீர்களே...
அவர் சம்பாதிப்பார். மாநில தலைவர் பதவியும், நான் இருந்த பதவியும் ஒன்றா. காலையில போறேன், அவரை பார்க்கிறேன், உங்களுக்கு பிறந்தநாள் என டிரஸ் கொடுக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்போறாங்கன்னு எனக்கு டெல்லியில் இருந்து தகவல் வருகிறது எனச் சொன்னேன். நான் மாநிலத் தலைவர், என்னை மீறி என்ன நடக்கும் அது நடக்காது விடுங்க' என்று சொன்னார். அடுத்த நாலு மணி நேரத்தில் லெட்டர் வருது. அதனால்தான் சொல்கிறேன். கூடவே வைத்திருந்து கழுத்தறுப்பது என்பதுதான் இவரது வேலையே.
இவர் என்ன நினைச்சாரு, தமிழிசையை கை காட்டி விடுவோம். இவன் வெளியே இருந்து தமிழிசையை திட்டுவான், நாம உள்ளே இருந்து குளிர் காய்வோம் என்று நினைத்தார். எஸ்.வி.சேகர் சொன்னதுதான் நியாபகம் வருது.
(தொடரும்)
நேர்காணல்: வே.ராஜவேல்
தொகுப்பு: தாஸ்